புதன், 13 நவம்பர், 2024

புனித கன்னி மரியாள் கோவிலில் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்ட திருவிழா (The Presentation of Blessed Virgin Mary in the temple)

இன்று நவம்பர் மாதம் 21 ஆம் நாள். இந்த நாளைத் திரு அவையானது புனிதக் கன்னி மரியாள் கோவிலில் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்ட திருவிழாவாகக் கொண்டாடி மகிழ்கின்றது.

விவிலியத்தில் நற்செய்தி நூல்களிலோ, அல்லது பவுலடியார் கடிதங்களிலோ அல்லது வேறு எந்த நூலிலோ இந்த விழாவினைக் குறித்த குறிப்புகள் எதுவும் இல்லை. ஆனால் ஆறாம் நூற்றாண்டில் இருந்தே, இவ்விழா கிழக்குத் திரு அவைகளில் கொண்டாடப்பட்டதாக திரு அவை வரலாறு கூறுகின்றது. அப்படி என்றால் இவ்விழாவிற்கான அடிப்படை என்ன என்று பார்ப்போம்.   

புதிய ஏற்பாட்டு நூல்களில் குறிப்புகள் இல்லை என்றாலும் கூட  யிழஉசலிhயட வநஒவ என்று சொல்லப்படும் திருமுறை பட்டியலைச் சேராத நூல்களான யாக்கோபு நற்செய்தி மற்றும் மரியாளின் பிறப்பு நற்செய்தி என்ற நூல்களில் அன்னை மரியாள் எருசலேம் கோவிலில் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்ட நிகழ்வானது குறிப்பிடப்பட்டுள்ளது.

மரியாவின் பெற்றோராகிய புனித சுவக்கின் மற்றும் புனித அன்னா இருவரும் முதிர் வயது வரை குழந்தைப் பேறு இல்லாமல் இருந்தனர் ஆயினும் நம்பிக்கையோடு இறைவனிடம் மன்றாடி வந்தனர். வானதூதர் வழியாக மரியாளின் பிறப்பு இவர்களுக்கு அறிவிக்கப்பட்டது மரியாளும் பிறந்தார். இதற்கு நன்றியாக குழந்தை மரியாவை எருசலேம் ஆலயத்திற்கு அழைத்துச் சென்று, அங்கு அவரை கடவுளுக்கு காணிக்கை ஆக்கினார்கள். அதன் பிறகு மரியாள் தனது 12-வது வயது வரை ஆலயத்தில் இருந்தார் என்று யாக்கோபு எழுதியுள்ளார்.

மரியாளின் மூன்றாம் வயதில் இந்த நிகழ்வு நடந்ததாகவும் மரியாள் ஆலயத்திலேயே கல்வி கற்றதாகவும் இறைவனின் அன்னையாகும் நிலைக்கு அவர் அங்கு தன்னை தயாரித்ததாகவும் மரியாவின் பிறப்பு நற்செய்தி என்ற புத்தகத்தில்  குறிப்பிடப் பட்டுள்ளது.

பைசான்டைன் பேரரசர் முதலாம் ஜஸ்டின் கிபி 543 ஆம் ஆண்டு எருசலேம் ஆலயத்திற்கு அருகில் ஒரு ஆலயத்தை எழுப்பி அதை புனித கன்னி மரியாளுக்கு அர்ப்பணித்தார். அது முதல் இவ்விழா கிழக்கு திரு அவையில் கொண்டாடப்பட்டு வருகின்றது.

அதன் தொடர்ச்சியாக ஒன்பதாம் நூற்றாண்டு முதலே மேற்கு திருஅவையிலும், குறிப்பாக இத்தாலியின் தெற்கு பகுதிகளில் கொண்டாடப்பட்டதோடு, 1585 ஆம் ஆண்டு திருத்தந்தை ஐந்தாம் சிக்ஸ்டஸ் இவ்விழாவை உரோமை திருவழிபாட்டு நாள்காட்டில் சேர்த்தார்.

அன்னை மரியாள் கோவிலில் அர்ப்பணிக்கப்பட்ட விழாவின் வரலாற்றினை பார்த்தோம். விவிலியத்தில் நேரடியாக குறிப்பிடப்படவில்லை என்றாலும் அன்னை மரியாளின் சீடத்துவ வாழ்வும், பணியும் அவரது அர்ப்பணத்திற்கு வெள்ளிடை மலை போல சான்று பகர்கின்றன. 

பெரும்பாலும் நமது தாத்தா பாட்டிகளின் பிறந்தநாள் யாருக்கும் தெரிவதில்லை. ஆயினும் அவர்கள் கொடுத்த அன்பையும், தியாகத்தையும் நாம் என்றும் நினைவு கூறுகிறோம் அல்லவா. திருச்சபையின் மரபார்ந்த விழாக்கள் விலியத்தில் எழுதப்படவில்லை என்றாலும், அவை சுட்டிக் காட்டும் வாழ்வியல் மதிப்பீடுகள் உன்னதமானவையே. 

அன்னை மரியாள் கோவிலில் காணிக்கையாக ஒப்பு கொடுக்கப்பட்ட விழாவை கொண்டாடும் நாம் அன்றாட வாழ்வில் செய்ய வேண்டியவை என்ன என்று பார்ப்போம்.

1. இன்றைய நாளினை உலக அடைபட்ட துறவு வாழ்வு தினமாக திருச்சபை கொண்டாடுகின்றது. வாழ்நாள் முழுவதும் இறைவனோடு ஒன்றித்த தியான வாழ்வால் திருச்சபைக்கு ஜெப ஆற்றல் சேர்க்கின்ற துறவியரை நாமும் பின்பற்றலாம். அன்னை மரியாள் அனைத்தையும் தன் இதயத்தில் தியானித்து வந்தாள் என்று விவிலியம் சொல்கிறது. அன்றாடம் நம்மை அலைக்கழிக்கும் காரியங்கள் ஏராளம் ஏராளம். செய்கின்ற தொழில் சார்ந்து வருகின்ற அழுத்தங்கள் போதாது என்று அலைபேசி, அரசியல், சினிமா போன்ற காரியங்களில் நம்மை நாமே சிதற விடுகின்றோம். நமக்குள் இருக்கும் உள்ளம் என்னும் ஆலயத்தை தரிசிக்க மறந்து விடுகின்றோம். ஆகவே அவ்வப்போது புறம் சார்ந்த அனைத்தையும் அடைத்து விட்டு, உள்ளம் என்றும் கோவிலுக்குள் சென்று, அமைதியில் உறையும் இறையை தரிசிப்போம். இறை தரும் இளைப்பாறுதலை சுவைப்போம். வழிகாட்டுதல்களைக் கேட்போம். காபி பிரேக் போல அமைதி பிரேக் இன்றைய காலகட்டத்தில் அத்தியாவசியமாகிறது.

2. இரண்டாவது அன்னை மரியாளின் 'ஆம்' நமதாகட்டும். இது எங்கனம் ஆகும் என்று கப்ரியல் வான தூதரிடம் கேட்ட அன்னை 'இறைவனால் ஆகாதது ஏதுமில்லை' என்று அவர் சொல்ல கேட்டதும் 'ஆம்! நான் ஆண்டவரின் அடிமை! உன் சொற்படியே எனக்கு நிகழட்டும்' என்று பதிலளித்தார். அதன் பிறகு அவரது வாழ்வு முழுவதும் இல்லை என்பதே இல்லை என்று சொல்லும் அளவிற்கு இறை விருப்பத்தை நிறைவேற்றினார். சிறியதும் பெரியதுமாக அன்றாடம் நாம் எத்தனையோ முடிவுகளை எடுக்கின்றோம். அவற்றில் இறை விருப்பத்தை நாம் நிறைவேற்றுகின்றோமா என்று சிந்திப்போம். மனிதர்களைப் பிரிக்கும், வெறுக்கும், தீய சூழல் நம்மை அணுக அனுமதியாது தாழ்ச்சியும், அன்பும், உதவி செய்யும் பண்பும் கொண்டவர்களாக வாழ நமக்கு நாமே நினைவூட்டுவோம்.

3. அன்னை மரியாளின் நம்பிக்கை நமதாகட்டும். நமது குடும்ப சூழலிலும் நண்பர்கள் வட்டத்திலும் இணைந்து ஜெபிக்கின்ற பண்பினை ஊக்குவிக்கபவர்களாக மாறுவது முக்கியம். மரபார்ந்த முறையில் மனப்பாடமாக ஒப்புவிப்பது மட்டுமே ஜெபம் அல்ல. அது இளைய தலைமுறையினரை விலகிப் போக செய்து விடும். ஆகவே படைப்பூக்கும் நிறைந்த ஜெபங்களை நாமே உருவாக்கிக் கொள்ளலாம். அருகாமையில் இருக்கும் ஆன்மீக இடங்களுக்கு நடைபயணமாக செல்லலாம். குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு காரணமாக இருக்கின்ற ஒவ்வொரு உறுப்பினரின் நற்பண்புகளை குறிப்பிட்டு அதற்காக இறைவனுக்கு நன்றி சொல்லலாம். 

4. நம்மைச் சுற்றிலும் நற்செய்தி மதிப்பீடுகளை வளர்த்தெடுப்பது. மனித உறவுகளிலும் செய்யும் தொழிலிலும் உண்மை நேர்மை நீதி உணர்வு கொண்டிருத்தல். மனசாட்சி என்னும் வெளிச்சத்தை மங்க விடாது பேணுதல். அடையும் வெற்றியில் தாழ்ச்சியோடு இருத்தல், வீழ்ச்சி அடைந்தோரை தீர்ப்பிடாது இரக்கம் காட்டுதல், கரம் கொடுத்து உதவுதல், சினத்தைப் பேணாது, பெருந்தன்மையோடு மன்னித்து கடந்து செல்லுதல்

5. நம்பிக்கை வளர்ச்சிக்கான பயிற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுதல். வாய்ப்புகள் கிடைக்கும் பொழுதெல்லாம் விவிலிய வகுப்புகள் இறையியல் வகுப்புகளில் கலந்து கொள்ளுதல், விவிலிய வாசிப்பு, இறையியல் புத்தகங்கள் வாசிப்பு போன்றவற்றை அன்றாட பழக்கமாக்குதல். கற்பு, ஏழ்மை , கீழ்ப்படிதல் என்னும் வார்த்தை பாடுகள் நம்மை சிறைப் பிடிப்பவை அல்ல நமக்கு சிறகுகள் தருபவை என்பதை உணர்ந்து, அர்ப்பண வாழ்வுக்காக இளையோரை உற்சாகப்படுத்துதல், துறவற பயிற்சி இல்லங்களுக்கு ஆன்மீக, பொருளாதார உதவிகளை தாராளமாகச் செய்தல். 

6. அன்னையின் கரம் பிடித்து நடத்தல்: ஜெபமாலை, உத்தரியம், திரு உருவம் பதித்த மோதிரம் அல்லது கை காப்பு என்று ஏதாவது ஒன்றின் மூலமாக அன்னை மரியாளின் உடன் இருப்பை நாம் எப்போதும் உணர வேண்டும். ஏனென்றால் அவர் தான் நமக்கு வாழ்க்கை என்னும் நெடுஞ்சாலையில் நாம் காணும் ளுழுளு என்னும் ஆபத்து கால உதவி. உண்மையான சீடர் நம்பிக்கை சோதிக்கப்படும் போதும், புடம் போடப்படும் போதும் உறுதியாக இறைவனின் நம்பிக்கை கொள்பவர். அதற்குரிய முதல் எடுத்துக்காட்டு மட்டுமல்ல. நமக்கான வழிகாட்டியும் கூட. 

அனைவருக்கும் அன்னை மரியாள் கோவிலில் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்ட திருவிழா வாழ்த்துக்களையும் ஜெபங்களையும் உரித்தாக்கி கொள்கிறேன்! நன்றி


சனி, 9 நவம்பர், 2024

Ricordi di Matera: Amicizia, Fede e Fraternità


Quando ripenso agli anni trascorsi a Roma per il mio licenza in diritto canonico, tra il 2014 e il 2017, il mio cuore si riempie di gratitudine per il calore e l’accoglienza che ho trovato a Matera. Durante le vacanze di Natale, Pasqua e l’estate, passavo quel tempo presso la parrocchia di Nostra Signora Addolorata, dove mi sentivo sempre accolto e amato dalla comunità parrocchiale e dal parroco, Don Michele.

Don Michele mi ha trattato come un fratello, nonostante le nostre differenze di nazionalità: io indiano, lui italiano. Il suo affetto sincero è stato per me una benedizione, specialmente in un momento difficile della mia vita. Dopo essere tornato dalla missione in Indonesia, ho attraversato un periodo di incertezza e difficoltà, ma Don Michele mi ha aperto le porte della sua parrocchia e del suo cuore. Mi ha dato rifugio per quattro mesi, fino a quando ho potuto tornare alla mia comunità religiosa a San Ferdinando di Puglia.

Durante quel tempo, la generosità della gente di Matera ha continuato a stupirmi. I collaboratori parrocchiali e i giovani mi hanno fatto sentire davvero a casa, facendomi scoprire le bellezze della città e accompagnandomi in momenti di gioia e fraternità. Mi portavano a visitare i Sassi di Matera, mi accompagnavano nei ristoranti locali e passeggiavamo insieme per la città. Ho avuto anche l’opportunità di partecipare a visite domiciliari, incontrare gli anziani e i malati: esperienze che mi hanno insegnato il valore della prossimità e del servizio.

Ora che vivo a Roma come viceparroco e consigliere dell’Ordine della Madre di Dio, spesso mi tornano in mente quei giorni. Matera non è stata solo un rifugio, ma un luogo dove ho trovato una famiglia spirituale e amici veri. Mi hanno mostrato cosa significa essere Chiesa: una comunità che accoglie, sostiene e ama senza riserve.

Questi momenti rimangono con me, e li porto nel mio cuore come fonte di ispirazione per il mio servizio pastorale. Il calore della comunità di Matera mi ricorda ogni giorno che la forza della Chiesa si costruisce nelle relazioni e nella solidarietà. Spero di poter restituire, nel mio ministero, almeno un po’ di quell’amore ricevuto, continuando a servire con cuore aperto e disponibile.

Matera sarà sempre una parte importante della mia vita, un simbolo di fede, speranza e amore che mi accompagnerà sempre.