இன்றைய தேதியில் தமிழ்நாடு கண்ட தன்னிகரில்லாதத் தலைவர் யார் என்று கேட்டால் கலைஞர் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்வேன்.
தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் அவரது அறிவாலும், ஆளுமையாலும், ஓய்வறியாத உழைப்பாலும் அவர் ஆற்றியிருக்கும் பங்களிப்புடன் ஒரு சதவிகிதம் கூட ஒப்பிடுவதற்கு எந்தத் தலைவரும் இல்லை! காமராஜரையும் சேர்த்தே இந்த ஒப்பீடு என்பதையும் நினைவுபடுத்திக்கொள்கிறேன்.
கொஞ்சம் கூட இது மிகைப்படுத்தப்பட்டக் கருத்து அல்ல. மிகுந்த வணக்கத்திற்கும், அன்பிற்கும், மரியாதைக்கும் உரிய ஒரு மாபெரும் தலைவருக்கு இங்கு நேர்ந்திருக்கும் அநீதியான வெறுப்பும், குற்றச்சாட்டுக்களும் நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு கூட கிடைக்கவில்லை என்பதில்தான் கலைஞர் எத்தகைய எதிரிகளுடன் சண்டை செய்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
யாருக்காவது மாற்றுக்கருத்து இருந்தால் தவறில்லை. எந்த ஒரு சிறு கட்டுரையாலும் அவரு 70 ஆண்டு நீண்ட நெடிய பொதுவாழ்வின் மகத்துவத்தை சொல்லிவிட முடியாது. ஒரு பெருங்கடலின் சிறுதுளியாக இருந்தாலும் நிறைய வாசிக்க நேரமில்லாமல் வாட்சப், பேஸ்புக்கில் அறிவுப்பணி செய்துகொண்டிருப்பவர்கள் எழுத்தாளர் சரவணக் கார்த்திக்கேயன் அவர்கள் எழுதிய கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி இந்தக் கட்டுரையை மட்டுமாவது வாசித்துவிட்டு உங்கள் கருத்தைச் சரிபடுத்திக் கொள்ளவும். கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக