கறுப்புப் பணத்தைப் பிடிக்கப்போறேன்னு கௌம்பி பெரிய பெரிய பணமான ஆயிரம், ஐநூறு தாள்களை எல்லாம் பிடிங்கிட்டு, கலர் கலரா 2000 நோட்டு அடிச்சி கொடுத்து ஒரு ட்விஸ்ட் வச்சாங்க பாருங்க! வரலாற்றின் சுவர்களில் கறிக்கொட்டையால் எழுதப்பட வேண்டிய அவமானம். காந்தி மகான் கண்ட கண்ணிய பூமியிதுன்னுதான் நமக்கு சொல்லிக்கொடுத்தாங்க! அப்படியே உல்டாவா அவரைக் கொன்ன கோட்சேவுக்கு கோவில் கட்டிட்டாங்க! மாட்டுக்கறி, மூத்திரம், சாணம் பாகிஸ்தான், தேசத் துரோகம், சீனா இப்படி உணர்ச்சியத் தூண்டித் தூண்டியே ஜாலியா பாயிங்களோட பக்ரைன் உட்பட 60 நாடுகளில் போயி அது-இது-எது மாதிரியான படத்துணுக்குகளில் பெர்பாமன்ஸ் பண்ணிட்டு வந்துட்டார் நம்ம ஜீ. கொரானாவால 8500 கோடிக்கு வாங்குன விமான டயரில் வச்ச லெமன் இன்னும் நசுங்காமலே இருக்கு. சோகத்துல அந்து ஆளு தாடி வச்சிக்கிட்டு அலையுறாரு. அறச்சினத்துல பொங்கி நம்ம மீடியா காரங்க ராகுல் காந்திய பிடிச்சி கேட்டாங்க பாருங்க ஒரு கேள்வி: டிராக்டருக்கு எதுக்கு குசன் வச்சீங்க?
புதன், 14 அக்டோபர், 2020
கொஞ்சம் அரசியல் பேசலாமென்று...
ஒவ்வொரு நாளும் எத்தனை பிரச்சனைகள் வந்து நம் தலைமேல் விடிகின்றன. யோசித்துப் பாருங்கள்! ம்! பெருமூச்சு விடுவீர்கள். கடந்த பத்தாண்டுகளாகவே நம் இந்திய அரசியல் நிலவரம் ஒரே கலவரமாகவே (களேபரம்?) இருக்கிறது. காங்கிரஸின் கடைசி ஆண்டுகளில் தொடங்கி இன்று வரை ஒரு டைம்-லேப்ஸ் வீடியோ செய்தால் எத்தனை எத்தனை கன்டென்டுகள் கிட்டும்! ஊழல்-ஊழல் என்று அன்னா கசாரே போட்ட கூச்சலில் ஆட்சிக் கட்டிலுக்கு காவி நிறமடிக்கப்பட்டது. கமிஷன் முடிந்ததும் கசாரே கரை ஒதுங்கிவிட்டார். கூடச் சேர்ந்து கூவிய கெசுரிவால் தலைநகரின் தலைவரானார். 2002 இல் நடந்த குஜராத் கலவத்தின் மோடி மாடலை 2020 இல் டில்லியில் பரிசோதித்துப் பார்த்த நல்லவர். உத்திரபிரதேச பூர்வக்குடிச் சிறுமி கழுத்தெலும்பு முறிக்கப்பட்டு, நாக்கு அறுக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்டு, பெற்றோருக்கு உடலைக்கூடக் காட்டாமல் உ.பி. அரசு ஏவலர்களால் எரிக்கப்பட்ட நிலையில், ஆறுதல் சொல்லப்போன காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு "இதை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்" என்று அறிவுரை கூறுகிறார்.
காய்ச்சலா? தலைவலியா? எயிட்ஸா? கொரோனாவா? இருக்கவே இருக்கு சர்வரோக நிவாரணி மாட்டு மூத்திரம் என்று உலக அரங்கில் இந்தியான்னா ரெண்டு கொம்பாக்கும் என்று மாடு தட்டி அறிவித்தது இந்த அரசு. அது மட்டுமா? சாட்டிலைட்டில் பிரச்சனை என்று சர்வதேசமும் சஞ்சலமடைந்தாலும் நாம் பாபா ராம் தேவின் கோமணாசனா பொசிசனில் அமர்ந்து சளைக்காமல் சொன்னோம் 'சாணியே மருந்து?. கதிர்வீச்சு என்றால் காளைச்சாணி. கடலுக்கு அந்தப் பக்கம் கோமாதாவின் கறியை ஏற்றுமதி செய்து காசுபார்த்துவிட்டு, உள்ளுர் காரனின் அடுப்பங்கரையில் மாட்டுக்கறி இருந்தது என்று சொல்லி அவனை இழுத்து தெருவில் போட்டு அடித்துக்கொன்றார்கள். அதன் பிறகு இறைச்சிக்கு நடத்தப்பட்ட டி.என்.ஏ பரிசோதனையில் அது அந்தக் கறி "மே..மே.." என்று கத்தியது. அடப்பாவிகளா!
தொடரும்...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக