கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு நவம்பர் 2 ஆம் நாள் மிக முக்கியமான நாள்.
அனைத்து ஆன்மாக்களின் தினமாக அனுசரிக்கப்படும் இன்று, இறந்து போனவர்கள் இறைவனின் அமைதியில் இளைப்பாற வேண்டி வழிபாடுகள், செபங்கள் நடத்தப்படுகின்றன. கல்லறைத் தோட்டங்களில் வளர்ந்திருக்கும் புல், பூண்டுகளை அகற்றி, பூக்கள், ஊதுவத்திகள், மெழுகுவர்த்திகள் ஏற்றி, தங்கள் பிரியமானவர்களை நினைத்து, நினைவோடைகளில் நீந்தி, கண்கள் பனிக்க கடவுளை நோக்கி செபிக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான நாள்.
பெருமை உடைத்துஇவ் வுலகு '
என்னும் திருக்குறளுக்கு கலைஞர் 'இந்த உலகமானது நேற்று உயிருடன் இருந்தவரை இன்று இல்லாமல் செய்துவிட்டோம் என்னும் அகந்தையை பெருமையாகக் கொண்டதாகும் என்று விளக்கம் தருகிறார்'.
சுடர்விடும் மெழுகாக ஒளிர்ந்து, காலத்தில் கரைந்து போன அனைத்து முன்னோர்களுக்கும் நன்றியும், வணக்கமும்! வாழ்வு நிறையாது வழிப்பயணத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டவர்களும் அமைதியில் உறங்கட்டும்! இழப்பின் வெற்றிடத்தில் இங்கே தனித்து விடப்பட்டவர்கள் ஆறுதல் பெற இறைவனை வேண்டுகிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக