நிறுவனம் : அரெட்ஸ்
இடம் : கரூர் மாவட்டம்
நாள் : 19-09-10 முதல் 03-10-10 முடிய
வழிகாட்டி : அருள்பணி. டைனிசியஸ்
பங்கேற்பு : இரண்டாமாண்டு மாணவர்கள்
அறிக்கை தயாரிப்பு : ம. ஆன்றனி பிரான்சிஸ்
1. முதல் நாள் (19-09-10)
2. பணியாளர்களோடு பயணிக்க (20-09-10)
3. மீண்டும் குழந்தைகளானோம் (25-09-10)
4. ஞாயிற்றுக்கிழமையும், அனுபவப் பகிர்வும் (26-09-10)
4.1. புதிய அனுபவம்
4.2. வியப்பு
4.3. குழப்பம்
4.4. தெளிவடைந்தேன்
4.5. அரெட்ஸ்-ன் பணிகள்
5. மக்களோடு மக்களாக (27-09-10 முதல் 2-10-10 வரை)
6. திரும்பிப் பார்க்கிறோம் (02-10-10)
7. பொதுவானப் பரிந்துரைகள்
8. வீடு திரும்பினோம் (03-10-10)
1. முதல் நாள் (19-09-10)
மழைக்கு ஏங்கும் மருத நிலமாக, தேர்வுகளின் வெப்பத்தால் சற்றே வாட்டம் கொண்ட எம் மனதிற்கு இந்த முதல் நாள் ஒரு முதல் மழை. மத்திய பேருந்து நிலையத்தில் தொடங்கிய எம் பயணம் கரூர் மாவட்டம், அரவணாப்பேட்டையில் அமைந்திருக்கும் 'அரெட்ஸ்' நிறுவனத்தின் பயிற்சி மையத்தை அடைந்த நேரம் சரியாக மதியம் 1.30. அறுசுவை உணவு, சிறிய ஓய்விற்குப் பின்னர் மாலை 4.30 மணியளவில் நடைபெற்ற முதல் அமர்வு மொத்த அனுபவத்திற்கும் ஓர் முன்னுரையாக அமைந்தது சிறப்பு. இந்த அமர்வில் 'அரெட்ஸ்' நிறுவனர் அண்ணன் சாமி, தங்கள் இலட்சியமான
'மக்களிடம் சென்று
மக்களோடு வாழ்ந்து
மக்களிடமே கற்று,
அன்புசெய்து, அவர்களிடம் இருப்பதைக்கொண்டே கட்டியெழுப்பி,
இறுதியில் இவற்றை நாங்களே செய்தோம் என மக்களைக் கூறச்செய்வது'
என்ற கொள்கை ஒரு சீனப் பழமொழியிலிருந்து எடுக்கப்பட்டதையும், எவ்வாறு கடந்த 30 ஆண்டுகால அரெட்ஸ் பயணத்தில் துளியளவும் தடம் மாறாமல், மக்களை ஒன்று சேர்க்கும் ஓர் கிரியா ஊக்கியாக விளங்குகிறது என்பதையும் பெருமிதம் ததும்ப கூறினார்.
இலக்கு மக்களான பெண்கள், தலித் மக்கள், குழந்தைகள், ஏழை மக்கள் போன்றோரின் சுய சிந்தனையைத் தூண்டியது, அவர்களிடம் ஓர் ஒருங்கிணைந்த செயல்பாட்டை உருவாக்கியது, வளர்ச்சிக்கான பல புதிய முன்னெடுப்புகள், மற்றும் அவர்களைத் தோல்வியாளர் நிலையிலிருந்து வெற்றியாளர்களாக உருவாக்கியது என்று தங்கள் பணிகளின் பயணத்தை எங்களோடு பகிர்ந்துகொண்டார்.
அருள்பணி மத்தியாசு, அரெட்ஸ் நிறுவனத்தோடு தான்கொண்டிருந்த கடந்த பல ஆண்டுகாலத் தொடர்பானது தனது ஆன்மீக வாழ்விற்கு எவ்வாறு திடம் சேர்த்தது என்பதையும், இந்நிறுவனம் மூலம் தான் சந்தித்த எண்ணற்ற மக்களின் வாழ்விற்கு நம்பிக்கை சேர்த்ததையும் தனக்கேயுரிய நகைச்சுவை உணர்வோடு பரிமாறினார்.
'எகிப்தில் என் மக்கள் படும் துன்பத்தைக் கண்ணுற்றேன். அவர்கள் மீது இரக்கம் கொண்டு நான் இறங்கி வந்துள்ளளேன்' என்ற இறைவார்த்தையின் படி, தந்தையாம் கடவுள் சாதாரண மக்கள் நடுவில் இருப்பிடம் கொண்டு, அவர்களின் வாழ்க்கைப் போராட்டத்தில் அவர்களோடு வாழ்ந்து, அவர்களைக்கொண்டே அவர்களின் விடுதலையைச் சாத்தியப்படுத்தினார்.
'ஆண்டவர் ஆவி என் மேலே ஏனெனில் அவர் என்னை அபிஷேகம் செய்தள்ளார். எளியோர்க்கு நற்செய்தி அறிவிக்கவும் பார்வையற்றோர் பார்வை பெறவும் ஒடுக்கப்பட்டோர் உரிமை வாழ்வு பெறவும் சிறைபட்டோர் விடுதலை பெறவும்... அவர் என்னை அனுப்பியுள்ளார்.' என்ற இயேசுவின் மக்களை மையப்படுத்திய இலட்சியமும், வாழ்வும், பணியும் தந்தையாம் கடவுளின் பண்புகளை அப்படியே பிரதிபலித்தது.
இந்த இறைவெளிப்பாட்டின் அடிப்படையில் இந்த அரெட்ஸ் இயக்கத்தின் இலட்சியத்தையும், கடந்தகால பணிகளையும் எவ்வாறு இறைஒளியில் பார்க்க இயலும் என்று ஒப்பிட்டு கூறிய பாங்கு எங்கள் நெஞ்சைத் தொடுவதாக இருந்தது.
இதன் பின்னர் நாங்கள் எழுப்பிய ஐயப்பாடுகளுக்கு சிறந்த முறையில் தெளிவுகளை வழங்கினார் அண்ணன் சாமி அவர்கள். குறிப்பாக முறைசாரா தொழிலாளர்கள் என்றால் யார்? யார்? அவர்களுக்கான அரெட்ஸ் இயக்கத்தின் பணி என்ன? முறைசாரா கல்வி என்றால் என்ன? அது எந்த வகையில் மற்ற கல்வி முறைகளிலிருந்து மாறுபடுகிறது போன்ற வினாக்களுக்கு சிறந்த முறையில் விளக்கமளித்து எங்களைத் தெளிவுபடுத்தினார்.
இறுதியாக நாங்கள் அரெட்ஸ் இயக்கத்தின் எந்தெந்த தளங்களில் பணியாற்றுபவர்களோடு கரம்சேர்த்து பணி அனுபவம் பெறவிருக்கிறோம் என்பது தொடர்பான சில உள்ளீடுகளைத் தந்ததோடு, வரும் நாள்களின் அனுபவம், எம் அழைத்தல் வாழ்விற்கு பல அடித்தளங்களைத் தரவிருக்கும் திருப்பு முனைகளாக அமைய வாழ்த்துக்களுடன் முதல் நாள் அமர்வு இனிதே முடிந்தது.
இரவு உணவு, சிறிது நேர கலகல பேச்சு, சின்னதாக ஒரு செபம் என்று சரியாக 10.15 மணியளவில் இரவின் தென்றல் உள்ளங்களை வருட உவகையோடு துயிலச் சென்றோம்.
2. பணியாளர்களோடு பயணிக்க (20-09-10)
இன்றைய நாள் இனிதே புலர்ந்தது. இறைவன் சந்நிதியில் எங்கள் முதல் சந்திப்பு. 7.30 மணி அளவில் எங்கள் தந்தை அருள்பணி.தயனேசியசு திருப்பலி நிறைவேற்ற எங்கள் உள்ளக்கிடக்கைகளை, தேவைகளை, வாஞ்சைமிகு இறைவனோடு பகிர்ந்து, அவரின் உடனிருப்பை எங்கள் உள்ளங்களில் உறுதிசெய்த மகிழ்ச்சியில் காலை உணவிற்குச் சென்றோம்.
பெற்றோர்கள் முதலில் வர, அண்ணன் சாமி அவர்கள் தொடர்ந்து வர, பணியாளர் செந்தில் மற்றும் தந்தை. தயனேசியசு என அனைவரும் அரங்கில் அமர சரியாக 9.15 மணியளவில் நாங்கள் யாருடைய வீடுகளுக்கு செல்லவிருக்கிறோம் என்றும், எங்கள் அடுத்தகட்ட அனுபவம் எந்த முறையில் அமையவிருக்கிறது என்றும் விவாதித்தோம்.
பெண்கள் இயக்கம், தலித் மக்கள் இயக்கம், அமைப்பு சாரா தொழிலாளர் இயக்கம் போன்றத் தளங்களில் பணியாற்றும் அரெட்ஸ் பணியாளர்களின் வீடுகளுக்குச் சென்று, அவர்களோடு தங்கி, அவர்களிடமிருந்து கற்று, அவர்களோடு பணியாற்றி, மீண்டும் 25-09-10 அன்று துளிர் தளிர் குழந்தைகள் முகாமிற்கு காலை 9 மணிக்கு வந்து சேர்வது என்றும், அதேநாளில் மதியம் சுவாதி பெண்கள் இயக்கத்தினைச் சந்திப்பது என்றும் முடிவுசெய்யப்பட்டது.
அரெட்ஸ் அமைப்பின் பல்வேறு தளங்களில் தங்களையேக் கரைத்துக்கொண்டுப் பணியாற்றும் பணியாளர்களான திருமிகு பாரதி கண்ணம்மா, அந்தோணியம்மாள், சூரிய மேரி, விஜயலெட்சுமி, வேலு, பாரதி, இளவரசி, எழிலரசி, மலர்கொடி, செல்வம், சந்திரா, மற்றும் அம்பிகாபதி போன்ற நல்ல உள்ளங்களின் இல்லங்களில் தங்கவிருக்கும் மாணவர்களின் பெயர்களை அண்ணன் சாமி அவர்கள் தெரியப்படுத்தினார்.
உதடுகளின் அரும்பில் புன்னகைப்பூக்கள் மொட்;டவிழ்க்க, கூட்டம் கலைந்து சிறிய சலசல பேச்சுக்களோடு 1.15 மணியளவில் உணவருந்தச் சென்றோம். ஒருவர் ஒருவரோடு மகிழ்ச்சியான அறிமுகப்படுத்தல்கள், கைகுலுக்கல் ஆரவாரத்தோடு, அனுபவம் நோக்கிய எதிர்பார்ப்புக்களையும், எங்கள் துணிமணிகளையும் தோள்களில் சுமந்து 3 மணியளவில் பணித்தளங்களை நோக்கிப் பயணமானோம்.
2.1 பொதுவான அனுபவம்
விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் புதிய மனிதர்களும், புதிய பயணங்களும் நம்மில் வெகு இயல்பாக எதிர்பார்ப்புக்களை கிளப்பி விடுகிறது. புது மணப்பெண் தன் புதிய குடும்பத்தை எதிர்கொள்ளும் அச்சம் நிறைந்த மனநிலையில் அவர்களோடு சென்றோம். ஆனால் நாங்கள் சென்று சேர்ந்த பின்னர், அந்த பணியாளர்களுக்கு இத்தகைய அனுபவம் ஒன்றும் புதிது அல்ல என்று. ஏற்கனவே சில வெளிநாட்டவர்கள் உட்பட, பலர் அவர்களது வீடுகளில் தங்கி அனுபவம் பெற்றிருக்கின்றனர். எனவே அவர்கள் எங்களது தேவைகளை நாங்கள் கூறும் படி இல்லாமல், அவர்களே முன்வந்து எங்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, தங்கள் வீட்டில் ஒருவராக எங்களைப் பாவித்து நாங்கள் நல்ல மனநிலையில் அவர்களோடு தங்கியிருக்கவும், பணிசெய்யவும், கற்றுக்கொள்ளவும் பேருதவியாய் இருந்தனர். வானவில்லின் ஏழு வண்ணங்கள் போல நாங்கள் சென்ற பணியாளர்களின் பணித்தளத்தைப் பொறுத்து எங்கள் ஒவ்வொருவருக்கும் வௌ;வேறு விதமான அனுபவங்கள் கிடைத்திருக்கிறது என்பது எங்கள் பகிர்வின் போது நன்கு வெளிப்பட்டது. குறிப்பாக தலித் மக்கள் சந்திக்கும் சவால்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் சந்திக்கும் நெருக்கடிகள், பெண்கள் எதிர்கொள்ளும் போராட்டங்கள், குழந்தைகளின் ஏக்கங்கள் என்று அரெட்ஸ் இயங்கும் அனைத்துத் தளங்களிலும் நாங்கள் அனுபவம் பெற்றது சிறப்பாக அமைந்திருந்தது. இந்த அனுபவம் எங்கள் அடுத்தகட்ட பணிஇலக்கினை தீர்மானிக்க பெரும் உதவியாக இருந்தது என்றால் சிறப்பு மிக்கது.
3. மீண்டும் குழந்தைகளானோம் (25-09-10)
களிப்பும், களைப்புமாக சிலர், சிரிப்பும், சோர்வுமாக இன்னும் சிலர் என ஒருவர், ஒருவராக, இருவர்-மூவராக துளிர் தளிர் குழந்தைகள் அமைப்பிற்கு வந்து சேர்ந்த நேரம் சராசரியாக காலை 9.15 மணி. 'கடந்து போன 4 பகல்களும், 5 இரவுகளும் இதற்கு முன்னர் எங்கள் அனுபவத்தில் வராத புதுமைகளாக இருந்தது' என்பது மட்டுமே அனைவரின் ஒத்தக் கருத்தாக அமைந்ததில் வியப்பதற்கில்லை.
'ஒரு பள்ளத்தாக்கு முழுக்க பூ பூக்கட்டுமே..
ஒரு குழந்தையின் சிரிப்பிற்கு ஈடாகுமா..?'
என்ற கவிஞர் வைரமுத்துவின் நியாயமான வினாவின் நிதர்சனத்தைக் கண்டுகொள்ளும் வண்ணம் சுற்றுவட்டாரத்தின் பல கிராமங்களிலிருந்தும் சுமார் 75 குழந்தைகள் குழும அந்த இடத்திற்கே புதிய வண்ணம் சேர்ந்து விட்டது. பணியாளர் செந்தில்குமார் குழந்தைகளோடு எங்கள் அமர்வினை நெறிப்படுத்தினார். கலகலப்பான சிறிய விளையாட்டு, பின்னர் ஒவ்வொருவரோடும் மூன்று குழந்தைகள் வீதம் பிரிந்து சென்று அவர்களின் அரெட்ஸ் அனுபவங்களைக் அவர்களின் மொழியிலேயேக் கேட்டுத்தெரிந்து கொண்டது, மீண்டும் ஒன்று கூடி அவற்றைப் பகிர்ந்து கொண்டது, அவர்களோடு சேர்ந்து மதிய உணவு உண்டது முடிய நாங்கள் குழந்தைகளாகவே மாறிய குதூகல உணர்வோடு பிரியாவிiடை பெற்று, 2.45 மணியளவில் சுவாதி பெண்கள் அமைப்பை நோக்கி நடைபோட்டோம்.
மாலை 4 மணியளவில் அண்ணன் சாமி அவர்களின் துணைவியாரும், சுவாதி அமைப்பின் இணை நிறுவனருமான கிறிஸ்டி அவர்கள், தங்கள் அமைப்பின் 9 செயல்வீராங்கனைகளோடு அரங்கிற்கு வர எங்கள் பகிர்வுகள் ஆரம்பமானது.
ஒருவர் ஒருவரை அறிமுகப்படுத்தும் போதே அவர்கள் தங்கள் தளங்களில் எத்தகைய பணிகளை முன்னெடுத்தனர், அப்புதி;ய முயற்சிகளில் அவர்கள் சந்தித்த சவால்கள், வெற்றிகள், இவ்வியக்கத்தின் மூலம் வாழ்வில் புது நம்பிக்கை பெற்றுள்ள பெண்கள், குடும்பங்கள் என விலாவாரியாக விளக்கினர்.
சுருங்கக்கூறின் கரூர் மாவட்டப் பெண்களின் இன்றைய சமூக, பொருளாதார, அரசியல் விழிப்புணர்விற்கும், முன்னேற்றத்திற்கும் சுவாதி இயக்கத்தினரின் பங்களிப்பும், இதன் பணியாளர்களின் அளவிடமுடியாத தியாகமும் விலைமதிப்பற்றது எனலாம். பெண்கள் தங்கள் பிரச்சனைகளை முதன் முதலாக வெளிப்படுத்த ஓர் தளம் அமைத்துக்கொடுத்ததும், ஒரு பெண்ணின் பிரச்சனை ஒரு தனிநபர் பிரச்சனை அல்லளூ மாறாக அது நாம் சார்ந்திருக்கும் சமூகத்தின் பிரச்சனை என்ற முறையில் ஓர் இயக்கமாக இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காண முற்பட்டதும் சுவாதி இயக்கத்தின் அளப்பெரிய சாதனையாகும்.
கரூர் அமராவதி ஆற்றில் மணல் அள்ளுவதில் வெளிப்படையாக நடக்கும் முறைகேடுகளை கண்டித்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஒரு சில வாரங்கள் சிறை சென்றதையும், தேர்தல் களத்தில், ஓட்டு எண்ணும் இடங்களில் நடக்கும் தில்லுமுல்லுகளுக்கு எதிராக போராடி கைதானதையும், அந்த இக்கட்டான தருணங்களிலும் ஓர் இயக்கமாக இருந்து அப்பிரச்சனைகளைக் மிக எளிதாக கையாண்ட விதத்தினையும் அவர்கள் விளக்கிய போது 'இறையாட்சி நம்மில்' என்ற உண்மையை உணர முடிந்தது.
இப்படியாக இந்த அமர்வும் மனநிறைவோடு முடிய மீண்டும் 5 நாள்களுக்குப் பின்னர் அரவணாபேட்டை பயிற்சி அலுவலகத்திற்குச் சென்றோம். இரவு உணவும், மறுநாள் ஞாயிறு திருப்பலியைச் சிறப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமையால் அதற்கான சிறு தயாரிப்பு என இந்த நாளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவி;ட்டுத் தூங்கச்சென்ற போது மணி 10.30.
4. ஞாயிற்றுக்கிழமையும், அனுபவப் பகிர்வும் : (26-09-10)
இன்றைய பொழுது இனிதே புலர, காலை உணவிற்குப் பின் சரியாக காலை 9.30 மணிக்கு புலியூர் தூய குழந்தை இயேசு திருத்தலத்திற்கு ஞாயிறு திருப்பலிக்காக புறப்பட்டோம். திருப்பலி முன்னுரை, பாடல்கள் மட்டுமல்லாது மறையுரை நேரத்தில் நாங்கள் நிகழ்த்திய குறு நாடகமானது அன்றைய நற்செய்தியை விளக்குவதாகவும், கடந்த 10 வருடத்தில் இந்தியாவில் 16,000 விவசாயிகள் தற்கொலை செய்துள்ள கொடிய அவலத்தின் பின்னணியை மையப்படுத்துவதாகவும் அமைந்திருந்தது அனைவரின் உள்ளத்தையும் உலுக்குவதாக அமைந்திருந்தது. பங்குத்தந்தை அருள்பணி. ஜாய் ஜெயசீலன் அவர்கள் தனது பெயருக்கேற்ப இன்முகத்தோடு எங்களை வரவேற்று உபசரித்தப் பாங்கு இன்னும் எம் கண்களை விட்டு அகல மறுக்கிறது. மதிய உணவிற்கு மீண்டும் அலுவலகத்தை வந்தடைந்தோம்.
சரியாக மாலை 4.30 மணியளவில் சுவாதி தலைவர் கிறிஸ்டி, மற்றும் பணியாளர்கள் திருமதி. கௌரி, திரு. செந்தில் ஆகியோர் வழிநடத்துதலில் கடந்த வார அனுபவங்களைப் பகிர்ந்து அவற்றின் நிறை, குறைகளை விவாதித்தோம். மிகவும் புதுமையான முறையில் இந்த விவாதம் நடைபெற்றது எங்களை மிகவும் ஆர்வமுடன் பங்கெடுக்கச்செய்தது. சிறு சிறு குழுக்கள் அமைத்து, அரெட்ஸின் பணிகளாக அக்குழுவினர் மக்களிடம் பார்த்தவற்றை பாடல், நாடகம், மற்றும் கவிதை என்பன போன்ற படைப்புக்கள் மூலம் வெளிப்படுத்தச் செய்தது அமர்வினை நெறிபடுத்தியோரின் அனுபவத்திற்கும், திறமைக்கும் சான்று. தங்கள் அரெட்ஸ் அனுபவத்தை திரைப்பட பாடல்களின் மெட்டில் மொழியாக்கம் செய்து ஒரு குழுவினர் பாடிய ' முன்தினம் பார்த்தேனே.. பார்த்ததும் வியந்தேனே.. அரெட்ஸின் சாதனை.. மக்களின் நம்பிக்கை' என்னும் பாடல் அனைவரின் மனதையும் கவர்ந்தது. மேலும் வீதி நாடக வடிவில் அப்பகுதி மக்களிடையே ஒருகாலத்தில் மண்டிக்கிடந்த அறியாமை இருளையும், அரெட்ஸ் இயக்கத்தின் மூலம் கொண்டு வரப்பட்ட விழிப்புணர்வு ஒளியையம் காட்சி படுத்தியது இன்னும் எங்கள் கண்களை விட்டு அகல மறுக்கிறது. எங்கள் பணி வாழ்வில் எதிர்படும் சவால்களை அரெட்ஸ் போன்ற மக்கள் இயக்கங்களோடு கைகோர்த்து எங்ஙனம் எதிர்கொள்வது என்ற கருத்தமைந்த மற்றொரு குழுவினரின் கவிதை நெருப்பு வார்த்தைகளால் நெய்யப்பட்டிருந்தது. இப்படைப்புகளெல்லாம், மாணவர்கள் என்றால் வெறுமனே பாடங்களை மட்டும் படிப்பவர்கள்; அல்ல என்பதையும், புதிய சமூக அத்தியாயங்களை படைக்க தங்களைத் தயார்படுத்திக்கொள்பவர்கள் என்பதையும் மிகத்தெளிவாக வெளிப்படுத்தியது. இது மட்டுமல்லாமல் பின்வரும் தலைப்புகளில் எங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டோம்.
சரியாக மாலை 4.30 மணியளவில் சுவாதி தலைவர் கிறிஸ்டி, மற்றும் பணியாளர்கள் திருமதி. கௌரி, திரு. செந்தில் ஆகியோர் வழிநடத்துதலில் கடந்த வார அனுபவங்களைப் பகிர்ந்து அவற்றின் நிறை, குறைகளை விவாதித்தோம். மிகவும் புதுமையான முறையில் இந்த விவாதம் நடைபெற்றது எங்களை மிகவும் ஆர்வமுடன் பங்கெடுக்கச்செய்தது. சிறு சிறு குழுக்கள் அமைத்து, அரெட்ஸின் பணிகளாக அக்குழுவினர் மக்களிடம் பார்த்தவற்றை பாடல், நாடகம், மற்றும் கவிதை என்பன போன்ற படைப்புக்கள் மூலம் வெளிப்படுத்தச் செய்தது அமர்வினை நெறிபடுத்தியோரின் அனுபவத்திற்கும், திறமைக்கும் சான்று. தங்கள் அரெட்ஸ் அனுபவத்தை திரைப்பட பாடல்களின் மெட்டில் மொழியாக்கம் செய்து ஒரு குழுவினர் பாடிய ' முன்தினம் பார்த்தேனே.. பார்த்ததும் வியந்தேனே.. அரெட்ஸின் சாதனை.. மக்களின் நம்பிக்கை' என்னும் பாடல் அனைவரின் மனதையும் கவர்ந்தது. மேலும் வீதி நாடக வடிவில் அப்பகுதி மக்களிடையே ஒருகாலத்தில் மண்டிக்கிடந்த அறியாமை இருளையும், அரெட்ஸ் இயக்கத்தின் மூலம் கொண்டு வரப்பட்ட விழிப்புணர்வு ஒளியையம் காட்சி படுத்தியது இன்னும் எங்கள் கண்களை விட்டு அகல மறுக்கிறது. எங்கள் பணி வாழ்வில் எதிர்படும் சவால்களை அரெட்ஸ் போன்ற மக்கள் இயக்கங்களோடு கைகோர்த்து எங்ஙனம் எதிர்கொள்வது என்ற கருத்தமைந்த மற்றொரு குழுவினரின் கவிதை நெருப்பு வார்த்தைகளால் நெய்யப்பட்டிருந்தது. இப்படைப்புகளெல்லாம், மாணவர்கள் என்றால் வெறுமனே பாடங்களை மட்டும் படிப்பவர்கள்; அல்ல என்பதையும், புதிய சமூக அத்தியாயங்களை படைக்க தங்களைத் தயார்படுத்திக்கொள்பவர்கள் என்பதையும் மிகத்தெளிவாக வெளிப்படுத்தியது. இது மட்டுமல்லாமல் பின்வரும் தலைப்புகளில் எங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டோம்.
4.1. புதிய அனுபவம்:
அரெட்ஸ் இயக்கத்தின் பணியாளர்களின் ஆர்வம், ஈடுபாடு, தியாகம், குழு அமைப்பு முறை, மக்கள் பணியில் பாரபட்சமின்றி துணிந்து செயல்படுவது, அநீதிகளுக்கு எதிராக போராடும் குணம் போன்றவை பிற அரசு சாரா அமைப்புகளிலிருந்து அரெட்ஸஸை வேறுபடுத்தி இதன் தனித்தன்மையைக் காட்டுகின்றது.
4.2. வியப்பு:
படிநிலை அமைப்பு முறையில் எந்தவித அதிகாரத்தொனியுமின்றி, தோழமை உணர்வுடன் பழகும்; பணியாளர்களின் செயல் வேகம், இலக்கு, கடமையில் கண்ணியம், அர்ப்பணம்.
4.3. குழப்பம்:
சுவாதி, துளிர்-தளிர், போன்றவற்றிற்கும் அரெட்ஸ் அமைப்பிற்குமான தொடர்பு
இந்த வலையமைப்பு எப்படி இயங்குகிறது?
சுயஉதவிக்குழுக்கள் ஏற்படுத்துவது நிறுவன நன்மைக்காகவா? அல்லது மக்களின் நலனுக்காகவா?
வெறும் பொருளாதார மேம்பாடு மட்டும்தானா? அல்லது சமூகமாற்றப்பணிகளும் நடைபெறுகின்றதா?
பணியாளர்களின் அளவுகடந்த தியாகத்திற்காக என்ன கைம்மாறு கொடுக்கப்படுகிறது?
4.4. தெளிவடைந்தேன்:
பார்த்தவுடன் சுயஉதவிக்குழுக்களின் கூட்டமைப்பாகத் தோன்றினாலும், இவ்வியக்கம் சமூக அக்கறையை இன்னும் கொண்டிருக்கிறது
மக்களுக்கு சேர வேண்டிய நலத்திட்டங்கள் பற்றியத் தெளிவு
மக்களின் நம்பிக்கையைப் பெற்றுவிட்டால் எதையும் சாதிப்பது எளிது
4.5. அரெட்ஸ்-ன் பணிகள்:
பாதிக்கப்படும் சாதாரண மக்களின் சார்பாகச் செயல்படுவது
பெண்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது
தலித் மக்கள் மேம்பாடு
நாளையத் தூண்களாக குழந்தைகளை உருவாக்குவது
அமைப்பு சாரா தொழிலாளர்களை இணைத்து அரசின் சலுகைகளைப் பெற்றுத் தருவது
சமரசமின்றி நீதி, நேர்மையை நிலைநாட்டுதல்
ஒருங்கிணைக்கும் பணி
மக்கள் பங்கேற்புடன் செயல்படுதல்
விழிப்புணர்வுத்தன்மை
சுய ஆளுமை
சேமிப்புப் பழக்கம், காப்பீட்டுத் திட்டம்
மக்களுக்குப் பயிற்சி அளித்தல்
சுகாதாரப்பணி
சமுதாயத்தில் இழந்ததை மீட்டெடுக்கும் பணி
4.5.1 பெண்கள் பிரச்சனை
கரூர் மாவட்டத்தைச் சார்ந்த பெண்களுக்கு எந்த ஒரு பிரச்சினை என்றாலும் முதலில் முன்வரும் மக்கள் அமைப்பாக இயங்கி வருவது ஏறத்தாழ 25000 பெண்களை உள்ளடக்கிய சுவாதி பெண்கள் அமைப்பாகும். வரதட்சனை கொடுமை, கணவனி;ன் சித்ரவதை, சிறுவயதில் திருமணம், என்று அநீதி காணும் இடங்களிலெல்லாம் பல்வேறு நடவடிக்ககைகள் மூலம் அவதாரம் எடுத்துவருவது சுவாதி அமைப்பினைப் பற்றி இங்குள்ள மக்களின் கருத்தாகும். பெண் புறக்கணிக்கப்படுதல், இழிவுப்படுத்தப்படுதல் மற்றும் சமஉரிமை மறுப்பு போன்ற பிரச்சனைகளுக்காக இவ்வமைப்பு எண்ணிலடங்காதப் போராட்டங்களை முன்னின்று வெற்றிகரமாக நடத்தி சிறப்பான முடிவுகளை எட்டியிருக்கிறது. இதைத் தொடரந்து செயல்படுத்துவதற்கும் வெகுவான பயிற்சிகளும், முயற்சிகளும் எடுத்துவருகிறது. மகளிர் சுயு உதவிக்குழுக்களை ஏற்படுத்தி அரசின் உதவித் நலத்திட்டங்களைப் பெற்றுத்தருகிறது.
4.5.2 தலித் மக்கள் மேம்பாடு
சமூகத்தில் தலித் மக்களுக்கு எதிராக இளைக்கப்படும் கொடுமைகளை கண்டித்தும் தலித் மக்களை ஒன்றுபடுத்தி, இயக்கங்களாக அமைத்து அவர்களின் உரிமைகளுக்காக அவர்களே போராடும் நிலையினi னுசுநுயுடுஆ என்ற பெயரில் இயக்கி வருகின்றனர். இதிலும் ஏராளமான மக்கள் தங்களையே உறுப்பினர்களாகவும், பணியார்களாகவும், அர்ப்பணித்து போராட்டங்களில் ஈடுபட்டு தங்கள் உரிமைகளைத் தாங்களே பெற்றுக்கொள்ளும் வேட்கையில் செயல்படுகின்றனர்.
4.5.3 குழந்தைகள் பணி
இன்றைய குழந்தைகள் நாளைய தூண்கள் என்ற நம்பிக்கையில் அருகிலுள்ள கிராமங்களில் உள்ள குழந்தைகளை ஒன்று கூட்டி அவர்களுக்கு விளையாட்டுக்கள், விழிப்புணர்வு, கலை, கல்வி என பல்வேறு வகையில் குழந்தைகளை உற்சாகப்படுத்தி வருகின்றனர். குழந்தைகளுக்கென்றே 'ACTS' என்ற பெயரில் ஒரு பயிற்சி இல்லம் அமைக்கப்பட்டு சிறப்பாக இயங்கி வருகின்றது. விடுமுறை நாள்களில் குழந்தைகள் இப்பயிற்சி இல்லத்திற்கு வந்து பயன்பெற்றுச் செல்கின்றனர்.
4.5.4 இளையோர் பணி
இளைஞர்கள் ஒரு நாட்டின் முதுகெலும்பு என்பது முற்றிலும் உண்மை. எனவே இவ்வமைப்பானது இப்பபுதியில் உள்ள இளைஞர், இளம்பெண்களை ஒன்றிணைத்து அவர்களுக்கு வாழ்வியல் , வேலைவாய்ப்பு, அரசு சலுகைகள், உதவித்திட்டங்களைப் பெறுதல் போன்ற பல்வேறு கருத்தரங்குகளை ஏற்பாடு செய்து வருங்கால இந்தியாவை உருவாக்கி வருகின்றது. Pனுஆ என்ற அமைப்பு இளைஞர்களின் நல்வாழ்விற்காக, பொருளாதார வளர்ச்சிக்காக செயல்படுகிறது. தற்போது 1400 இளைஞர்கள் இவ்வியக்கத்தில் சேர்ந்து பயன்பெற்று வருகின்றனர்.
4.5.5 அமைப்பு சாரா தொழிலாளர் இயக்கம்
முடிதிருத்துதல், துணி துவைத்தல், சாலையோரங்களில் காய்கறி விற்றல் போன்ற அமைப்பு சாரா தொழிலாளர்களை ஒருங்கிணைத்து அவர்களின் வாழ்வு மேம்பட, அரசின் சலுகைகளை பெற்றுக்கொள்ள வழிவகை செய்கின்றது. அரசின் உதவித்திட்டங்கள் பற்றி அவர்களுக்கு தெளிவான விழிப்புணர்வு கொடுக்கப்படுகிறது.
4.5.6 முறைசாரா கல்வி
அரசுடன் இணைந்து இந்நிறுவனம் இப்பணியைச் செவ்வனே செய்கின்றது. 'அனைவருக்கும் கல்வி' என்றக் கொள்கையை மையப்படுத்தி, இந்நிறுவனத்தின் பணியாளர்களைக் கொண்டு அந்தந்த கிராமங்களில் உள்ள கல்வியறிவு அற்ற மக்களுக்கு முறைசாராகல்வி கற்றுத்தரப்படுகிறது. ஒரு விளையாட்டு போல, அழகி;ய கோலம் போடுவது போல என்று கற்றல் முறையானது மிகவும் சிறப்பான அனுபவமாக மாற்றப்படுவதாலும், சமுதாய விழிப்புணர்வும் கற்றலின் ஒரு அங்கமாக இருப்பதாலும், பெண்களும் தங்கள் பிரச்சனைகளைப் பேசுவதற்கு ஒரு தளமாக இருப்பதாலும் இக்கல்வி முறையானது இப்பகுதியில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பது கண்கூடு. இதுவரை கையொப்பமிடத்தெரியாதவர்கள் கூட தற்பொழுது தமிழிலும், ஆங்கிலத்திலும் சிறப்பாக தங்கள் பெயர்களை எழுதுவதிலிருந்து இது நன்கு விளங்கும்.
இதுமட்டுமின்றி
மக்களுக்கு விவசாயம், சிறு தொழில் போன்ற பல்வேறு வேலைகளை சிறப்பாகச் செய்ய பயிற்சி அளிக்கிறது.
மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. சுய ஆளுமை உருவாக்கத்திற்குப் பயிற்சி அளிக்கிறது.
மக்கள் சமரசமின்றி நீதி, நேர்மையை சமுதாயத்தில் நிலைநாட்ட உதவுகிறது.
மக்கள் பங்கேற்பு அமைப்பாக இது செயல்படுகிறது.
பாதிக்கப்படும் அப்பாவி அடித்தட்டு மக்களின் சார்பாக இந்நிறுவனம் நிலைப்பாடு எடுத்து செயல்படுகின்றது.
இதன்பின்னர் ஒவ்வொருவரும் தங்களுக்கு இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ள ஆர்வமுள்ள பணித்தள விருப்பங்களைக் கூற, அதற்கேற்றார்போல்; வருகின்ற திங்கள் முதல் சனி வரை நாங்கள் எந்தெந்த வீடுகளில் தங்கவிருக்கின்றோம் என்று தெரிவிக்கப்பட்டது.
இன்றைய நாள் இதயத்திற்கு ஓர் இதமான நாள். மனதினைக் குளிரவைத்த மழை, பரவசமூட்டிய இடி, மின்னல், மனதில் நிரம்பிக்கிடந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டது, தெளிவு பெற்றது என ஒரு நிறைவான உள்ளத்தோடு இரவு உணவிற்குச் சென்றோம். குளிர்ந்த காற்றினை அமைதியாக வீசி விடைபெற்றுக்கொண்டது ஞாயிற்றுக்கிழமை.
5. மக்களோடு மக்களாக : (27-09-10 முதல் 2-10-10 வரை)
பரபரப்பான திங்கள் அமைதியாகப் புலர காலை 7.30 மணிக்கு அலுவலக அரங்கிலேயேத் திருப்பலி நிறைவேற்றினார் எங்கள் தந்தை அருள்பணி.தயனேசியசு அவர்கள். காலை உணவிற்குப்பின், ஏற்கனவே தேர்வுசெய்த ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பணித்தளத்;தில் சிறப்பு அனுபவம் பெறும் நோக்கில் மீண்டும் மக்களை நோக்கியே பயணமானோம். கடவூர், தோகை மலை, அக்காண்டி மேடு, சிந்தலைவாடி, நந்தன்கோட்டை, வேங்காம்பட்டி, ஏமூர் போன்ற ஊர்களுக்கு பெண்கள், இளைஞர்கள், தலித் மக்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களை இலக்காகக் கொண்டு பணியாற்றுபவர்களின் இல்லங்களுக்குச் சென்றோம். இன்முகத்தோடு வரவேற்பு, சிறந்த உபசரிப்பு, மகிழ்ச்சியோடு எங்கள் ஐயப்பாடுகளை நீக்கியது, என மொத்தத்தில் அவர்கள் எங்களுக்கு நல்ல பெற்றோராக மட்டுமல்லாமல் நல்ல ஆசிரியர்களாகவும் விளங்கினர். பிரிவு சிறிது வருத்தத்தைத் தந்தாலும், புதியன பலவற்றை அறிந்துகொண்ட மகிழ்ச்சியில் அண்ணல் காந்தி பிறந்த அக்டோபர் 2 ம் தியதி கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டு மதிய உணவிற்கு அனைவரும் அரவணாபேட்டை அலுவலகத்தை அடைந்தோம்.
6. திரும்பிப் பார்க்கிறோம் (02-10-10)
சரியாக மாலை 5.30 மணி;க்கு சுவாதி தலைவர் கிறிஸ்டி, மற்றும் பணியாளர்கள் திருமதி. கௌரி, திரு. செந்தில் ஆகியோர் இந்த அமர்வினை நெறிப்படுத்தினர். எங்கள் தந்தை அருள்பணி.டைனிசியஸ் மட்டுமல்லாமல் சிறப்பு விருந்தினர்களாக எம் கல்லூரி முதல்வர் அருள்பணி.ரெய்மண்டு ஜோசப் மற்றும் ஆன்ம தந்தை மரிய அருள் செல்வம் ஆகியோர் வந்திருந்தது எங்களை மேலும் உற்சாகப்படுத்தியது. கடந்த வாரம் நடைபெற்ற அனுபவப் பகிர்வினைப் போன்றே இன்றும் ஏராளமான புதிய முறைகளில் எங்கள் அனுவங்களை வெளிக்கொணர்ந்த நெறியாளர்களை எப்படிப் பாராட்டினும் தகும்.
முதலில் இந்த இரண்டு வார அனுபவத்திற்கு ஒவ்வொருவரும் ஒரு தலைப்பு கொடுக்கவேண்டும். நீர் தேடும் வேர்கள், சிகரத்தை நோக்கி, இறையாட்சியை நனவாக்க, பயணப் பதிவுகள், யார் இந்த கலங்கரை விளக்கம், நீண்ட பயணம், மனிதத்தை தொலைத்த மானுடம், நான் தேடிய பயணப்பாதை, உறவைத் தேடி, உறவின் பாதை, போராளி, வா வாழலாம், எப்படி இது?, கண்ணீர் துடைக்கும் கை, என்று பல்வேறு தலைப்புகள் வெளிவந்தன.
அடுத்ததாக இந்த அனுபவம் எந்த ஆன்மீகப் பார்வையைத் தருகிறது? அல்லது ஏதேனும் விவிலியப்பகுதியோடு கொண்டுள்ள தொடர்பு?
என்னை நான் அறிந்து கொள்ள, வளர்த்துக்கொள்ள உதவியக் கூறுகள்
எனது அழைத்தலுக்கு, எதிர்காலப் பணிவாழ்விற்கு படிப்பினைகள்
இவற்றை ஒவ்வொருவராக விளக்கிய பின் நாங்கள் நான்கு குழுக்களாகப் பிரிந்து, ஒவ்வொரு குழுவும் தங்களது அனுபவம் எவ்வாறு தன்னை மாற்றியது, சமுதாயத்தை மாற்றத்த}ண்டியது என்பதை விவாதித்து, விவாத முடிவினை ஒரு சிறு வரைபடத்தின் மூலம் விளக்கவேண்டும். ஒவ்வொரு குழுவும் சிறப்பாக விவாதித்து அதனை அருமையான படத்தின் மூலம் விளக்கினர். அந்தப் படங்கள் பின்வருமாறு:
முதல் குழுவினர்:
தொட்டியில் மண்ணுக்குள் இருக்கும் விதையைப் போன்ற ஒருவர், அத்தொட்டியின் வாயினைப் போல திறந்த மனதோடு சமூக எதாரத்தங்களை உள்வாங்க வேண்டும். வின்னர் அநீத கட்டுமானங்களுக்கு துணைபோகாமல் நீதியின் மனிதர்களாக வாழ்ந்து அதில் வரும் எதிர்ப்புகளையும், போராட்டங்களையும் எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும்.
தொட்டியில் மண்ணுக்குள் இருக்கும் விதையைப் போன்ற ஒருவர், அத்தொட்டியின் வாயினைப் போல திறந்த மனதோடு சமூக எதாரத்தங்களை உள்வாங்க வேண்டும். வின்னர் அநீத கட்டுமானங்களுக்கு துணைபோகாமல் நீதியின் மனிதர்களாக வாழ்ந்து அதில் வரும் எதிர்ப்புகளையும், போராட்டங்களையும் எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும்.
இரண்டாம் குழுவினர்:
சமூகத்தின் கவர்ச்சியான பல அநீதங்களுக்கு அடிமையாகி மனிதன் கூண்டுக்குள் அடைபட்டிருக்கும் கிளியாக இருக்கும் நிலையில் முதலில் ஒவ்வொருவரும் தன்னிலே இருக்கும் சுய அடிமைத்தனங்களை உடைத்தெறிய முன்வரவேண்டும். இத் தன்மாற்றம், விடுதலை உணர்வுமே சமூக மாற்றத்திற்கும், சமூக விடுதலைக்கும் உந்து சக்தியாக இருக்க இயலும்.
சமூகத்தின் கவர்ச்சியான பல அநீதங்களுக்கு அடிமையாகி மனிதன் கூண்டுக்குள் அடைபட்டிருக்கும் கிளியாக இருக்கும் நிலையில் முதலில் ஒவ்வொருவரும் தன்னிலே இருக்கும் சுய அடிமைத்தனங்களை உடைத்தெறிய முன்வரவேண்டும். இத் தன்மாற்றம், விடுதலை உணர்வுமே சமூக மாற்றத்திற்கும், சமூக விடுதலைக்கும் உந்து சக்தியாக இருக்க இயலும்.
மூன்றாம் குழுவினர்:
அப்பாவி மக்களின் உழைப்பை உறிஞ்சும் முதலாளிகள், அரசியல்வாதிகள் நிறைந்த சமுதாயத்தில் நல்ல தலைவர்களாக ஒருவர் முன்வர வேண்டுமென்றால் அவரிடம் சுயநலம் அறவே அற்றுப்போக வேண்டும். பொது நலனை முன்னிலைப்படுத்தும் தலைவர்களால் மட்டுமே நிறைய கனகளைத் தர இயலும்.
அப்பாவி மக்களின் உழைப்பை உறிஞ்சும் முதலாளிகள், அரசியல்வாதிகள் நிறைந்த சமுதாயத்தில் நல்ல தலைவர்களாக ஒருவர் முன்வர வேண்டுமென்றால் அவரிடம் சுயநலம் அறவே அற்றுப்போக வேண்டும். பொது நலனை முன்னிலைப்படுத்தும் தலைவர்களால் மட்டுமே நிறைய கனகளைத் தர இயலும்.
நான்காம் குழுவினர்:
சமுதாயத்தின் கல்வி, பொருளாதாரம், வளர்ச்சியை நிர்ணயிப்பதற்கு அடித்தளமாக இருப்பது அரசியலே ஆகும். இதில் நல்ல வளர்ச்சியை ஒரு தலைவர் கொடுக்க வேண்டுமென்றால் அவர் ஒரு நல்ல மனிதர்களைக் கொண்ட இயக்கமாக மாற வேண்டும். விழிப்புணர்வை அடித்தட்டு மக்களுக்கும் எடுத்துச்செல்ல வேண்டும். அதுவே நீதியும், சமத்துவமும் உள்ள ஓர் சமுதாயத்தை உருவாக்கும்.
சமுதாயத்தின் கல்வி, பொருளாதாரம், வளர்ச்சியை நிர்ணயிப்பதற்கு அடித்தளமாக இருப்பது அரசியலே ஆகும். இதில் நல்ல வளர்ச்சியை ஒரு தலைவர் கொடுக்க வேண்டுமென்றால் அவர் ஒரு நல்ல மனிதர்களைக் கொண்ட இயக்கமாக மாற வேண்டும். விழிப்புணர்வை அடித்தட்டு மக்களுக்கும் எடுத்துச்செல்ல வேண்டும். அதுவே நீதியும், சமத்துவமும் உள்ள ஓர் சமுதாயத்தை உருவாக்கும்.
இந்த குழுவினரின் விளக்கங்களுக்குப் பின் சிறப்பு விருந்தினர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்ததோடு, கேள்விகள் மூலம் தேவையான தெளிவுகளையும் பெற்றனர். தொடர்ந்து நெறியாளர்கள் மாணவர்களின் மாறுபட்ட கருத்துக்களுக்கு தேவையான விளக்கங்களைக் கொடுத்து இந்த அமர்வினை நிறைவு செய்தனர். மனம் நிறைய புதிய சிந்தனைகளோடு, புதிய வாழ்க்கைத் திட்டங்களோடு திடம் பெற்றவர்களாய் இரவு உணவிற்கு சென்றோம். நாளை வீடு திரும்பும் உணர்வோடு இந்த நாள் இனிதே முடிவுற்றது.
7. பொதுவானப் பரிந்துரைகள்:
இந்த வகையான அனுபவங்களுக்கு அனுப்படுவது எங்களுக்கு சமுதாயத்தைக் குறித்த அக்கறையினையினையும், பொறுப்பையும் சுட்டிக்காட்டுவதால் மிகவும் பாராட்டத்தக்கதாகும்.
குழு விவாதம் இன்னும் அதிகமாக இருக்கும்பட்சத்தில் புதியக் கருத்துக்கள் வெளிவர வாய்ப்பு இருப்பதால் அதிக பலன் கொடுக்கும்.
அனுபவங்களுக்காக அனுப்பப்படும் வீடுகளைச் சார்ந்தவர்களுக்கு, முன்னதாகவே தெரியப்படுத்தி அவர்களது முழு விருப்பத்தை அறிந்துகொள்வது மிகவும் அவசியம்.
குறைந்தக் கட்டணம் என்பது இன்னும் சிறப்பு.
இது போன்ற உண்மையான நல்ல நோக்கத்தேர்டும், சமூக அக்கறையோடும் செயல்படும் அமைப்புகளின் தோழமையில் அனுபவம் பெறுவது சாலச்சிறந்தது.
8. வீடு திரும்பினோம்: (03-10-10)
ஒரு ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய பயணம், மீண்டும் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் புதிய சிந்தனைகளோடு திரும்பிச்செல்கின்றது. காலை உணவிற்கு பின் சரியாக 10 மணிக்கு ஆரம்பமானது இறுதி அமர்வு. இது நேற்றைய அமர்வின் தொடர்ச்சியாக இருந்ததோடு அனைத்து அனுபவங்களுக்கும் தனது மேலான அருளை அளித்த இறைவனுக்கும், இத்தகைய சீரிய அனுபவக் கல்விக்கு ஏற்பாடு செய்யும் எம் கல்லூரிக்கும், அன்பொழுக வரவேற்று உடனிருந்து உதவி செய்த அரெட்ஸ் அமைப்பின் ஒவ்வொரு நல்ல உள்ளங்களுக்கும், சிறப்பாக எங்கள் ஒவ்வொருவரையும் தங்கள் வீட்டில் ஒருவராக ஏற்று அனைத்திற்கும் ஆணிவேராய் இருந்த பணியாளர்களுக்கும் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றிக் கீதம் பாடும் தருணமாக அமைந்தது. இதயம் நிறைந்த நன்றிபெருக்கோடு சரியாக 11.30 மணிக்கு எங்கள் தந்தை அருள்பணி.டைனிசியஸ் அவர்கள் ஞாயிறு திருப்பலி நிறைவேற்ற, இந்த அனுபவமானது எம் பணிவாழ்வின் இலக்கினை இன்னும் கூர்மைப்படுத்தவும், இறையாட்சி பணியில் எப்போதும் நலிவுற்ற மக்களுக்கு துணையாளராக இருக்கவும், மேலும் இது போன்ற இன்ன பிற வேண்டுதலையும், நன்றிகளையும் இறைபதம் சமர்ப்பித்து மதிய உணவி;ற்குச் சென்றோம். நல்ல உணவினை, நா விரும்பும் வண்ணம் சமைத்துத் தந்த அன்பர்களுக்கும் நன்றி கூறி சரியாக மதியம் 2.15 மணியளவில் மீண்டும் மலைக்கோட்டை மாநகர் நோக்கி வீடு திரும்பினோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக