வெள்ளி, 31 மார்ச், 2017

தவக்காலம் நான்காம் வாரம் சனி (1-4-2017)

இன்றைய நற்செய்தி : யோவான் 7: 40-53

40 கூட்டத்தில் சிலர் இவ்வார்த்தைகளைக் கேட்டு, 'வரவேண்டிய இறைவாக்கினர் உண்மையில் இவரே' என்றனர்.

41 வேறு சிலர், 'மெசியா இவரே' என்றனர். மற்றும் சிலர், 'கலிலேயாவிலிருந்தா மெசியா வருவார்?

42 தாவீதின்; மரபிலிருந்தும் அவர் குடியிருந்த பெத்லகேம் ஊரிலிருந்தும் மெசியா வருவார் என்றல்லவா மறைநூல் கூறுகிறது?' என்றனர்.

43 இப்படி அவரைக் குறித்து மக்களிடையே பிளவு ஏற்பட்டது.

44 சிலர் அவரைப் பிடிக்க விரும்பினர். ஆனால் யாரும் அவரைத் தொடவில்லை.

45 தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் அனுப்பியிருந்த காவலர்கள் அவர்களிடம் திரும்பி வந்தார்கள். அவர்கள் காவலர்களிடம், 'ஏன் அவனைப் பிடித்துக்கொண்டு வரவில்லை?' என்று கேட்டார்கள்.

46 காவலர் மறுமொழியாக, 'அவரைப் போல எவரும் என்றுமே பேசியதில்லை' என்றனர்.

47 பரிசேயர் அவர்களைப் பார்த்து, 'நீங்களும் ஏமாந்து போனீர்களோ?

48 தலைவர்களிலாவது பரிசேயர்களிலாவது அவனை நம்புவோர் யாராவது உண்டா?

49 இம்மக்கள் கூட்டத்துக்குத் திருச்சட்டம் தெரியாது. இவர்கள் சபிக்கப்பட்டவர்கள்' என்றனர்.

50 அங்கிருந்த பரிசேயருள் ஒருவர் நிக்கதேம். அவரே முன்பு ஒரு நாள் இயேசுவிடம் வந்தவர். அவர் அவர்களிடம்,

51 'ஒருவரது வாக்குமூலத்தைக் கேளாது, அவர் என்ன செய்தாரென்று அறியாது ஒருவருக்குத் தீர்ப்பளிப்பது நமது சட்டப்படி முறையாகுமா?' என்று கேட்டார்.

52 அவர்கள் மறுமொழியாக, 'நீரும் கலிலேயரா என்ன? மறைநூலைத் துருவி ஆய்ந்து பாரும். அப்போது கலிலேயாவிலிருந்து இறைவாக்கினர் யாரும் தோன்றுவதில்லை என்பதை அறிந்துகொள்வீர்' என்றார்கள்.

53 (அவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்குச் சென்றார்கள்.)

சிந்தனை : 

தவக்காலம் நான்காம் வாரம் வெள்ளி (31-3-2017)

இன்றைய நற்செய்தி : யோவான் 7: 1-2, 10, 25-30

1 இயேசு கலிலேயாவில் நடமாடிவந்தார். யூதர்கள் அவரைக் கொல்ல வழிதேடிக் கொண்டிருந்ததால் அவர் யூதேயாவில் நடமாட விரும்பவில்லை.
2 யூதர்களின் கூடார விழா அண்மையில் நிகழவிருந்தது.
10 தம் சகோதரர்கள் திருவிழாவிற்குப் போனபின் இயேசுவும் சென்றார். ஆனால் அவர் வெளிப்படையாக அன்றி மறைவாகச் சென்றார்.
25 எருசலேம் நகரத்தவர் சிலர், 'இவரைத்தானே கொல்லத் தேடுகிறார்கள்?
26 இதோ! இங்கே இவர் வெளிப்படையாய்ப் பேசிக்கொண்டிருக்கிறாரே! யாரும் இவரிடம் எதுவும் சொல்லவில்லையே! ஒருவேளை இவரே மெசியா என்று தலைவர்கள் உண்மையாகவே உணர்ந்துகொண்டார்களோ?
27 ஆனால் மெசியா எங்கிருந்து வருவார் என்பது யாருக்கும் தெரியாமல் அல்லவா இருக்கும்! இவர் எங்கிருந்து வருகிறார் என்பது நமக்குத் தெரியுமே' என்று பேசிக் கொண்டனர்.
28 ஆகவே கோவிலில் கற்பித்துக் கொண்டிருந்தபோது இயேசு உரத்த குரலில், 'நான் யார்? நான் எங்கிருந்து வந்தேன் என்பவை உங்களுக்குத் தெரியும். ஆயினும் நானாக வரவில்லை. என்னை அனுப்பியவர் உண்மையானவர். அவரை உங்களுக்குத் தெரியாது.
29 எனக்கு அவரைத் தெரியும். நான் அவரிடமிருந்து வருகிறேன். என்னை அனுப்பியவரும் அவரே' என்றார்.
30 இதைக் கேட்ட அவர்கள் இயேசுவைப் பிடிக்க முயன்றார்கள். எனினும் அவருடைய நேரம் இன்னும் வராததால் யாரும் அவரைத் தொடவில்லை.

சிந்தனை : 
அவருடைய நேரம் இன்னும் வரவில்லை. நேரம்: அதுதானே எல்லாம்! ஆம்! நண்பர்களே! ஏதாவது நல்ல காரியங்கள் வீடுகளில் நடைபெறுவதற்கு முன்பாக நல்ல நேரம், கெட்ட நேரம் பார்ப்பது நம் ஊர்களில் இன்றளவும் வழக்கத்திலிருக்கும் நடைமுறை. அவனுக்கென்னப்பா! எல்லாம் அவன் நேரம்! என்று நன்மைக்கும், தீமைக்கும் நேரம் என்ற ஒன்றைக் காரணம் காட்டுவதையும் கேட்டிருக்கிறோம். இங்கு இயேசு குறிப்பிடும் நேரம் என்பது அவரது தந்தையின் திருவுளம். அவர் அத்திருவுளம் நடைபெறும் போது பார்த்துக்கொள்ளலாம் என்று வெறுமனே இருந்துவிடாமல், எப்போதும் செயல்படுபவராகவே இருந்திருக்கிறார். நன்மை என்றால் அதை ஓய்வின்றி (ஓய்வுநாளில் கூட) செய்துவிடுகிறார். தீமை என்றால் அதை எந்த அதிகாரத்திற்கு எதிராகவும் தட்டிக்கேட்கிறார். கடமையைச் செய்கிறார். பலனை தந்தையின் திருவுளத்திற்கு விட்டுவிடுகிறார். நாமும் நம் ஆண்டவர் இயேசுவைப் பின்பற்றி, எதிர்ப்பிலும், துன்பத்திலும் மனம் தளராது நன்மை செய்ய முற்படுவோமா?

புதன், 29 மார்ச், 2017

தவக்காலம் நான்காம் வாரம் வியாழன் (30-3-2017)

இன்றைய நற்செய்தி : யோவான் 5:31-47

31 'என்னைப்பற்றி நானே சான்று பகர்ந்தால், என் சான்று செல்லாது.
32 என்னைப்பற்றி சான்று பகர வேறு ஒருவர் இருக்கிறார். என்னைப் பற்றி அவர் கூறும் சான்று செல்லும் என எனக்குத் தெரியும்.
33 யோவானிடம் ஆளனுப்பி நீங்கள் கேட்டபோது அவரும் உண்மைக்குச் சான்று பகர்ந்தார்.
34 மனிதர் தரும் சான்று எனக்குத் தேவை என்பதற்காக அல்ல் நீங்கள் மீட்புப் பெறுவதற்காகவே இதைச் சொல்கிறேன்.
35 யோவான் எரிந்து சுடர்விடும் விளக்கு. நீங்கள் சிறிது நேரமே அவரது ஒளியில் களிகூர விரும்பினீர்கள்.
36 'யோவான் பகர்ந்த சான்றை விட மேலான சான்று எனக்கு உண்டு. நான் செய்து முடிக்குமாறு தந்தை என்னிடம் ஒப்படைத்துள்ள செயல்களே அச்சான்று. நான் செய்துவரும் அச்செயல்களே தந்தை என்னை அனுப்பியுள்ளார் என்பதற்கான சான்றாகும்.
37 'என்னை அனுப்பிய தந்தையும் எனக்குச் சான்று பகர்ந்துள்ளார். நீங்கள் ஒருபோதும் அவரது குரலைக் கேட்டதுமில்லை; அவரது உருவைக் கண்டதுமில்லை.
38 அவரது வார்த்தையும் உங்களுக்குள் நிலைத்திருக்கவில்லை; ஏனெனில், அவர் அனுப்பியவரை நீங்கள் நம்பவில்லை.
39 மறைநூல் வழியாக நிலைவாழ்வு கிடைக்கும் என எண்ணி அதனைத் துருவித் துருவி ஆய்ந்து பார்க்கிறீர்களே! அம் மறைநூலும் எனக்குச் சான்று பகர்கிறது.
40 வாழ்வு பெறுமாறு என்னிடம் வர உங்களுக்கு விருப்பம் இல்லை.
41 'மனிதர் தரும் பெருமை எனக்குத் தேவையில்லை.
42 உங்களை எனக்குத் தெரியும். உங்களிடம் இறையன்பு இல்லை.
43 நான் என் தந்தையின் பெயரால் வந்துள்ளேன். ஆனால் என்னை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. வேறொருவர் தம் சொந்தப் பெயரால் வருவாரானால் அவரை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள்.
44 கடவுள் ஒருவரே. அவர் தரும் பெருமையை நாடாது, ஒருவர் மற்றவரிடமிருந்து பெருமை தேடிக்கொள்கிறீர்களே! உங்களால் எப்படி என்னை நம்ப இயலும்?
45 தந்தையின் முன்னிலையில் உங்கள் மேல் குற்றம் சுமத்தப்போகிறவன் நான் என நினைக்காதீர்கள். உங்கள் சார்பாக நிற்பார் என நீங்கள் எதிர்பார்க்கும் மோசேயே உங்கள் மேல் குற்றம் சுமத்துவார்.
46 நீங்கள் மோசேயை நம்பியிருந்தால் என்னையும் நம்பியிருப்பீர்கள். ஏனெனில் அவர் என்னைப்பற்றித் தான் எழுதினார்.
47 அவர் எழுதியவற்றை நீங்கள் நம்பவில்லை என்றால் நான் சொல்லுபவற்றை எவ்வாறு நம்பப் போகிறீர்கள்?

சிந்தனை : 

செவ்வாய், 28 மார்ச், 2017

தவக்காலம் நான்காம் வாரம் புதன் (29-3-2017)

இன்றைய நற்செய்தி : யோவான் 5:17-30

17 இயேசு அவர்களிடம், 'என் தந்தை இன்றும் செயலாற்றுகிறார்; நானும் செயலாற்றுகிறேன்' என்றார்.

18 இவ்வாறு அவர் ஓய்வு நாள் சட்டத்தை மீறியதோடு நில்லாமல், கடவுளைத் தம் சொந்தத் தந்தை என்று கூறித் தம்மையே கடவுளுக்கு இணையாக்கியதால் யூதர்கள் அவரைக் கொல்ல இன்னும் மிகுந்த முயற்சி செய்தார்கள்.

19 இயேசு அவர்களைப் பார்த்துக் கூறியது; 'மகன் தாமாக எதையும் செய்ய இயலாது; தந்தையிடம் தாம் காணும் செயல்களையே செய்ய இயலும். தந்தை செய்பவற்றை மகனும் அவ்வாறே செய்கிறார் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

20 தந்;தை மகன் மேல் அன்புகொண்டு தாம் செய்யும் அனைத்தையும் அவருக்குக் காட்டுகிறார்; இவற்றைவிடப் பெரிய செயல்களையும் அவருக்குக் காட்டுவார். நீங்களும் வியப்புறுவீர்கள்.

21 தந்தை இறந்தோரை எழுப்பி அவர்களை வாழ வைப்பதுபோல மகனும் தாம் விரும்பியவர்களை வாழவைக்கிறார்.

22 தந்தை யாருக்கும் தீர்ப்பு அளிப்பதில்லை. தமக்கு எல்லாரும் மதிப்புக் கொடுப்பதுபோல மகனுக்கும் மதிப்புக்கொடுக்க வேண்டுமெனத் தீர்ப்பு அளிக்கும் அதிகாரம் முழுவதையும் அவர் மகனுக்கு அளித்துள்ளார்.

23 மகனை மதியாதவர் அவரை அனுப்பிய தந்தையையும் மதிப்பது இல்லை.

24 என் வார்த்தையைக் கேட்டு என்னை அனுப்பியவரை நம்புவோர் நிலை வாழ்வைக் கொண்டுள்ளனர். அவர்கள் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டார்கள்; ஏற்கெனவே சாவைக் கடந்து வாழ்வுக்கு வந்துவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

25 காலம் வருகிறது; ஏன், வந்தே விட்டது. அப்போது இறைமகனின் குரலை இறந்தோர் கேட்பர்; அதைக் கேட்போர் வாழ்வர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

26 தந்தை, தாம் வாழ்வின் ஊற்றாய் இருப்பது போல மகனும் வாழ்வின் ஊற்றாய் இருக்குமாறு செய்துள்ளார்.

27 அவர் மானிடமகனாய் இருப்பதால், தீர்ப்பு வழங்கும் அதிகாரத்தையும் தந்தை அவருக்கு அளித்துள்ளார்.

28 இது பற்றி நீங்கள் வியப்புற வேண்டாம். காலம் வருகிறது; அப்போது கல்லறைகளில் உள்ளோர் அனைவரும் அவரது குரலைக் கேட்டு

29 வெளியே வருவர். நல்லன செய்தோர் வாழ்வு பெற உயிர்த்தெழுவர்; தீயன செய்தோர் தண்டனைத் தீர்ப்புப் பெற உயிர்த்தெழுவர்.

30 நானாக எதுவும் செய்ய இயலாது. தந்தை சொற்படியே நான் தீர்ப்பிடுகிறேன். நான் அளிக்கும் தீர்ப்பு நீதியானது. ஏனெனில் என் விருப்பத்தை நாடாமல் என்னை அனுப்பியவரின் விருப்பத்தையே நாடுகிறேன்.

சிந்தனை : 

திங்கள், 27 மார்ச், 2017

தவக்காலம் நான்காம் வாரம் செவ்வாய் (28-3-2017)

இன்றைய நற்செய்தி : யோவான் 5:1-16

1 யூதர்களின் திருவிழா ஒன்று வந்தது. இயேசுவும் எருசலேமுக்குச் சென்றார்.
2 எருசலேமில் ஆட்டு வாயிலுக்கு அருகில் ஐந்து மண்டபங்கள் கொண்ட குளம் ஒன்று உண்டு. எபிரேய மொழியில் பெத்சதா என்பது அதன் பெயர்.
3 இம்மண்டபங்களில் உடல்நலமற்றோர், பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர், முடக்குவாதமுற்றோர் ஆகியோர் திரளாய்ப்படுத்துக்கிடப்பர். (இவர்கள் குளத்து நீர் கலங்குவதற்காகக் காத்திருப்பார்கள்.
4 ஏனெனில் ஆண்டவரின் தூதர் சில வேளைகளில் அக்குளத்தினுள் இறங்கித் தண்ணீரைக் கலக்குவார். தண்ணீர் கலங்கியபின் முதலில் இறங்குபவர் எவ்வித நோயுற்றிருந்தாலும் நலமடைவார்.)
5 முப்பத்தெட்டு ஆண்டுகளாய் உடல்நலமற்றிருந்த ஒருவரும் அங்கு இருந்தார்.
6 இயேசு அவரைக் கண்டு, நெடுங்காலமாக அவர் அந்நிலையில் இருந்துள்ளதை அறிந்து, 'நலம்பெற விரும்புகிறீரா?' என்று அவரிடம் கேட்டார்.
7 'ஐயா, தண்ணீர் கலங்கும் போது என்னைக் குளத்தில் இறக்கிவிட ஆள் இல்லை. நான் போவதற்கு முன் வேறு ஒருவர் இறங்கிவிடுகிறார்' என்று உடல் நலமற்றவர் அவரிடம் கூறினார்.
8 இயேசு அவரிடம், 'எழுந்து உம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்து செல்லும்' என்றார்.
9 உடனே அம்மனிதர் நலமடைந்து தம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்தார்.
10 அன்று ஓய்வு நாள். யூதர்கள் குணமடைந்தவரிடம், 'ஓய்வு நாளாகிய இன்று படுக்கையை எடுத்துச் செல்வது சட்டத்திற்கு எதிரான செயல்' என்றார்கள்.
11 அவர் மறுமொழியாக 'என்னை நலமாக்கியவரே, 'உம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்துசெல்லும்' என்று என்னிடம் கூறினார்' என்றார்.
12 'படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்து செல்லும்' என்று உம்மிடம் கூறியவர் யார்?' என்று அவர்கள் கேட்டார்கள்.
13 ஆனால் நலமடைந்தவருக்கு அவர் யாரெனத் தெரியவில்லை. ஏனெனில் அவ்விடத்தில் மக்கள் கூட்டமாய் இருந்ததால் இயேசு அங்கிருந்து நழுவிப் போய் விட்டார்.
14 பின்னர் இயேசு நலமடைந்தவரைக் கோவிலில் கண்டு, 'இதோ பாரும், நீர் நலமடைந்துள்ளீர்; இதைவிடக் கேடானது எதுவும் உமக்கு நிகழாதிருக்க இனிப் பாவம் செய்யாதீர்' என்றார்.
15 அவர் போய், தம்மை நலமாக்கியவர் இயேசு என்று யூதர்களுக்கு அறிவித்தார்.
16 ஓய்வுநாளில் இயேசு இதைச் செய்ததால் யூதர்கள் அவரைத் துன்புறுத்தினார்கள்.

சிந்தனை : 

ஞாயிறு, 26 மார்ச், 2017

அதிகாரத்தின் ருசிதான் என்ன?

அதிகாரத்தை மனிதன் ஏன்
நேசிக்கத் தொடங்கினான்
நேசிப்பதற்கு அழகாக
இன்னும் எவ்வளவோ இருக்கும் போது!
கோரைப் பற்களோடு
அதன் பின்னால் அலைவதற்கு
அதிகாரத்தின் ருசிதான் என்ன?

தவக்காலம் நான்காம் வாரம் திங்கள் (27-3-2017)

இன்றைய நற்செய்தி : யோவான் 4:43-54


43 அந்த இரண்டு நாளுக்குப் பிறகு இயேசு அங்கிருந்து கலிலேயாவுக்குச் சென்றார்.

44 தம் சொந்த ஊரில் இறைவாக்கினருக்கு மதிப்பு இராது என்று அவரே கூறியிருந்தார்.

45 அவர் கலிலேயா வந்தபோது கலிலேயர் அவரை வரவேற்றனர். ஏனெனில் அவர்கள் திருவிழாவுக்குச் சென்றிருந்தபோது எருசலேமில் அவர் செய்தவை அனைத்தையும் கண்டிருந்தனர்.

46 கலிலேயாவில் உள்ள கானாவுக்கு இயேசு மீண்டும் சென்றார். அங்கே தான் அவர் தண்ணீரைத் திராட்சை இரசம் ஆக்கியிருந்தார். கப்பர்நாகுமில் அரச அலுவலரின் மகன் ஒருவன் நோயுற்றிருந்தான்.

47 இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்திருப்பதாகக் கேள்விப்பட்ட அரச அலுவலர் அவரிடம் சென்று, சாகும் தறுவாயிலிருந்த தம் மகனை நலமாக்க வருமாறு வேண்டினார்.

48 இயேசு அவரை நோக்கி, 'அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் கண்டாலன்றி நீங்கள் நம்பவே மாட்டீர்கள்.' என்றார்.

49 அரச அலுவலர் இயேசுவிடம், ஐயா, என் மகன் இறக்குமுன் வாரும்' என்றார்.

50 இயேசு அவரிடம், 'நீர் புறப்பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக் கொள்வான்' என்றார். அவரும் இயேசு தம்மிடம் சொன்ன வார்த்தையை நம்பிப் புறப்பட்டுப் போனார்.

51 அவர் போய்க் கொண்டிருக்கும் போதே அவருடைய பணியாளர்கள் அவருக்கு எதிர்கொண்டுவந்து மகன் பிழைத்துக்கொண்டான் என்று கூறினார்கள்.

52 'எத்தனை மணிக்கு நோய் நீங்கியது?' என்று அவர் அவர்களிடம் வினவ, அவர்கள், 'நேற்றுப் பிற்பகல் ஒருமணிக்கு காய்ச்சல் நீங்கியது' என்றார்கள்.

53 'உம் மகன் பிழைத்துக் கொள்வான்' என்று இயேசு அந்நேரத்தில்தான் கூறினார் என்பதை அவன் தந்தை நினைவுகூர்ந்தார். அவரும் அவர் வீட்டார் அனைவரும் இயேசுவை நம்பினர்.

54 யேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தபிறகு செய்த இரண்டாவது அரும் அடையாளம் இதுவே.

சிந்தனை : 

சனி, 25 மார்ச், 2017

தவக்காலம் நான்காம் வாரம் ஞாயிறு (26-3-2017)

இன்றைய நற்செய்தி : யோவான் 9:1-41

1 இயேசு சென்றுகொண்டிருக்கும்போது பிறவியிலேயே பார்வையற்ற ஒருவரைக் கண்டார்.
2 'ரபி, இவர் பார்வையற்றவராய்ப் பிறக்கக்;காரணம் இவர் செய்த பாவமா? இவர் பெற்றோர் செய்த பாவமா?' என்று இயேசுவின் சீடர்கள் அவரிடம் கேட்டார்கள்.
3 அவர் மறுமொழியாக, 'இவர் செய்த பாவமும் அல்ல இவர் பெற்றோர் செய்த பாவமும் அல்ல. கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும் பொருட்டே இப்படிப் பிறந்தார்.
4 பகலாய் இருக்கும் வரை என்னை அனுப்பியவரின் செயலை நாம் செய்ய வேண்டியிருக்கிறது. இரவு வருகிறது. அப்போது யாரும் செயலாற்ற இயலாது.
5 நான் உலகில் இருக்கும்வரை நானே உலகின் ஒளி' என்றார்.
6 இவ்வாறு கூறியபின் அவர் தரையில் உமிழ்ந்து, உமிழ்நீரால் சேறு உண்டாக்கி, அச்சேற்றைப் பார்வையற்றவருடைய கண்களில் பூசி,
7 'நீர் சிலோவாம் குளத்துக்குப் போய்க் கண்களைக் கழுவும்' என்றார். சிலோவாம் என்பதற்கு 'அனுப்பப்பட்டவர்' என்பது பொருள். அவரும் போய்க் கழுவிப் பார்வை பெற்றுத் திரும்பி வந்தார்.
8 அக்கம் பக்கத்தாரும், அவர் பிச்சையெடுத்துக் கொண்டிருந்ததை முன்பு பார்த்திருந்தோரும், 'இங்கே அமர்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்தவர் இவர் அல்லவா?' என்று பேசிக்கொண்டனர்.
9 சிலர், 'அவரே' என்றனர்; வேறு சிலர் 'அவரல்ல. அவரைப்போல் இவரும் இருக்கிறார்' என்றனர். ஆனால் பார்வை பெற்றவர், 'நான்தான் அவன்' என்றார்.
10 அவர்கள், 'உமக்கு எப்படிப் பார்வை கிடைத்தது?' என்று அவரிடம் கேட்டார்கள்.
11 அவர் அவர்களைப் பார்த்து, 'இயேசு எனப்படும் மனிதர் சேறு உண்டாக்கி, என் கண்களில் பூசி, 'சிலோவாம் குளத்துக்குப் போய்க் கண்களைப் கழுவும்' என்றார். நானும் போய்க் கழுவினேன்; பார்வை கிடைத்தது' என்றார்.
12 'அவர் எங்கே?' என்று அவர்கள் கேட்டார்கள். பார்வை பெற்றவர், 'எனக்குத் தெரியாது' என்றார்.
13 முன்பு பார்வையற்றவராய் இருந்த அவரை அவர்கள் பரிசேயரிடம் கூட்டிவந்தார்கள்.
14 இயேசு சேறு உண்டாக்கி அவருக்குப் பார்வை அளித்தநாள் ஓர் ஓய்வுநாள்.
15 எனவே, 'எப்படிப் பார்வை பெற்றாய்?' என்னும் அதே கேள்வியைப் பரிசேயரும் கேட்டனர்.
16 பரிசேயருள் சிலர், 'ஓய்வுநாள் சட்டத்தைக் கடைப்பிடிக்காத இந்த ஆள் கடவுளிடமிருந்து வந்திருக்க முடியாது' என்று பேசிக் கொண்டனர். ஆனால் வேறு சிலர், 'பாவியான ஒரு மனிதரால் இத்தகைய அரும் அடையாளங்களைச் செய்ய இயலுமா?' என்று கேட்டனர். இவ்வாறு அவர்களிடையே பிளவு ஏற்பட்டது.
17 அவர்கள் பார்வையற்றிருந்தவரிடம், 'உனக்குப் பார்வை அளித்த அந்த ஆளைக் குறித்து நீ என்ன சொல்கிறாய்?' என்று மீண்டும் கேட்டனர். 'அவர் ஓர் இறைவாக்கினர்' என்றார் பார்வை பெற்றவர்.
18 அவர் பார்வையற்றிருந்து இப்போது பார்வை பெற்றுள்ளார் என்பதை அவருடைய பெற்றோரைக் கூப்பிட்டுக் கேட்கும்வரை யூதர்கள் நம்பவில்லை.
19 'பிறவியிலேயே பார்வையற்றிருந்தான் என நீங்கள் கூறும் உங்கள் மகன் இவன்தானா? இப்போது இவனுக்கு எப்படிக் கண் தெரிகிறது?' என்று கேட்டார்கள்.
20 அவருடைய பெற்றோர் மறுமொழியாக, 'இவன் எங்களுடைய மகன்தான். இவன் பிறவிலேயே பார்வையற்றவன்தான்.
21 ஆனால் இப்போது எப்படி அவனுக்குக் கண் தெரிகிறது என்பதோ யார் அவனுக்குப் பார்வை அளித்தார் என்பதோ எங்களுக்குத் தெரியாது. அவனிடமே கேளுங்கள். அவன் வயது வந்தவன் தானே! நடந்ததை அவனே சொல்லட்டும்' என்றனர்.
22 யூதர்களுக்கு அஞ்சியதால்தான் அவருடைய பெற்றோர் இப்படிக் கூறினர். ஏனெனில் இயேசுவை மெசியாவாக ஏற்றுக் கொள்ளும் எவரையும் தொழுகைக் கூடத்திலிருந்து விலக்கிவிடவேண்டும் என்று யூதர்கள் ஏற்கெனவே தங்களிடையே உடன்பாடு செய்திருந்தார்கள்.
23 அதனால் அவருடைய பெற்றோர், 'அவன் வயதுவந்தவன் தானே! அவனிடமே கேட்டுக்கொள்ளுங்கள்' என்றனர்.
24 பார்வையற்றிருந்தவரை யூதர்கள் இரண்டாம் முறையாகக் கூப்பிட்டு அவரிடம், 'உண்மையைச் சொல்லிக் கடவுளை மாட்சிப்படுத்து. இம்மனிதன் ஒரு பாவி என்பது எங்களுக்குத் தெரியும்' என்றனர்.
25 பார்வை பெற்றவர் மறுமொழியாக, 'அவர் பாவியா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஒன்று மட்டும் எனக்குத் தெரியும்; நான் பார்வையற்றவனாய் இருந்தேன்; இப்போது பார்வை பெற்றுள்ளேன்' என்றார்.
26 அவர்கள் அவரிடம், 'அவன் உனக்கு என்ன செய்தான்? எப்படிப் பார்வை அளித்தான்?' என்று கேட்டார்கள்.
27 அவர் மறுமொழியாக, 'ஏற்கெனவே நான் உங்களிடம் சொன்னேன். அப்போது நீங்கள் கேட்கவில்லை. இப்போது மீண்டும் ஏன் கேட்க விரும்புகிறீர்கள்? ஒரு வேளை நீங்களும் அவருடைய சீடர்கள் ஆக விரும்புகிறீர்களோ?' என்று கேட்டார்.
28 அவர்கள் அவரைப் பழித்து, 'நீ அந்த ஆளுடைய சீடனாக இரு. நாங்கள் மோசேயின் சீடர்கள்.
29 மோசேயோடு கடவுள் பேசினார் என்பது எங்களுக்குத் தெரியும்; இவன் எங்கிருந்து வந்தான் என்பதே தெரியாது' என்றார்கள்.
30 அதற்கு அவர் 'இது வியப்பாய் இல்லையா? எனக்குப் பார்வை அளித்திருக்கிறார்; அப்படியிருந்தும் அவர் எங்கிருந்து வந்தவர் எனத் தெரியாது என்கிறீர்களே!
31 பாவிகளுக்குக் கடவுள் செவிசாய்ப்பதில்லை இறைப்பற்றுடையவராய்க் கடவுளின் திருவுளப்படி நடப்பவருக்கே அவர் செவி சாய்க்கிறார் என்பது நமக்குத் தெரியும்.
32 பிறவிலேயே பார்வையற்றிருந்த ஒருவர் பார்வை பெற்றதாக வரலாறே இல்லையே!
33 இவர் கடவுளிடமிருந்து வராதவர் என்றால் இவரால் எதுவுமே செய்திருக்க இயலாது' என்றார்.
34 அவர்கள் அவரைப் பார்த்து, 'பிறப்பிலிருந்தே பாவத்தில் மூழ்கிக் கிடக்கும் நீயா எங்களுக்குக் கற்றுத் தருகிறாய்?' என்ற சொல்லி அவரை வெளியே தள்ளினர்.
35 யூதர்கள் அவரை வெளியே தள்ளிவிட்டதைப்பற்றி இயேசு கேள்விப்பட்டார்; பின் அவரைக் கண்டபோது, 'மானிடமகனிடம் நீர் நம்பிக்கை கொள்கிறீரா?' என்று கேட்டார்.
36 அவர் மறுமொழியாக, 'ஐயா, அவர் யார்? சொல்லும். அப்போது நானும் அவரிடம் நம்பிக்கை கொள்வேன்' என்றார்.
37 இயேசு அவரிடம், 'நீர் அவரைப் பார்த்திருக்கிறீர்! உம்மோடு பேசிக்கொண்டிருப்பவரே அவர்' என்றார்.
38 அவர், 'ஆண்டவரே, நம்பிக்கைகொள்கிறேன்' என்று கூறி அவரை வணங்கினார்.
39 அப்போது இயேசு, 'தீர்ப்பு அளிக்கவே நான் இவ்வுலகிற்கு வந்தேன்; பார்வையற்றோர் பார்வை பெறவும் பார்வையுடையோர் பார்வையற்றோர் ஆகவுமே வந்தேன்' என்றார்.
40 அவரோடு இருந்த பரிசேயர் இதைக் கேட்டபோது, 'நாங்களுமா பார்வையற்றோர்?' என்று கேட்டனர்.
41 இயேசு அவர்களிடம், 'நீங்கள் பார்வையற்றோராய் இருந்திருந்தால், உங்களிடம் பாவம் இராது. ஆனால் நீங்கள் 'எங்களுக்குக் கண் தெரிகிறது' என்கிறீர்கள். எனவே நீங்கள் பாவிகளாகவே இருக்கிறீர்கள்' என்றார்.

சிந்தனை: 
மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்திகளும் ஒத்தமைவு நற்செய்திகள் என்றழைக்கப்படுகின்றன. இந்த மூன்று நற்செய்திகளிலும் இயேசுவின் பிறப்பு, பணிவாழ்வு, போதனைகள், புதுமைகள், பாடுகள், இறப்பு, உயிர்ப்பு போன்ற அடிப்படையானத் தரவுகள் பெரும்பாலும் ஒன்று போலவே தரப்பட்டிருக்கின்றன. கால அடிப்படையில் மாற்கு நற்செய்தியே முதன்முதலில் எழுதப்பட்டது. அதனை ஆதாரமாகக் கொண்டு, மேலும் தங்களுக்குக் கிடைத்த புதிய தரவுகளையும் சேர்த்தே மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்தியாளர்கள் எழுதினர். 

ஆனால் யோவான் நற்செய்தியானது ஒரு தனித்துவமான அமைப்பினையும், பெரும்பாலும் ஒத்தமைவு நற்செய்திகள் கூறாத செய்திகளையும் தாங்கி நிற்கிறது. செய்திகளை மட்டுமே நேரடியாகக் கூறாமல், செய்திகளுக்குப் பின்னால் இயேசு ஆண்டவரைப் பற்றிய ஆழமான இறையியல் கருத்துக்களைத் தாங்கி நிற்கும் கருவூலமாகத் திகழ்கின்றது.

கடந்த வாரம் ஞாயிரன்று நாம் தியானித்த சமாரியப் பெண்ணுக்கும், இயேசுவுக்குமான உரையாடல் ஒரு அருமையான எடுத்துக்காட்டாகும். இயேசுவை அப்பெண் முதலில் யூதர் என்றும், பின்னர் இறைவாக்கினர் என்றும், தொடர்ந்து இறைமகன் என்றும் அடையாளம் கண்டுகொள்வார். இயேசு ஆண்டவர் அப்பெண்ணின் பார்வையில் இருக்கும் திரையினை, அவரோடு உரையாடுவதன் மூலம் மெல்ல மெல்ல நீக்குகிறார். அப்பெண்ணின் மூலம் அவரது ஊரே இயேசு ஆண்டவரை மெசியா என்று அடையாளம் கண்டுகொள்வதாக அப்பகுதி நிறைவடையும். 

அது போலவே இன்றைய நற்செய்திப் பகுதியும் மிகவும் ஆழமான இறையியல் கருத்துக்களைத் தாங்கி நிற்கின்றது. 'ஆழமான இறையியல்' என்பது ஆராய்ச்சியாளர்கள் மட்டும் புரிந்து கொள்வது என்று பொருள் கொள்வதற்கல்ல. மாறாக ஒவ்வொரு உரையாடலையும் நாம் சற்றுப் பொறுமையாக உள்வாங்கி வாசித்தால், அவை நம் உள்ளத்தையும் தொட்டுப் பேசும். நாமும் அந்த உரையாடல்களின் கதாபாத்திரங்களாவோம். ஒவ்வொருவரின் வாழ்வின் அனுபவங்களிலிருந்து இயேசுவை ஒவ்வொருவரும் பார்க்கும் பார்வைகளே இந்த நற்செய்தியின் சாரம்சமாகும். 

எப்படியாவது இயேசுவை மாட்டிவிட்டு அவரது வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கத் துடித்துக்கொண்டிருக்கும் யூதர்கள் 'உண்மையைச் சொல்லிக் கடவுளை மாட்சிப்படுத்து. இம்மனிதன் ஒரு பாவி என்பது எங்களுக்குத் தெரியும்' என்கிறார்கள். அவர்களின் பார்வையில் ஓய்வு நாளில் குணமாக்குவது பாவம். அதனடிப்படையில் மாசற்றச் செம்மறியாகிய இறைவனையேப் பாவி என்று சொல்லத் துணிகிறார்கள். அதிகார வெறி, அதைத் தக்கவைக்க கடுமையானச் சட்டங்கள், சுயநலம், பொறாமை போன்ற துர்குணங்கள் அவர்கள் கண்களை மறைத்துவிட்டமையால் அவர்கள் கண்களிருந்தும் பார்வையற்றவர்களே! 

ஆனால் பிறவியிலிருந்தே கண்பார்வையற்ற நபரோ, இயேசு ஆண்டவரின் அரும்செயலை அனுபவித்தவராய், அவரோடு உரையாடுபவராய் மாறிய பின்னர், 'ஆண்டவரே, நம்பிக்கைகொள்கிறேன்' என்று கூறி அவரை வணங்குகிறார். இந்த நற்செய்திப் பகுதியை நம் வாழ்வோடு இணைத்துப் பார்த்து  வாசிக்கும் போது நாமும் நம் ஆண்டவர் இயேசுவை இன்னும் நெருக்கமாகக் கண்டுகொள்வோம். அவரில் நம்பிக்கை கொண்டு, வாழ்வில் எதிர்வரும் சவால்களைக் கண்டுப் பதறாமல், பார்வை பெற்றவர்களாய் துணிவோடு எதிர்கொள்வோம். 

செபம் : நாங்கள் பார்வை பெறவேண்டும் ஆண்டவரே! எங்கள் சகோதர சகோதரிகளை நாங்கள் அடையாளம் கண்டுகொள்ளத் தடையாக எங்கள் கண்களை மறைத்திருக்கும் நிறம், இனம், மொழி, சாதியப் பாகுபாடுகளை முற்றிலும் களைந்திட நாங்கள் பார்வை பெறவேண்டும். தீமையின் கவர்ச்சிகள் எங்கள் கண்களை மறைக்காமல், நன்மையின் கனிகளை நாங்கள் கண்டுணரப் பார்வை பெற வேண்டும். நாங்கள் பார்வை பெறவேண்டும்!

வெள்ளி, 24 மார்ச், 2017

தவக்காலம் மூன்றாம் வாரம் சனி (25-3-2017)

இன்றைய நற்செய்தி : லூக்கா 1:26-38

26 ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார்.
27 அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா.
28 வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, 'அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்' என்றார்.
29 இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார்.
30 வானதூதர் அவரைப் பார்த்து, 'மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர்.
31 இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்.
32 அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார்.
33 அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது' என்றார்.
34 அதற்கு மரியா வானதூதரிடம், 'இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!' என்றார்.
35 வானதூதர் அவரிடம், 'தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்.
36 உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம்.
37 ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை' என்றார்.
38 பின்னர் மரியா, 'நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்' என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.

சிந்தனை : இன்று கபிரியேல் வான தூதர் அன்னை மரியாளுக்கு மங்கள வார்த்தை கூறிய பெருநாளைத் தாயாம் திருச்சபையானது கொண்டாடி மகிழ்கின்றது. அன்னை மரியாளைக் குறித்த விசுவாசப் பேருண்மைகள் நான்கு. அன்னை மரியாள் இறைவனின் தாய் (சனவரி 1), எப்பொழுதும் கன்னி (மார்ச் 25), விண்ணேற்படைந்தவர் (ஆகஸ்டு 15), மற்றும் அமல உற்பவி (டிசம்பர் 8) என்ற இந்த நான்கு பேருண்மைகளும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் விசுவாச வாழ்விலிருந்து பிரிக்க இயலாதவைகளாகத் திருச்சபை வரையறுத்துக் கூறுகின்றது. அன்னை மரியாள் நம் ஆண்டவரைக் கருத்தாங்கிய இன்றைய நாளிலிருந்து பத்தாவது மாதமாகிய டிசம்பர் 25 அன்று கிறிஸ்து பிறப்பு விழாவினைக் கொண்டாடுகின்றோம். தூய ஆவியால் நிரப்பப்பட்ட அன்னை, பாவத்தின் கறைபடாது தன் வாழ்வை விலைமதிப்பற்றப் பலியாக இறைவனுக்குக் கையளித்தன் மூலம் விண்ணக, மண்ணகத் திருச்சபையின் தாயாகவும் திகழ்கின்றார். இது எங்ஙனம் ஆகும் என்று அன்று அன்னை மரியாள் கேட்ட அதே கேள்வியைத்தான் இன்றும் நம்மிடமிருந்து பிரிந்த சகோதரர்களும் கேட்கின்றனர். அதற்கானப் பதிலை வானதூதரே கூறுகின்றார்: 'கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை'. அன்னை மரியாள் இந்த இறைவார்த்தையை முழுமையாக நம்பினார். 'இதோ ஆண்டவரின் அடிமை. உம் சொற்படியே எனக்கு ஆகட்டும்' என்றார். நாமும் அன்னை மரியாளின் பரிசுத்தக் கன்னிமையிலும், தாய்மையிலும் முழுமையாக நம்மை ஒப்புக் கொடுத்தவர்களாக அவரோடு இணைந்து சொல்வோமா? 

செபம்: 'இறைவா! இதோ உம் அடிமை! உம் சொற்படியே எனக்கு ஆகட்டும்! இன்பமோ, துன்பமோ, அவற்றைத் துணிவோடு ஏற்றுக்கொண்டு, கிறிஸ்துவின் அன்பில் நாங்கள் நாளும் வளர்ந்து, அன்னை மரியாள் பெற்றுக் கொண்ட விண்ணகப் பேரின்ப வாழ்வை நாங்களும் பெற்றுக்கொள்வோமாக! அன்னையே! திக்கற்றவற்களுக்கு ஆதரவே! எங்களின் கண்ணீரை, துன்பத்தை, பலவீனங்களை நன்கு அறிந்தவரே! எங்கள் கைகளைப் பிடித்து வழிநடத்தும்! உம்மைப் போன்ற தூய வாழ்வை நாங்களும் வாழ எங்களுக்குத் தேவையான மனத்துணிவைத் தாரும்! 

வியாழன், 23 மார்ச், 2017

தவக்காலம் மூன்றாம் வாரம் வெள்ளி (24-3-2017)

இன்றைய நற்செய்தி : மாற்கு 12:28-34

28 அவர்கள் வாதாடிக்கொண்டிருப்பதைக் கேட்டுக்கொண்டிருந்த மறைநூல் அறிஞருள் ஒருவர், இயேசு அவர்களுக்கு நன்கு பதில் கூறிக்கொண்டிருந்ததைக் கண்டு அவரை அணுகி வந்து, 'அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?' என்று கேட்டார்.

29 அதற்கு இயேசு, 'இஸ்ரயேலே கேள். நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர்.

30 உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழுமனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு கூர்வாயாக' என்பது முதன்மையான கட்டளை.

31 'உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக' என்பது இரண்டாவது கட்டளை. இவற்றைவிட மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை' என்றார்.

32 அதற்கு மறைநூல் அறிஞர் அவரிடம், 'நன்று போதகரே, 'கடவுள் ஒருவNர் அவரைத் தவிர வேறு ஒரு கடவுள் இல்லை' என்று நீர் கூறியது உண்மையே.

33 அவரிடம் முழு இதயத்தோடும் முழு அறிவோடும் முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும், தன்னிடம் அன்புகொள்வது போல் அடுத்திருப்பவரிடம் அன்பு செலுத்தவதும் எரிபலிகளையும் வேறுபலிகளையும்விட மேலானது' என்று கூறினார்.

34 அவர் அறிவுத்திறனோடு பதிலளித்ததைக் கண்ட இயேசு அவரிடம், 'நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை' என்றார். அதன்பின் எவரும் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.


சிந்தனை: இயேசு நம்மைப் பார்த்தும் 'நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை' என்று சொல்ல வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்? நமது கடமைகளை சரிவர செய்ய வேண்டும். அவரது அன்புப் பிள்ளைகளாகிய நாம் அனுதினமும் அவரை அன்பு செய்ய வேண்டும். அவரது அன்பிற்காகவும், இரக்கத்திற்காகவும் காலையும், மாலையும், எல்லா வேளையும் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். இதுவே முதன்மையானக் கட்டளை. இரண்டாவது கட்டளை அடுத்தவரை அன்பு செய்வது. இரண்டு கட்டளைகளும் ஒன்றை ஒன்று இணைந்தும், பிணைந்துமே இருக்கின்றன. ஒன்றுக்கு பதில் இன்னொன்று அல்ல. ஒன்றை ஒன்று நிறைவு செய்வதாகவும், பொருள் தருவதாகவும், துணை செய்வதாகவும் இருக்கின்றன. குறிப்பாக சில நபர்களை அன்பு செய்வது கடினமாக இருக்கும் நேரத்தில், அந்த நபருக்காக செபிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது. கடவுளை அன்பு செய்வோம். அந்த அனுபவத்தை பிறரோடு பகிர்ந்து கொள்வோம்.

செபம்: அன்பு இறைவா! எங்கள் இதயங்களை நன்கு அறிந்தவரே! எங்கள் முதன்மையானக் கடமைகளையும், கட்டளைகளையும் முழு ஆர்வத்தோடு நாங்கள் நிறைவேற்ற எங்களுக்குத் துணை செய்யும். இந்த நாளை உமது ஆசீரால் நிரப்பும். இன்று நாங்கள் சந்திக்கும் எல்லா நபர்களையும் உமது அன்பு அனுபவத்தால் அரவணைக்க அருள் தாரும்.


புதன், 22 மார்ச், 2017

தவக்காலம் மூன்றாம் வாரம் வியாழன் (23-3-2017)

இன்றைய நற்செய்தி : லூக்கா 11:14-23

14 ஒரு நாள் இயேசு பேச்சிழந்த ஒருவரிடமிருந்து பேயை ஓட்டினார். பேய் வெளியேறவே, பேச்சற்ற அவர் பேசினார். கூட்டத்தினர் வியந்து நின்றனர்.
15 அவர்களுள் சிலர், 'பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்' என்றனர்.
16 வேறு சிலர் அவரைச் சோதிக்கும் நோக்குடன், வானத்திலிருந்து ஏதேனும் ஓர் அடையாளம் காட்டுமாறு அவரிடம் கேட்டனர்.
17 இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து, அவர்களிடம் கூறியது 'தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் பாழாய்ப்போகும். அவ்வாறே பிளவுபடும் வீடும் விழுந்துவிடும்.
18 சாத்தானும் தனக்கு எதிராகத் தானே பிளவுபட்டுப் போனால் அவனது அரசு எப்படி நிலைத்து நிற்கும்? பெயல்செபூலைக் கொண்டு நான் பேய்களை ஓட்டுகிறேன் என்கிறீர்களே.
19 நான் பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறேன் என்றால் உங்களைச் சேர்ந்தவர்கள் யாரைக் கொண்டு பேய் ஓட்டுகிறார்கள்? ஆகவே அவர்களே உங்கள் கூற்று தவறு என்பதற்குச் சாட்சிகள்.
20 நான் கடவுளின் ஆற்றலால் பேய்களை ஓட்டுகிறேன் என்றால் இறையாட்சி உங்களிடம் வந்துள்ளது அல்லவா!
21 வலியவர் ஆயதம் தாங்கித் தம் அரண்மனையைக் காக்கிறபோது அவருடைய உடைமைகள் பாதுகாப்பாக இருக்கும்.
22 அவரைவிட மிகுந்த வலிமையுடையவர் ஒருவர் வந்து அவரை வென்றால் அவர் நம்பியிருந்த எல்லாப் படைக் கலங்களையும் பறித்துக் கொண்டு, கொள்ளைப் பொருளையும் பங்கிடுவார்.
23 என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார்; என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறச் செய்கிறார்.

சிந்தனை : 

செவ்வாய், 21 மார்ச், 2017

தவக்காலம் மூன்றாம் வாரம் புதன் (22-3-2017)

இன்றைய நற்செய்தி : மத்தேயு 5:17-19


17 திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்.

18 விண்ணும் மண்ணும் ஒழிந்து போகுமுன் திருச்சட்டம் யாவும் நிறைவேறும். அதன் ஒரு சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.

19 எனவே, இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார். இவையனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார்.

சிந்தனை : 

திங்கள், 20 மார்ச், 2017

தவக்காலம் மூன்றாம் வாரம் செவ்வாய் (21-3-2017)

இன்றைய நற்செய்தி : மத்தேயு 18: 21-35

21 பின்பு பேதுரு இயேசுவை அணுகி, 'ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா? எனக் கேட்டார்.
22 அதற்கு இயேசு அவரிடம் கூறியது; 'ஏழுமுறை மட்டுமல்ல எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன்.
23 விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்; ஓர் அரசர் தம் பணியாளர்களிடம் கணக்குக் கேட்க விரும்பினார்.
24 அவர் கணக்குப் பார்க்கத் தொடங்கியபொழுது, அவரிடம் பத்தாயிரம் தாலந்து கடன்பட்ட ஒருவனைக் கொண்டு வந்தனர்.
25 அவன் பணத்தைத் திருப்பிக் கொடுக்க இயலாத நிலையில் இருந்தான். தலைவரோ, அவனையும் அவன் மனைவி மக்களோடு அவனுக்குரிய உடைமைகள் யாவற்றையும் விற்றுப் பணத்தைத் திருப்பி அடைக்க ஆணையிட்டார்.
26 உடனே அப்பணியாள் அவர் காலில் விழுந்து பணிந்து, 'என்னைப் பொறுத்தருள்க எல்லாவற்றையும் உமக்குத் திருப்பித் தந்து விடுகிறேன்' என்றான்.
27 அப்பணியாளின் தலைவர் பரிவு கொண்டு அவனை விடுவித்து அவனது கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தார்.
28 ஆனால் அப்பணியாள் வெளியே சென்றதும், தன்னிடம் நூறு தெனாரியம் கடன்பட்டிருந்த உடன் பணியாளர் ஒருவரைக் கண்டு, 'நீ பட்ட கடனைத் திருப்பித் தா' எனக்கூறி அவரைப் பிடித்துக் கழுத்தை நெரித்தான்.
29 உடனே அவனுடைய உடன் பணியாளர் காலில் விழுந்து, என்னைப் பொறுத்தருள்க நான் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்' என்று அவனைக் கெஞ்சிக் கேட்டார்.
30 ஆனால் அவன் அதற்கு இசையாது, கடனைத் திருப்பி அடைக்கும்வரை அவரைச் சிறையிலடைத்தான்.
31 அவருடைய உடன் பணியாளர்கள் நடந்ததைக் கண்டபோது மிகவும் வருந்தித் தலைவரிடம் போய் நடந்தவற்றையெல்லாம் விளக்கிக் கூறினார்கள்.
32 அப்போது தலைவர் அவனை வரவழைத்து, 'பொல்லாதவனே, நீ என்னை வேண்டிக் கொண்டதால் அந்தக் கடன் முழுவதையும் உனக்குத் தள்ளுபடி செய்தேன்.
33 நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல நீயும் உன் உடன்பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லவா? என்று கேட்டார்.
34 அத்தலைவர் சினங் கொண்டவராய், அனைத்துக் கடனையும் அவன் அடைக்கும்வரை அவனை வதைப்போரிடம் ஒப்படைத்தார்.
35 உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்கா விட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்.

சிந்தனை: 

தவக்காலம் மூன்றாம் வாரம் திங்கள்(20-3-2017)

இன்றைய நற்செய்தி : மத்தேயு 1:16-18, 21-24

16 யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு.
17 ஆக மொத்தம் ஆபிரகாம்முதல் தாவீது வரை தலைமுறைகள் பதினான்கு; தாவீது முதல் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் வரை தலைமுறைகள் பதினான்கு; பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் முதல் கிறிஸ்து வரை தலைமுறைகள் பதினான்கு.
18 இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்; அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார்.
21 அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்'; என்றார்.
22-23 'இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்' என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால் கடவுள் நம்முடன் இருக்கிறார் என்பது பொருள்.
24 யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்.

சிந்தனை : இன்று அன்னை மரியாவின் அன்புக் கணவரும், மனுவுறு கொண்ட நம் மீட்பர் இயேசுவின் வளர்ப்புத் தந்தையுமான புனித யோசேப்புவின் பெருவிழா. அப்பா என்ற வார்த்தைக்குள் அச்சமின்மை, பாதுகாப்பு, உழைப்பு, கனிவு, கண்டிப்பு, தியாகம் என்ற எண்ணற்ற வார்த்தைகள் ஒளிந்துகொண்டிருக்கின்றன. பிறக்கும் எல்லாக் குழந்தைகளுக்குமே தங்கள் வாழ்வின் முதல் கதாநாயகன் அவர்களது தந்தைதான்.  இயேசு ஆண்டவரும் இதற்கு விதிவிலக்கானவர் அல்ல என்பதையும், அவரது வளர்ப்புத் தந்தை எந்த அளவிற்கு அவரது ஆளுமையைப் பாதித்திருக்கிறார் என்பதையும், இயேசு ஆண்டவரின் பிற்காலப் பணிவாழ்வு நமக்கு எடுத்துக்காட்டுகிறது. அவரது எல்லாப் பணிகளுக்குமே அடிப்படையாக இருந்தது அவரது 'அப்பா ஆன்மீகமே'. கடவுள் ஒரு அரசர், கண்டிப்பான நீதிபதி, என்றெல்லாம் கற்பிதங்கள் மேலோங்கியிருந்த சமயத்தில், கடவுளை அப்பா என்று கண்டுகொண்டவர் இயேசு. நாமும் அவ்வாறே 'அப்பா! தந்தாய்' என்று அழைக்க கற்றுக்கொடுத்தவர் இயேசு. அப்பா கடவுளின் பண்பு நலன்கள் எப்படிப்பட்டவை என்பதை ஊதாரி மைந்தன் உவமையின் வாயிலாகச் சுட்டிக்காட்டுகிறார். இத்தகைய அடிப்படை ஆன்மீகத்தை இயேசுவின் உருவாக்கியதில் நீதிமானாக விளங்கிய, அன்னை மரியாளை பல இக்கட்டானச் சூழல்களில் பாதுகாத்த, தச்சுத் தொழிலால் தன் குடும்பத்தைப் பராமரித்த நல்ல அப்பா யோசேப்புக்கு முதன்மையானப் பங்கு இருக்கிறது. புனித யோசேப்புவே எங்கள் குடும்பங்களின் தலைவர்களாகிய எல்லா அப்பாக்களையும் ஆசீர்வதியும். தங்கள் கடமையையும், கொடையையும் உணர்ந்தவர்களாக, உம்மைப் போன்ற முன்மாதிரியான அப்பாக்களாக அவர்கள் வாழ துணைசெய்யும், 

செபம் : அருள் நிறைந்த யேசேப்புவே வாழ்க! ஆண்டவர் உம்முடனே! ஆண்களுக்குள் பேரு பெற்றவர் நீரே! இப்பூவுலகில் உம்முடையப் பாதுகாவலில் வளர்க்கப்பட்ட உம் அன்பு மகனாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே! தூய யோசேப்புவே, இயேசுவின் தந்தையே! பாவிகளாகிய எங்களுக்காக இப்பொழுதும் எப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும்! ஆமென்!

சனி, 18 மார்ச், 2017

தவக்காலம் மூன்றாம் வாரம் ஞாயிறு (19-3-2017)

இன்றைய நற்செய்தி : யோவான் 4: 5-42

5 அவர் சமாரியாவில் உள்ள சிக்கார் என்னும் ஊருக்கு வந்து சேர்ந்தார். யாக்கோபு தம் மகன் யோசேப்புக்குக் கொடுத்த நிலத்துக்கு அருகே அந்த ஊர் இருந்தது.
6 அவ்வூரில் யாக்கோபின் கிணறும் இருந்தது. பயணத்தால் களைப்புற்றிருந்த இயேசு கிணற்று ஓரமாய் அமர்ந்தார். அப்போது ஏறக்குறைய நண்பகல்.
7 அவருடைய சீடர் உணவு வாங்குவதற்காக நகருக்குள் சென்றிருந்தனர். சமாரியப் பெண் ஒருவர் தண்ணீர் மொள்ள வந்தார்.
8 இயேசு அவரிடம், 'குடிக்க எனக்குத் தண்ணீர் கொடும்' என்று கேட்டார்.
9 அச் சமாரியப் பெண் அவரிடம், 'நீர் யூதர்; நானோ சமாரியப் பெண். நீர் என்னிடம் குடிக்கத் தண்ணீர் கேட்பது எப்படி?' என்று கேட்டார். ஏனெனில் யூதர்கள் சமாரியரோடு பழகுவதில்லை.
10 இயேசு அவரைப் பார்த்து, 'கடவுளுடைய கொடை எது என்பதையும் 'குடிக்கத் தண்ணீர் கொடும்' எனக் கேட்பவர் யார் என்பதையும் நீர் அறிந்திருந்தால் நீரே அவரிடம் கேட்டிருப்பீர்; அவரும் உமக்கு வாழ்வு தரும் தண்ணீரைக் கொடுத்திருப்பார்' என்றார்.
11 அவர் இயேசுவிடம், 'ஐயா, தண்ணீர் மொள்ள உம்மிடம் ஒன்றுமில்லை; கிணறும் ஆழமானது. அப்படியிருக்க வாழ்வு தரும் தண்ணீர் உமக்கு எங்கிருந்து கிடைக்கும்?
12 எம் தந்தை யாக்கோபை விட நீர் பெரியவரோ? அவரே எங்களுக்கு இக்கிணற்றை வெட்டித் தந்தார். அவரும் அவருடைய மக்களும் கால்நடைகளும் இதிலிருந்துதான் தண்ணீர் குடிப்பது வழக்கம்' என்றார்.
13 இயேசு அவரைப் பாhத்து, 'இந்தத் தண்ணீரைக் குடிக்கும் ஒவ்வொருவருக்கும் மீண்டும் தாகம் எடுக்கும்.
14 நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது; நான் கொடுக்கும் தண்ணீர் அதைக் குடிப்பவருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலைவாழ்வு அளிக்கும்' என்றார்.
15 அப்பெண் அவரை நோக்கி, 'ஐயா, அத்தண்ணீரை எனக்குக் கொடும்; அப்போது எனக்குத் தாகமும் எடுக்காது; தண்ணீர் மொள்ள நான் இங்கு வரத்தேவையும் இருக்காது' என்றார்.
16 இயேசு அவரிடம், 'நீர் போய், உம் கணவரை இங்கே கூட்டிக் கொண்டு வாரும்' என்று கூறினார்.
17 அப்பெண் அவரைப் பார்த்து, 'எனக்குக் கணவர் இல்லையே' என்றார். இயேசு அவரிடம், 'எனக்குக் கணவர் இல்லை' என நீர் சொல்வது சரியே.
18 உமக்கு ஐந்து கணவர்கள் இருந்தார்கள் என்றாலும் இப்போது உம்முடன் இருப்பவர் உம் கணவர் அல்ல. எனவே நீர் கூறியது உண்மையே' என்றார்.
19 அப்பெண் அவரிடம், 'ஐயா, நீர் ஓர் இறைவாக்கினர் எனக் கண்டுகொண்டேன்.
20 எங்கள் முன்னோர் இம்மலையில் வழிபட்டுவந்தனர். ஆனால் நீங்கள் எருசலேமில்தான் வழிபட வேண்டும் என்கிறீர்களே' என்றார்.
21 இயேசு அவரிடம், 'அம்மா, என்னை நம்பும். காலம் வருகிறது. அப்போது நீங்கள் தந்தையை இம்மலையிலோ எருசலேமிலோ வழிபடமாட்டீர்கள்.
22 யாரை வழிபடுகிறீர்கள் எனத் தெரியாமல் நீங்கள் வழிபடுகிறீர்கள். ஆனால் நாங்கள் தெரிந்து வழிபடுகிறோம். யூதரிடமிருந்தே மீட்பு வருகிறது.
23 காலம் வருகிறது; ஏன், வந்தேவிட்டது! அப்போது உண்மையாய் வழிபடுவோர் தந்தையை அவரது உண்மை இயல்புக்கேற்ப உள்ளத்தில் வழிபடுவர்.
24 கடவுள் உருவமற்றவர். அவரை வழிபடுவோர் அவரது உண்மை இயல்புக்கு ஏற்ப உள்ளத்தில்தான் வழிபட வேண்டும்' என்றார்.
25 அப்பெண் அவரிடம், 'கிறிஸ்து எனப்படும் மெசியா வருவார் என எனக்குத் தெரியும். அவர் வரும்போது அனைத்தையும் எங்களுக்கு அறிவிப்பார்' என்றார்.
26 இயேசு அவரிடம், 'உம்மோடு பேசும் நானே அவர்' என்றார்.
27 அந்நேரத்தில் இயேசுவின் சீடர் திரும்பி வந்தனர். பெண் ஒருவரிடம் அவர் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு அவர்கள் வியப்புற்றனர். எனினும் 'என்ன செய்ய வேண்டும்?' என்றோ, 'அவரோடு என்ன பேசுகிறீர்?' என்றோ எவரும் கேட்கவில்லை.
28 அப்பெண் தம் குடத்தை விட்டுவிட்டு ஊருக்குள் சென்று மக்களிடம்,
29 'நான் செய்த எல்லாவற்றையும் என்னிடம் சொன்ன மனிதரை வந்து வாருங்கள். அவர் மெசியாவாக இருப்பாரோ!' என்றார்.
30 அவர்கள் ஊரிலிருந்து புறப்பட்டு இயேசுவிடம் வந்தார்கள்.
31 அதற்கிடையில் சீடர், 'ரபி, உண்ணும்' என்று வேண்டினர்.
32 இயேசு அவர்களிடம், 'நான் உண்பதற்குரிய உணவு ஒன்று உண்டு. அது உங்களுக்குத் தெரியாது' என்றார்.
33 'யாராவது அவருக்கு உணவு கொடுத்திருப்பார்களோ' என்று சீடர்கள் தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.
34 இயேசு அவர்களிடம், 'என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதும் அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதுமே என் உணவு.
35 'நான்கு மாதங்களுக்குப் பின்தான் அறுவடை' என்னும் கூற்று உங்களிடையே உண்டே! நிமிர்ந்து வயல்வெளிகளைப் பாருங்கள். பயிர் முற்றி அறுவடைக்குத் தயாராய் உள்ளது.
36 அறுப்பவர் கூலி பெறுகிறார்; நிலைவாழ்வு பெறுவதற்காக மக்களைக் கூட்டிச் சேர்க்கிறார். இவ்வாறு விதைப்பவரும் அறுப்பவரும் ஒருமிக்க மகிழ்ச்சியடைகின்றனர்.
37 நீங்கள் உழைத்துப் பயிரிடாததை அறுவடை செய்ய நான் உங்களை அனுப்பினேன். மற்றவர்கள் உழைத்தார்கள்; ஆனால் நீங்கள் அந்த உழைப்பின் பயனை அடைந்தீர்கள்.
38 இவ்வாறு 'விதைப்பவர் ஒருவர்; அறுவடை செய்பவர் வேறு ஒருவர்' என்னும் கூற்று உண்மையாயிற்று' என்றார்.
39 'நான் செய்தவை அனைத்தையும் என்னிடம் சொன்னார்' என்று சான்று பகர்ந்த பெண்ணின் வார்த்தையை முன்னிட்டு அவ்வூரிலுள்ள சமாரியர் பலர் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர்.
40 சமாரியர் அவரிடம் வந்தபோது அவரைத் தங்களோடு தங்குமாறு கேட்டுக்கொண்டனர். அவரும் அங்கு இரண்டு நாள் தங்கினார்.
41 அவரது வார்த்தையை முன்னிட்டு இன்னும் பலர் அவரை நம்பினர்.
42 அவர்கள் அப்பெண்ணிடம், 'இப்போது உன் பேச்சைக் கேட்டு நாங்கள் நம்பவில்லை; நாங்களே அவர் பேச்சைக் கேட்டோம். அவர் உண்மையிலே உலகின் மீட்பர் என அறிந்து கொண்டோம்' என்றார்கள்.

சிந்தனை : 

வெள்ளி, 17 மார்ச், 2017

தவக்காலம் இரண்டாம் வாரம் சனி (18-3-2017)

இன்றைய நற்செய்தி : லூக்கா 15:1-3,11-32

1 வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கிவந்தனர்.
2 பரிசேயரும், மறைநூல் அறிஞரும், 'இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே' என்று முணுமுணுத்தனர்.
3 அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்;

11. 'ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள்.
12 அவர்களுள் இளையவர் தந்தையை நோக்கி, 'அப்பா, சொத்தில் எனக்கு உரிய பங்கைத் தாரும்' என்றார். அவர் சொத்தை அவர்களுக்குப் பகிர்ந்து அளித்தார்.
13 சில நாள்களுக்குள் இளைய மகன் எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு, தொலை நாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டார்; அங்குத் தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார்.
14 அனைத்தையும் அவர் செலவழித்தார். பின்பு அந்த நாடு முழுவதும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் வறுமையில் வாடினார்;
15 எனவே அந்நாட்டுக் குடிமக்களுள் ஒருவரிடம் அண்டிப் பிழைக்கச் சென்றார். அவர் அவரைப் பன்றி மேய்க்கத் தம் வயல்களுக்கு அனுப்பினார்.
16 அவர் பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார். ஆனால் அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை.
17 அவர் அறிவு தெளிந்தவராய், 'என் தந்தையின் கூலியாள்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு இருக்க, நான் இங்குப் பசியால் சாகிறேனே!
18 நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், 'அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்;
19 இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக் கொள்ளும் என்பேன்' என்று சொல்லிக்கொண்டார்.
20 'உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வந்தார். தொலையில் வந்துகொண்டிருந்தபோதே அவர் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார்.
21 மகனோ அவரிடம், 'அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்' என்றார்.
22 தந்தை தம் பணியாளரை நோக்கி, 'முதல்தரமான ஆடையைக் கொண்டுவந்து இவனுக்கு உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்;
23 கொழுத்த கன்றைக் கொண்டு வந்து அடியுங்கள்; நாம் மகிழ்ந்து விருந்து கொண்டாடுவோம்.

24 ஏனெனில் என் மகன் இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர் பெற்று வந்துள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்' என்றார். அவர்கள் மகிழ்ந்து விருந்து கொண்டாடத் தொடங்கினார்கள்.

25 'அப்போது மூத்த மகன் வயலில் இருந்தார். அவர் திரும்பி வீட்டை நெருங்கி வந்துகொண்டிருந்தபோது, ஆடல் பாடல்களைக் கேட்டு,
26 ஊழியர்களுள் ஒருவரை வரவழைத்து, 'இதெல்லாம் என்ன?' என்று வினவினார்.
27 அதற்கு ஊழியர் அவரிடம்,  'உம் தம்பி வந்திருக்கிறார். அவர் தம்மிடம் நலமாகத் திரும்பி வந்திருப்பதால் உம் தந்தை கொழுத்த கன்றை அடித்திருக்கிறார்' என்றார்.
28 அவர் சினமுற்று உள்ளே போக விருப்பம் இல்லாதிருந்தார். உடனே அவருடைய தந்தை வெளியே வந்து, அவரை உள்ளே வருமாறு கெஞ்சிக் கேட்டார்.
29 அதற்கு அவர் தந்தையிடம், 'பாரும், இத்தனை ஆண்டுகளாக நான் அடிமைபோன்று உமக்கு வேலை செய்துவருகிறேன். உம் கட்டளைகளை ஒருபோதும் மீறியதில்லை. ஆயினும், என் நண்பரோடு நான் மகிழ்ந்துகொண்டாட ஓர் ஆட்டுக்குட்டியைக்கூட என்றுமே நீர் தந்ததில்லை.
30 ஆனால் விலைமகளிரோடு சேர்ந்து உம் சொத்துகளையெல்லாம் அழித்துவிட்ட இந்த உம் மகன் திரும்பி வந்தவுடனே, இவனுக்காகக் கொழுத்த கன்றை அடித்திருக்கிறீரே!' என்றார்.
31 அதற்குத் தந்தை, 'மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்; என்னுடையதெல்லாம் உன்னுடையதே.
32 இப்போது நாம் மகிழ்ந்துகொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்' என்றார்.'

சிந்தனை : 
கடந்த வழிபாட்டு ஆண்டினைத் தாயாம் திருச்சபையானது இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டாக கொண்டாடி மகிழ்ந்தது. இரக்கத்தின் ஆண்டானது அறிவிக்கப்பட்ட போது உலகின் புறச்சூழலானது போர் மேகம் சூழந்ததாக இருந்தது. உலகெங்கும் வன்முறை வெறிபிடித்து ஆடியது. கடற்கரையோரங்களின் மீன் குஞ்சுகளைப் போல மடிந்து கிடந்தனர் மனிதக்குழந்தைகள். அகதிகளாக கடலில் தத்தளித்தவர்களைக் கரை சேரக்கூட அனுமதிக்காத வெறுப்புக்காற்று பரவிக்கிடந்தது. உலகின் நாகரீகமான நகராக அறியப்பட்ட பாரிஸ் நகரம் தீவிரவாதத் தீயில் எரிந்துகொண்டிருந்தது. துருக்கி, ஏமன், சிரியா போன்ற நாடுகள் குண்டுவெடிப்புகளின் உக்கிரத்தால் வாழ இயலா தேசங்களாகிக்கொண்டிருந்தன. இராணுவத்தினரைப் பழிவாங்குவதற்காக அவர்களது குழந்தைகள் படித்தப் பள்ளியில் புகுந்த தீவிரவாதிகள் இரக்கமற்று சுட்டுத்தள்ளியதில் பிஞ்சுக் குழந்தைகளின் இரத்த ஆறு பெஷாவர் நகரில் ஓடியதை உலகமே பார்த்துப் பதறியது. இது போன்ற பல பதற்றமான புறச்சூழல்களுக்கு மத்தியில்தான் திருச்சபை இரக்கத்தின் யூபிலி ஆண்டை அறிவித்தது. போருக்கும், வெறுப்புக்கும் பதிலாக நாம் இரக்த்தையும், மன்னிப்பையும் பற்றி அதிகமாகப் பேசினோம். எண்ணற்றக் கிறிஸ்தவர்கள் துப்பாக்கிச் சூட்டிற்கும், வன்முறைக்கும் பலியாகிக் கொண்டிருந்த நேரத்தில், நாம் மனிதாபிமானத்தை முன்னிறுத்தி மத வேறுபாடுகளின்றி அகதிகளுக்குப் புகலிடம் அளித்தோம். வெறுப்புக்கு பதில் வெறுப்பு அல்ல! காயத்திற்கு மருந்து இன்னொரு காயம் அல்ல! மன்னிப்பு எளிதான ஒரு மதிப்பீடு அல்ல! அது பல வலிகளையும், இழப்புகளையும், துரோகங்களையும் தாண்டி வரவேண்டிய துணிச்சல்.  திருச்சபை இயேசு ஆண்டவரின் இரக்கத்திற்கு இன்னும் அதிகம் அதிகமாய் சான்று பகரவேண்டும். அதற்காக எம் இரத்தம் சிந்தப்படினும் அது எமக்கு மகிழ்ச்சியே. அன்பின் ஆட்சி மலரட்டும்! 

செபம் :
மனம் மாறி திரும்பி வந்த இளைய மகனை மன்னித்து, ஏற்றுக்கொண்டு, அரவணைத்த தந்தையைப் போல் இறைவா, நாங்களும் எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தவர்களை மன்னிக்கும் மனதினைத் தாரும். யாருக்கும் நாங்கள் 'பெரிய அண்ணனாக' இல்லாமல், உண்மையான சகோதரனாய், சகோதரியாய் வாழத் தேவையான ஆற்றலைத் தாரும். எங்கள் முயற்சியாலோ, நற்செயல்களாலோ அல்ல, உமது இரக்கத்தாலும், அன்பாலுமே நாங்கள் மீட்கப்படுவோம் என்ற உண்மையை நாங்கள் உணர்ந்தவர்களாய், தாழ்ச்சி என்னும் விழுமியத்தை வாழ்வின் எல்லாத் தருணங்களிலும் கடைபிடிக்கும் அருளைத் தாரும்! 

வியாழன், 16 மார்ச், 2017

தவக்காலம் இரண்டாம் வாரம் வெள்ளி (17-3-2017)

இன்றைய நற்செய்தி : மத்தேயு 21: 33-43,45


33 'மேலும் ஓர் உவமையைக் கேளுங்கள்; நிலக்கிழார் ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டு, சுற்றிலும் வேலி அடைத்து அதில் பிழிவுக்குழி வெட்டி ஒரு காவல் மாடமும் கட்டினார்; பின்பு தோட்டத் தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு விட்டுவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார்.

34 பழம் பறிக்கும் காலம் நெருங்கி வந்த போது அவர் தமக்குச் சேர வேண்டிய பழங்களைப் பெற்று வரும்படி தம் பணியாளர்களை அத்தோட்டத் தொழிலாளர்களிடம் அனுப்பினார்.

35 தோட்டத் தொழிலாளர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து, ஒருவரை நையப் புடைத்தார்கள்; ஒருவரைக் கொலை செய்தார்கள்; ஒருவரைக் கல்லால் எறிந்தார்கள்.

36 மீண்டும் அவர் முதலில் அனுப்பியவர்களைவிட மிகுதியான வேறு சில பணியாளர்களை அனுப்பினார். அவர்களுக்கும் அப்படியே அவர்கள் செய்தார்கள்.

37 தம் மகனை மதிப்பார்கள் என்று அவர் நினைத்துக் கொண்டு அவரை இறுதியாக அவர்களிடம் அனுப்பினார்.

38 அம்மகனைக் கண்ட போது தோட்டத் தொழிலாளர்கள், 'இவன்தான் சொத்துக்கு உரியவன்; வாருங்கள், நாம் இவனைக் கொன்று போடுவோம்; அப்போது இவன் சொத்து நமக்குக் கிடைக்கும்' என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.

39 பின்பு அவர்கள் அவரைப் பிடித்து, திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொன்றுபோட்டார்கள்.

40 எனவே, திராட்சைத் தோட்ட உரிமையாளர் வரும்போது அத்தொழிலாளர்களை என்ன செய்வார்?' என இயேசு கேட்டார்.

41 அவர்கள் அவரிடம், 'அத்தீயோரை ஈவிரக்கமின்றி ஒழித்து விடுவார்; உரிய காலத்தில் தமக்கு சேரவேண்டிய பங்கைக் கொடுக்க முன்வரும் வேறுதோட்டத் தொழிலாளர்களுக்கு அத்திராட்சைத் தோடடத்தைக் குத்தகைக்கு விடுவார்' என்றார்கள்.

42 இயேசு அவர்களிடம், 'கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று. ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது; நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!' என்று நீங்கள் மறைநூலில் ஒருபோதும் வாசித்தது இல்லையா?

43 எனவே உங்களிடமிருந்து இறையாட்சி அகற்றப்படும்; அவ்வாட்சிக்கு ஏற்ற முறையில் செயல்படும் ஒரு மக்களினத்தார் அதற்கு உட்படுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

45 தலைமைக் குருக்களும் பரிசேயரும் அவருடைய உவமைகளைக் கேட்டபோது, தங்களைக் குறித்தே அவர் கூறினார் என்று உணர்ந்து கொண்டனர்.

சிந்தனை : 

புதன், 15 மார்ச், 2017

தவக்காலம் இரண்டாம் வாரம் வியாழன் (16-3-2017)

இன்றைய நற்செய்தி : லூக்கா 16-19-31

19 'செல்வர் ஒருவர் இருந்தார். அவர் விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார்.

20 இலாசர் என்னும் பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார். அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது. அவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகே கிடந்தார்.

21 அவர் செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தம் பசியாற்ற விரும்பினார். நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும்.

22 அந்த ஏழை இறந்தார். வானதூதர்கள் அவரை ஆபிரகாமின் மடியில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். செல்வரும் இறந்தார். அவர் அடக்கம் செய்யப்பட்டார்.

23 அவர் பாதாளத்தில் வதைக்கப்பட்டபோது அண்ணாந்து பார்த்துத் தொலையில் ஆபிரகாமையும் அவரது மடியில் இலாசரையும் கண்டார்.

24 அவர், 'தந்தை ஆபிரகாமே, எனக்கு இரங்கும்; இலாசர் தமது விரல் நுனியைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிரச்செய்ய அவரை அனுப்பும். ஏனெனில் இந்தத் தீப்பிழம்பில் நான் மிகுந்த வேதனைப்படுகிறேன்' என்று உரக்கக் கூறினார்.

25 அதற்கு ஆபிரகாம், 'மகனே, நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய்; அதே வேளையில் இலாசர் இன்னல்களையே அடைந்தார். அதை நினைத்துக் கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகிறார்; நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய்.

26 அன்றியும் எங்களுக்கும் உங்களுக்கும் இடையே பெரும் பிளவு ஒன்று உள்ளது. ஆகையால் இங்கிருந்து ஒருவர் உங்களிடம் வர விரும்பினாலும் கடந்து வர இயலாது. அங்கிருந்து நீங்கள் எங்களிடம் கடந்து வரவும் இயலாது' என்றார்.

27 அவர், 'அப்படியானால் தந்தையே, அவரை என் தந்தை வீட்டுக்கு அனுப்புமாறு உம்மிடம் வேண்டுகிறேன்.

28 எனக்கு ஐந்து சகோதரர்கள் உண்டு. அவர்களும் வேதனை மிகுந்த இந்த இடத்திற்கு வராதவாறு அவர் அவர்களை எச்சரிக்கலாமே' என்றார்.

29 அதற்கு ஆபிரகாம், 'மோசேயும் இறைவாக்கினர்களும் அவர்களுக்கு உண்டு. அவர்களுக்குச் செவிசாய்க்கட்டும்' என்றார்.

30 அவர், 'அப்படியல்ல, தந்தை ஆபிரகாமே, இறந்த ஒருவர் அவர்களிடம் போனால் அவர்கள் மனம் மாறுவார்கள்' என்றார்.

31 ஆபிரகாம், 'அவர்கள் மோசேக்கும் இறைவாக்கினருக்கும் செவிசாய்க்காவிட்டால், இறந்த ஒருவர் உயிர்த்தெழுந்து அவர்களிடம் போனாலும் நம்பமாட்டார்கள்' என்றார்.

சிந்தனை : 

செவ்வாய், 14 மார்ச், 2017

தவக்காலம் இரண்டாம் வாரம் புதன் (15-3-2017)

இன்றைய நற்செய்தி : மத்தேயு 20-17-28

17 இயேசு எருசலேமை நோக்கிச் செல்லும் வழியில் பன்னிரு சீடரையும் தனியே அழைத்து,

18 'இப்பொழுது நாம் எருசலேமுக்குச் செல்கிறோம். மானிட மகன் தலைமைக் குருக்களிடமும், மறைநூல் அறிஞர்களிடமும் ஒப்புவிக்கப்படுவார். அவர்கள் அவருக்கு மரண தண்டனை விதிப்பார்கள்.

19 அவர்கள் அவரை ஏளனம் செய்து, சாட்டையால் அடித்து, சிலுவையில் அறையும்படி பிற இனத்தவரிடம் ஒப்புவிப்பார்கள். ஆனால் அவர் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படுவார்' என்று அவர்களிடம் கூறினார்.

20 பின்பு செபதேயுவின் மனைவி தம் மக்களோடு ஒரு வேண்டுகோள் விடுக்குமாறு இயேசுவிடம் வந்து பணிந்து நின்றார்.

21 'உமக்கு என்ன வேண்டும்?' என்று இயேசு அவரிடம் கேட்டார். அவர், 'நீர் ஆட்சி புரியும்போது என் மக்களாகிய இவர்கள் இருவருள் ஒருவன் உமது அரியணையின் வலப்புறமும் இன்னொருவன் இடப்புறமும் அமரச் செய்யும்' என்று வேண்டினார்.

22 அதற்கு இயேசு, 'நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கப்போகும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா?' என்று கேட்டார். அவர்கள் 'எங்களால் இயலும்' என்றார்கள்.

23 அவர் அவர்களை நோக்கி, 'ஆம், என் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். ஆனால் என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவதோ எனது செயல் அல்ல் மாறாக அவ்விடங்களை என் தந்தை யாருக்கு ஏற்பாடு செய்திருக்கிறாரோ அவர்களுக்கே அவை அருளப்படும்' என்றார்.

24 இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துப்பேரும் அச்சகோதரர் இருவர் மீதும் கோபங் கொண்டனர்.

25 இயேசு அவர்களை வரவழைத்து, 'பிற இனத்தவரின் தலைவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். உயர்குடி மக்கள் அவர்கள்மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள்; இதை நீங்கள் அறிவீர்கள்.

26 உங்களிடையே அப்படி இருக்கக் கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும்.

27 உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் உங்களுக்குப் பணியாளராக இருக்கட்டும்.

28 இவ்வாறே மானிட மகனும் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாக தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்' என்று கூறினார்.

சிந்தனை : 

திங்கள், 13 மார்ச், 2017

தவக்காலம் இரண்டாம் வாரம் செவ்வாய் (14-3-2017)

இன்றைய நற்செய்தி : மத்தேயு 23:1-12

1 பின்பு இயேசு மக்கள் கூட்டத்தையும் தம் சீடரையும் பார்த்துக் கூறியது;

2 'மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மோசேயின் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர்.

3 ஆகவே அவர்கள் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள். ஆனால் அவர்கள் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில் அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்ட மாட்டார்கள்.

4 சுமத்தற்கரிய பளுவான சுமைகளைக் கட்டி மக்களின் தோளில் அவர்கள் வைக்கிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் விரலால் தொட்டு அசைக்கக் கூட முன்வரமாட்டார்கள்.

5 தாங்கள் செய்வதெல்லாம் மக்கள் பார்க்க வேண்டும் என்றே அவர்கள் செய்கிறார்கள்; தங்கள் மறைநூல் வாசகப் பட்டைகளை அகலமாக்குகிறார்கள்; அங்கியின் குஞ்சங்களைப் பெரிதாக்குகிறார்கள்.

6 விருந்துகளில் முதன்மையான இடங்களையும் தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விரும்புகின்றார்கள்;

7 சந்தைவெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் ரபி என அழைப்பதையும் விரும்புகிறார்கள்.

8 ஆனால் நீங்கள் 'ரபி' என அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் உங்களுக்குப் போதகர் ஒருவரே. நீங்கள் யாவரும் சகோதரர், சகோதரிகள்.

9 இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம். ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார்.

10 நீங்கள் ஆசிரியர் எனவும் அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர்.

11 உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும்.

12 தம்மைத்தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப்பெறுவர். தம்மைத்தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர்.

சிந்தனை :

ஞாயிறு, 12 மார்ச், 2017

தவக்காலம் இரண்டாம் வாரம் திங்கள் (13-3-2017)

இன்றைய நற்செய்தி : லூக்கா 6:36-38

36 உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்.

37 'பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்குள்ளாக மாட்டீர்கள். மற்றவர்களைக் கண்டனம் செய்யாதீர்கள்; அப்போதுதான் நீங்களும் கண்டனத்துக்கு ஆளாக மாட்டீர்கள். மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள்.

38 கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும். '

சிந்தனை : 
இயேசு ஆண்டவர் இன்றைய நற்செய்தி வழியாகக் கூறும் செய்திகள் மிகத் தெளிவாக உள்ளன. அவற்றிற்கு யாரும் விளக்கம் அளிக்கத் தேவையில்லை. வாழ்வின் வழியாக வாழ்ந்து காட்டவே நமக்கு அழைப்பு விடுக்கின்றன. மன்னியுங்கள் மன்னிப்பு பெறுவீர்கள். கொடுங்கள். உங்களுக்குக் கொடுக்கப்படும். அறிவியல் வகுப்பில் சொல்லிக்கொடுப்பதைப் புரிந்து கொள்ளச் சிரமப்படும் மாணவன், செயல்முறை வகுப்பில் எளிதாக விளங்கிக்கொள்வதைப் பார்த்திருக்கிறோம். இயேசுவின் வார்த்தைகளும் செயல்படுத்திப்பார்க்கும் போதுதான் உண்மையிலேயே நாம் விளங்கிக் கொள்ள முடியும்..... அதன் முழுப்பயனையும் அடையமுடியும். இன்றே முயற்சிக்கலாமா?

சனி, 11 மார்ச், 2017

தவக்காலம் இரண்டாம் ஞாயிறு (12-3-2017)

இன்றைய நற்செய்தி : மத்தேயு 17:1-9

1 ஆறு நாள்களுக்குப் பின்பு இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயர்ந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார்.

2 அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளிபோன்று வெண்மையாயின.

3 இதோ! மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக்கொண்டிருந்தனர்.

4 பேதுரு இயேசுவைப் பார்த்து, 'ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? இது உமக்கு விருப்பமா?' என்றார்.

5 அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது ஒளிமயமான மேகம் ஒன்று அவர்கள்மேல் நிழலிட்டது. அந்த மேகத்தினின்று, 'என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்' என்று ஒரு குரல் ஒலித்தது.

6 அதைக் கேட்டதும் சீடர்கள் மிகவும் அஞ்சி முகங்குப்புற விழுந்தார்கள்.

7 இயேசு அவர்களிடம் வந்து அவர்களைத் தொட்டு, 'எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள்' என்றார்.

8 அவர்கள் நிமிர்ந்து பார்த்தபோது இயேசு ஒருவரைத்தவிர வேறு எவரையும் காணவில்லை.

9 அவர்கள் மலையிலிருந்து இறங்கிவந்தபோது இயேசு, 'மானிட மகன் இறந்து உயிருடன் எழுப்பப்படும்வரை இக்காட்சியைப்பற்றி எவருக்கும் சொல்லக்கூடாது' என அவர்களுக்குக் கட்டளையிட்டார்.


சிந்தனைக்கு:

வெள்ளி, 10 மார்ச், 2017

தவக்காலம் முதல்வாரம் சனி

இன்றைய நற்செய்தி : மத்தேயு 5:43-48

43 உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக ', 'பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள்.

44 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்.

45 'இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள். ஏனெனில் அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார்.

46 உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்துவீர்களானால் உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்? வரி தண்டுவோரும் இவ்வாறு செய்வதில்லையா?

47 நீங்கள் உங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு மட்டும் வாழ்த்துக் கூறுவீர்களானால் நீங்கள் மற்றவருக்கும் மேலாகச் செய்துவிடுவதென்ன? பிற இனத்தவரும் இவ்வாறு செய்வதில்லையா?

48 ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்

சிந்தனை

தவக்காலம் முதல்வாரம் வெள்ளி

இன்றைய நற்செய்தி : மத்தேயு 5:20-26

20 மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில், நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது என உங்களுக்குச் சொல்கிறேன்.

21 'கொலை செய்யாதே; கொலை செய்கிறவர் எவரும் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவர்' என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப் பட்டிருக்கிறீர்கள்.

22 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; 'தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்; தம் சகோதரரையோ சகோதரியையோ 'முட்டாளே' என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்; 'அறிவிலியே' என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார்.

23 ஆகையால் நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால்,

24 அங்கேயே பலிபீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.

25 உங்கள் எதிரி உங்களை நீதிமன்றத்துக்குக் கூட்டிச் செல்லும் போது வழியிலேயே அவருடன் விரைவாக உடன்பாடு செய்துகொள்ளுங்கள். இல்லையேல் உங்கள் எதிரி நடுவரிடம் உங்களை ஒப்படைப்பார். நடுவர் காவலரிடம் ஒப்படைக்க, நீங்கள் சிறையில் அடைக்கப்படுவீர்கள்.

26 கடைசிக் காசு வரை திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்கு சொல்கிறேன்.

சிந்தனை:

வியாழன், 9 மார்ச், 2017

தவக்காலம் முதல் வாரம் வியாழன்

இன்றைய நற்செய்தி : மத்தேயு 7:7-12

7 கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்.

8 ஏனெனில், கேட்போர் எல்லாரும் பெற்றுக் கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும்.

9 உங்களுள் எவராவது ஒருவர் அப்பத்தைக் கேட்கும் தம் பிள்ளைக்குக் கல்லைக் கொடுப்பாரா?

10 அல்லது, பிள்ளை மீன் கேட்டால் பாம்பைக் கொடுப்பாரா?

11 தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணுலகில் உள்ள உங்கள் தந்தை தம்மிடம் கேட்போருக்கு இன்னும் மிகுதியாக நன்மைகள் அளிப்பார் அல்லவா!

12 ஆகையால் பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். இறைவாக்குகளும் திருச்சட்டமும் கூறுவது இதுவே.


சிந்தனை:

கேட்க வேண்டும். சிறிதாக அல்லாமல் பெரிதாக! எதைக் கேட்கலாம்? இறைவன் தன்னையேத் தருவதற்குத் தயாராக இருக்கும் போது அவரையல்லாமல் எதைக் கேட்டாலும் சரியல்ல தானே? இறைவா எங்களோடு தங்கும்! தேடுவதற்கான ஆர்வத்தையும், தட்டுவதற்கான ஆற்றலையும் இழந்து இன்னும் இந்த வாழ்க்கையில் ஏதேனும் மிச்சம் இருக்கிறதா? என்று சோர்ந்து போகும் உள்ளங்களில் தங்கும் ஆண்டவரே! இந்த நொடி நான் வாழ்கிறேன் என்றால் அதுவே உமது கொடை என்னும் நன்றியுணர்வும், செயல்படும் உள்ளமும் தந்து வழிநடத்தும் இறைவா! உம் பாதம் சரணம்!