காலச்சுவடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காலச்சுவடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 5 அக்டோபர், 2020

யாவரும் கேளிர்!


கடந்த வாரம் புதன் கிழமை! ரோமிலிருந்து செரினோலா வந்து கொண்டிருந்தேன். மாடிப்பேருந்தின் மேல் பகுதியில் இடதுபுறம் ஒரு சன்னலோர இருக்கை எனக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. மதியம் 4 மணிக்கு பேருந்து திபுர்த்தினா நிலையத்திலிருந்து ஆமை தன் வீட்டைச் சுமந்துகொண்டு செல்வது போல அசைந்து நகரத் தொடங்கியது. கொரோனா காலம் என்பதால் பயணிகள் அமர வேண்டிய இருக்கையில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் வெண்ணிற உறையிட்டிருந்தார்கள். பக்கத்து இருக்கையைக் காலியாக விட்டிருந்தார்கள். 

பேருந்து அவ்வப்போது பெருமூச்சு விட்டுக்கொண்டு முன்னோக்கி விரைந்துகொண்டிருந்தது. அப்பொழுதுதான் கவனித்தேன். எனது முன் இருக்கையில் ஒரு நபர் தொடர்ந்து இருமிக்கொண்டிருந்தார். அவருக்கு ஒதுக்கப்பட்ட உறையிடப்பட்ட இருக்கையில் அமராமல் சன்னலோரத்தில் சாய்ந்து கொண்டு, இருமும் போது மட்டும் அந்த இடுக்கில் முகத்தை என் பக்கம் திருப்பிக்கொள்வார். பார்ப்பதற்கு பங்களாதேசி போலிருந்தார். அவரிடம் மெதுவாக "ஸ்கூசி, ஸ்கூசி" (மன்னிக்கவும்! மன்னிக்கவும்) என்று பவ்யமாகக் கூப்பிட்டு, வலது பக்கத்தில் உறையிடப்பட்ட இருக்கையில் இருக்குமாறு கூறினேன். முதலில் நான் சொல்வது காதில் விழாதது போல அப்படியே இருந்தார். பிறகு வேகமாக ஒரு யூ-டர்ன் போட்டுத் திரும்பி, "உன் வேலையைப் பார்த்துக்கொண்டு இரு" என்றார். "இல்லை தாங்கள் செய்வது தவறு! நடத்துனர் பார்த்தால் திட்டுவார்" என்றேன். அவர் கண்டுகொள்ளவே இல்லை. 

கொரோனா போன்ற பேரிடர் காலத்தில் கூட விதிமுறைகளைப் பின்பற்றாவிட்டால் அது எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று என்னுள் ஒரு சினம் எழுந்தது. நடத்துனரிடம் சென்று முறையிடப்போவதாச் சொன்னேன். யாரிடமும் சொல் என்னும் தொனியில் ஒரு சூயிங்கத்தைச் "சவுக், சவுக்"கென்று சவைத்துக்கொண்டே ஒரு ஏளனப்பார்வை பார்த்தார். எழுந்து சென்று படியிறங்கி, கீழே ஓட்டுநரிடம் சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருந்த நடத்துனரை இடைமறித்து விவரத்தை சொன்னேன். அவரும் வந்தார். அந்த நபரிடம் கடுமையானக் குரலில் இருக்கையை மாற்றி அமருமாரு கூறினார். அதற்கு அவர், "நீங்கள்தான் எனக்கு கட்டளையிட வேண்டும்! அவனல்ல!" என்று திரும்பத் திரும்பக் கூறினார். நடத்துனர் கடுப்பாகி "அவர் செய்தது மிகச்சரி. நீ உடனடியாக இருக்கையை மாற்று! அல்லது இறக்கிவிடப்படுவாய்" என்றார். 

வேறுவழியில்லாமல் இடம் மாறி அமர்ந்துவிட்டு, "இப்ப உனக்கு மகிழ்ச்சியா? நாப்பொலியில் பார்த்துக்கொள்கிறேன்!" என்றார். நாங்கள் நாப்பொலி என்னுமிடத்தில் இறங்கி வேறு பேருந்து மாறவேண்டியிருந்தது. திருட்டு, மிரட்டி பணம் பறித்தல், ரவுடியிசம் போன்றவற்றிற்கு பெயர் போன ஊர் நாப்பொலி. உடனடியாக இரண்டு மூன்று போன் பேசினார். கொஞ்சம் பயம் வந்துவிட்டது. எனது கைப்பையை எடுத்து மடியில் வைத்துக்கொண்டேன். மணி பர்ஸ் மற்றும் பிற டாக்குமென்டஸ் எல்லாம் லக்கேஜில் இருந்தது. நினைவுபடுத்திக்கொண்டேன்.

சிறிது நேர பயணத்திற்குப் பிறகு திரும்பி என்னிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தார். "எந்த நாடு" என்றார். நான் பதில் சொல்லவில்லை. "போனில் தமிழில் பேசினாய் என்று நினைக்கிறேன். இலங்கையா?" என்றார். பயத்திலும், பதில் சொல்ல விரும்பாமலும் "ஆமாம்" என்றேன். உடனே அவர் "நானும் இலங்கைதான். ஆனால் தமிழ் இல்லை. நீ இலங்கையில் எந்த இடம்?" என்றார். நான் "கொழும்பு" என்றேன். அவர் ஏதோ ஒரு ஊர் பெயர் சொன்னார். நான் மிகவும் குழம்பிவிட்டேன். பின் "இத்தாலியில் எந்த இடத்தில் இருக்கிறாய்?" என்றார். நான் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்து "உங்களிடம் என் தனிப்பட்ட விசயங்களைச் சொல்ல விரும்பவில்லை" என்றேன். அவர் "பயப்படாதே! பழையதை மறந்துவிடு! நாம் இருவரும் ஒரே நாட்டினர். அதனால்தான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். என்ன வேலை செய்கிறாய்?" என்றார். "நான் சொல்ல விரும்பவில்லை. உன்னிடம் பணிவாகத்தான் சொன்னேன். ஆனால் உனக்குக் கட்டளையிட்டதாகப் புரிந்துகொண்டு தகராறு பண்ணினாய். ஆகவே உன்னிடம் பேச விரும்பவில்லை" என்றேன். பத்துநிமிடம் பேருந்து ஒரு தேநீர் விடுதியில் நிற்கும் என்று நடத்துனர் அறிவித்தார். 

கீழே இறங்கியதும் வாசலில் எனக்காக அந்த நபர் காத்திருந்தார். "காபி குடிக்கிறாயா?" என்றார். நான் காபி குடிப்பதில்லை என்று முறித்துப் பதில் சொன்னேன். கழிப்பறை பயன்படுத்திவிட்டு வருவதைப் பார்த்து அந்த நபர் "பேருந்திலேயே கழிப்பறை இருக்கிறதே" என்றார். "நான் இல்லை விடுதியில் சுத்தமாக இருக்கும்" என்றேன். அவர் ஆயிரம் பேர் பயன்படுத்தும் இடமா சுத்தமாக இருக்கும்? என்று ஏதேதோ பேச்சிழுத்துக்கொண்டே இருந்தார். நான் முகம் கொடுக்காமல் எனது இருக்கைக்கு வந்தமர்ந்தேன். 

நாப்பொலியில் பேருந்து மாறவேண்டும். கைப்பையை பலமுறை செக் செய்து தோளில் மாட்டிக்கொண்டேன். பேருந்தின் வயிறு திறந்திருந்தது. மறக்காமல் எனது லக்கேஜை எடுத்து, ஸிப் எல்லாம் சரியாக மூடியிருக்கிறதா? என்று செக் செய்து கொண்டு விறுவறுவென்று நடக்க ஆரம்பித்தேன். அந்த நபரும் என் பின்னாலேயே வந்தார். அடுத்த பேருந்தில் கீழறையில் லக்கேஜை வைத்துவிட்டு எனது இருக்கையில் வந்தமர்ந்தேன். இன்னும் இரண்டு மணி நேரப் பயணம். இரவு 9.10 மணிக்கு செரினோலா வந்தடைந்தது. 

மென் துயிலில் திளைத்துக்கொண்டிருந்த என்னை நடத்துனரின் கரகர குரல் எழுப்பிவிட்டது. இரண்டு மூன்று பேர்கள் மட்டும் தான் இந்த நிறுத்தத்தில் இறங்க வேண்டியிருந்தது. சாலையில் மறுபக்கம் என்னை அழைத்துச்செல்ல சகோதரர் லூயிஜி நின்றுகொண்டு, என்னைப் பார்த்துவிட்டார் என்ற அர்த்தத்தில் கையசைத்துக்கொண்டிருந்தார். வேகமாக எழுந்து கைப்பையைத் தோளில் மாட்டிக்கொண்டு பேருந்திலிருந்து இறங்கினேன். அந்த நபரிடம் நான் விடைபெறவில்லை. ஒருவித அலட்சியத்தோடும், எரிச்சலோடும் முகத்தைத் திருப்பிக்கொண்டு பிசியான அந்த சாலையை சட்டென்று கடந்து காரில் ஏறிக்கொண்டேன். 

கார் கிளம்பவும் தான் நெஞ்சே அடைத்துவிடும் படி திக்கென்று நினைவுக்கு வந்தது. லக்கேஜ் எடுக்கவில்லை. லூயிஜி காரை நிறுத்தினான். தூரத்தில் பேருந்து இன்னும் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்து கொஞ்சம் நிம்மதியோடும், மறதியை நினைத்து வெட்கத்தோடும் ஓடினேன். அங்கு பேருந்து எனக்காக காத்திருந்தது. அந்த நபருக்கும், நடத்துனருக்கும் வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது. "இது என் சகோதரனின் பை. அவன் எப்படியும் வந்துவிடுவான். ஒரு நிமிடம் காத்திருங்கள்" என்று சொல்லிக்கொண்டிருந்தான் அந்த பெயர் தெரியாத சகோதரன். 


ஞாயிறு, 9 டிசம்பர், 2018

கடைசியாக ஒரு நல்ல செய்தி (An Inspirational Story of Kausalya Shankar)


நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம். பதின் பருவத்தின் நுழைவு வாயில். சாதாரணமாக எதிர் பாலின ஈர்ப்பு தொடங்கும் ஒரு வயது. எங்கள் பள்ளி இருபாலரும் சேர்ந்து படிக்கும் பள்ளியாக இருந்த போதிலும், ஆண், பெண் நட்பு பாராட்டுதல் முற்றிலும் பழக்கமில்லாத ஒரு காலகட்டம். அரசு பள்ளியாயிருந்த போதும் மாணாக்கர் எண்ணிக்கையின் காரணமாக ஒவ்வொரு வகுப்பும் ஏ, பி, சி என்று மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தது. ஏ பிரிவு ஆண்கள் மட்டும், பி பிரிவு பெண்கள் மட்டும், சி பிரிவு ஆண்-பெண் இருபாலருக்கும் என்ற விகிதமுறையானது இப்போது வரையிலும் என்னால் விளங்கிக்கொள்ளவே முடியவில்லை. அறிவுப் பெருந்தகையினரின் ஒப்பற்ற தீர்க்கத்தரிசனங்களைப் புரியாமலே வியக்கிறேன். 

பிறர்க்கின்னா முற்பகல் செய்த வினைப்பயனோ என்னமோ தெரியவில்லை! எனக்கு ஏழு-ஏ தான் கிடைத்தது. விரும்பத்தகாத ஒரு பிரிவு. வருணாசிரம தருமத்தின் அடிப்படையில் ஏ பிரிவுதான் சூத்திரர்களுக்கு அடுத்து வரும் கீழ் அடுக்கு. சரியான சேவல் பண்ணை. கரடுமுரடுகள் கல்விபயிலும் ஏ பிரிலும், கவித்துவத்திற்கு எந்த வாய்ப்பும் இல்லாத அப்பாலை நிலத்திலும் காதல் முளைத்தது. ஏழு-சி பயின்ற அந்தக் குழந்தையோடு (12 வயது சட்டப்படி பச்சைக் குழந்தை) டியூசன் படிக்கும் நண்பனிடம் எனக்கு அந்தக் குழந்தையைப் பிடிக்கும் என்றும், அந்தக் குழந்தைக்கு என்னைப் பிடிக்குமா? என்றும் கேட்டு வரச் சொன்னேன். மருந்துச் செடியின் பெயரை மறந்த அனுமான் மலையைப் பெயர்த்து எடுத்து வந்தது போல அவன் அதை எழுத்தில் பொறித்து அவளிடம் கொடுத்துவிட்டான். 

மறுநாள் காலை அந்தக் குழந்தை ஒரு துண்டுக்காகிதத்தோடு முத்தம்மாள் டீச்சரை நெருங்க 'எல்லாம் நிறைவேறிற்று' என்று என்னையே டீச்சரிடம் கையளித்தேன். 'உங்க அம்மாவிற்கு இப்படி ஒரு பையனா? உங்க அக்காவிற்கும், அண்ணனுக்கும் இப்படி ஒரு தம்பியா?' என்று கேள்வி-47 மூலம் துளைத்தெடுத்தார்கள். காட்டுத்தீயாய் இந்தச் செய்தி பரவியது. சில பழைய படங்களில் விபச்சாரக் குற்றம் சாட்டப்படும் பெண்ணைச் சுற்றி நின்று ஊர்வாய் பேசுவதை ஓசையின்றி காட்டுவார்களே! அது உண்மையாகவே அன்று நிகழ்ந்தது. அதற்கு நானே சாட்சி.

ஒரு சிறிய வயதில் நடந்த ஒரு சிறிய நிகழ்வுதான். ஆனால் நிரந்தரத் தழும்புகளை ஏற்படுத்தும் ஆற்றல் அதற்கு இருந்தது. காதலைப் பற்றி எழுத வேண்டும் என்று சில நாட்களாகவே நினைத்துக்கொண்டிருந்தேன்.  அதற்காகத் தான் இந்த முன் கதைச் சுருக்கம். 

சமீபத்தில் இரண்டு தமிழ்ப் படங்களைப் பார்த்தேன். பரியேறும் பெருமாள் மற்றும் 96. சாதிய நோய் தொற்றியிருக்கும் சமூகம் காதலைப் பார்த்து எபோலாவை விட அதிகமாக அஞ்சுகிறது. அதனால் தான் அதனை உடனே நசுக்கிவிடத் துடிக்கிறது. காதலை அழிப்பதைத் தெய்வத்திற்கு செய்யும் தொண்டாகக் கருதுகிறது. மார்ட்டின் லூதர் கிங் கண்ட கனவு ஒபாமா என்னும் கறுப்பினத்தவர் அதிபரான போது ஓரளவேனும் நிறைவேறியது போல, காதலுக்குத் தடை சொல்லாத தமிழ்ச் சமூகம் உருவாக இன்னும் எத்தனை தலைமுறைகள் நாம் காத்திருக்க வேண்டும்? காதலுக்கு எதிரான சமூக வன்முறைகளை புறநானூற்றின் போர்க்களம் போல வலியோடும், வலிமையோடும் ஆவணப்படுத்தியப் படம் பரியேறும் பெருமாள். 

96 ஒரு பதின் பருவக் காதலின் நினைவுகளை மென்மையாக அசை போடவைத்தது. அசைத்துப் போட்டது என்றும் சொல்லலாம். சொல்லத் துணிவில்லாமல், வெல்ல வழியில்லாமல், பெற்றோரைக் காயப்படுத்தக் கூடாது என்று, அக்காள்-தங்கையைக் கரை சேர்க்க என்று ராம்-களாலும், ஜானகிகளாலும் நிரம்பி வழிகின்றன நம் ஊரின் காதல் கதைகள். 96 ஒரு வலி(மை)மிகு அகத்துப் பாடல். 

திருமணத்தில் நிறைவேறாத இரண்டு காதல் கதைகளை இப்படங்கள் அற்புதமாகக் காட்சிப்படுத்தின. காதல் திருமணத்தில் தான் முடிய வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் திருமணங்களில் கட்டாயம் காதல் இருக்க வேண்டும் என்று பிடிவாதமாக நம்புகிறேன். 

நம் ஊரின் திருமணங்கள் விசித்திரமான பலவற்றை நம்புகிறது.  சொந்த சாதியில் இருக்க வேண்டும். சாதகம் பொருந்த வேண்டும். சொத்து, பணம், வேலை வேண்டும். மிகவும் பக்கத்திலும் இல்லாமல், மிகவும் தூரத்திலும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று திருமண தேர்வுக்கான எல்லைகளை ஒரு தீப்பெட்டி அளவில் சுருக்குகிறது. 27 அல்லது 29 என்ற ஒற்றைப்படை வயதில் இருக்க வேண்டும் என்பதெல்லாம் அபத்தத்தின் உச்சம். குழந்தை திருமணங்கள் தான் ஒழிக்கப்பட்டுள்ளன. ஆனால் குழந்தைத் தனமானத் திருமணங்களை ஒழிப்பது பற்றி யாருக்கும் அக்கறையில்லை. எங்கு பார்த்தாலும் அழுகையும், அங்கலாய்ப்புமாக இருக்கின்றன. ஏன் இதைப் பற்றி நாம் பேச மறுக்கிறோம்?

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் சராசரியாக 1000 ஆவணக் கொலைகள் நடப்பதாகவும், வருடந்தோறும் இதன் எண்ணிக்கை 796 சதவிதம் அதிகரிப்பதாகவும் தேசிய குற்ற ஆவணக்காப்பக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதுபோக விபத்தாக, தற்கொலையாக குருதி சிந்தியக் காதலர்கள் எத்தனைபேரோ?

அப்படி மார்ச் 13, 2016 அன்று உடுமலைப்பேட்டையில் மக்கள் நடமாட்டம் நிறைந்த வணிகவளாகத்தின் வாயிலில் பட்டப் பகலில் வெட்டிக் கொல்லப்பட்டவர்தான் சங்கர். தீவிர சிகிச்சைக்குப் பின் உயிர்தப்பியவர் அவரது காதல் மனைவி கவுசல்யா. கூலிப்படையை ஏவிக் கொன்றது கவுசல்யாவின் தந்தை என்னும் மனிதநிலைக்கு இன்னும் பரிணாம வளர்ச்சி பெறாத ஒரு மிருகம். அந்தக் கொலைக்கு ஆதரவாக எத்தனை சாதிய மிருகங்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் குரூரக் குரலை எழுப்புகின்றன என்பதைப் பார்க்கும் போது, நம் சமூகத்தில் வாழ்வதை விட வடக்கு சென்டினல் தீவே பாதுகாப்பானது என்று கருதுகிறேன்.

கடைசியாக ஒரு நல்ல செய்தியோடு முடிக்கிறேன். எதிர்காலத்திற்கான எல்லா வெளிச்சங்களையும் பறிகொடுத்தப் பிறகும் இனி இருந்தென்ன என்று முடங்கிவிடாமல் சாதியக் கொடுமைகளுக்கெதிராக இந்தியா முழுமைக்கும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது அன்புத் தங்கச்சி கவுசல்யாவின் குரல். சங்கர் சமூகநீதி அறக்கட்டளை மூலம் ஆவணக்கொலைகளுக்கெதிராக தனிச்சட்டம் வேண்டி சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார். 

இந்நிலையில் கடந்த 9-12-2018 அன்று பறையிசைக் கலைஞரான சக்தி என்பவரை தந்தை பெரியார் திராவிடக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் வைத்து சாதிமறுப்பு மறுமணம் செய்து கொண்டார். கொலையுண்ட சங்கரின் பாட்டி மாலை எடுத்துக்கொடுக்க, அவரது குடும்பத்தாரின் நல்லாசீரோடு இத்திருமணம் நிறைவுற்றது என்று பத்திரிக்கையில் வாசித்த போது கண்களில் நீர் கசிந்தது. நெஞ்சம் நெகிழ்ந்தது. நம் மண்ணில் இதைச் சாத்தியப்படுத்திய பெரியார்களின் கரங்களை இறுகப் பற்றி என் நன்றி நிறைந்த வணக்கத்தை தெரிவிக்க விரும்புகிறேன்.

இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், 'சாதி ஆணவத்தால் தனது காதல் இணையரை இழந்ததை தனது சொந்த சோகமாக மட்டும் சுருக்கிப் பார்க்காமல் சமூகக் கட்டமைப்பு தான் இதற்குக் காரணம் என்று செயல்பட்டு வந்த சகோதரி கவுசல்யா - பறை இசைக் கலைஞர் சக்தியை வாழ்வு இணையராக தேர்ந்தெடுத்துக் கொண்டதை அறிந்து மகிழ்கிறேன். இந்நிகழ்வை உடுமலை சங்கரின் தந்தையும் தம்பியும் பாட்டியும் பங்கேற்றே நடத்தி வைத்திருப்பது கவுசல்யாவின் பொதுநோக்கத்துக்குக் கிடைத்த பாராட்டு. தமிழ்ச்சமூக வார்ப்புகளான கவுசல்யா - சக்தி இருவரும் இல்வாழ்விலும் சமூக வாழ்விலும் சிறந்து விளங்க வாழ்த்துகள்' என்று தெரிவித்துள்ளார். ஆயிரம் பணிகளுக்கு மத்தியிலும் சமூத்தின் கடைக்கோடியில் நல்லது ஒன்று கண்டாலும் உடனே பாராட்டும் அன்புத்தலைவர் கலைஞரின் பணியைத் தொடர்ந்து செய்யும் திரு.ஸ்டாலின் சாதிகளற்றச் சமுதாயத்தை உருவாக்க முனைப்புடன் செயல்பட வேண்டும். கவுசல்யா-சக்திக்கு அன்பு வாழ்த்துக்கள்!

செவ்வாய், 11 செப்டம்பர், 2018

கலைக்கப்பட்ட கூடு (Scattered Nest)


நீண்ட நாள்களுக்குப் பிறகு எதாவது எழுதலாம் என்று தோன்றுகிறது. பேசுவதும், எழுதுவதும் தகவல் பரிமாற்றமே! ஆனால் எழுதும் போது மனதால் பேசுவது போன்ற சுகம் இருக்கின்றது. இது பேச்சால் நிரம்பிய உலகு. கொஞ்சம் அமைதியாக இருப்போமா என்று வாயை இழுத்துக் கட்டிய போது மனமீன் கடந்தக் காலத்திற்குள் நீந்திச் சென்றது. 

மேலே இருக்கும் ஆலயமானது எல்லோருக்கும் ஒரு படம். அவ்வளவுதான். ஆனால் இதனோடு தொப்புள் கொடி உறவு கொண்டிருப்போருக்கு இது ஒரு தாயின் படம். இந்த ஆலயம் இப்போது இல்லை. இருந்த எந்தத் தடயமும் இல்லாமல் புதிய ஆலயம் கட்டி பதினைந்து ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டன. வெளிநாடுகளில் பெரும்பாலும் அவர்கள் எந்தக் கட்டிடத்தையும் முழுதாக இடித்து புதிதாகக் கட்டுவதில்லை. புதிதாகக் கட்டுவதற்கு ஆகும் செலவை விட பன்மடங்கு செலவு செய்து பராமரிக்கிறார்கள். அதற்கானக் காரணங்கள் எங்கள் ஊரின் பழைய ஆலயத்தின் படத்தைப் பார்க்கும்போதுதான் தெளிவாக விளங்கின.

இந்த ஆலயம் தான் எங்கள் குழந்தைப் பருவத்தின் அனைத்து நினைவுகளையும் தாங்கிநிற்கும் பழைய இரும்புப்பெட்டகம். இங்குதான் நாங்கள் விளையாடியது. இங்குதான் நாங்கள் மறைக்கல்வி பயின்றது. இங்குதான் எங்கள் உறவுகள் பலரின் திருமணம் நடைபெற்றது. இதன் முற்றத்தில் தான் நாங்கள் ஊராக அமர்ந்து விருந்துண்டது. கொடியேற்றியது. விழா நடத்தியது. இன்று ஊரைவிட்டு பிழைப்புக்காக பெரிய பளபளப்பான ஊர்களுக்கு இதன் பிள்ளைகள் சென்று அந்நியப்பட்டு நிற்கும் போது தங்கள் ஊருக்கான ஏக்கம் தொண்டைக்குழியை அடைக்கின்றது. நினைவுச் சிறகுகளில் சென்றாலும் அங்கே கூடுகள் கலைக்கப்பட்டு நெடுநாள்களாகிவிட்டன. எல்லாமும் இல்லாமல் போவதன் வலியை நாம் உணருவதே இல்லையா?

அப்பாமுடுவம் பெரியப்பா (அவரது பெயரா தெரியவில்லை! அப்படித்தான் கூப்பிடுவார்கள்) பெரிய குளத்து இறக்கத்தில் சைக்கிளில் இருந்து விழுந்து கொண்டை நரம்பு முறிந்து மருத்துவர்கள் கைவிட்ட பின் இக்கோவிலின் இடப்பக்கம் இருக்கும் குருசடியில் தான் கட்டிலில் படுக்கவைத்திருந்தார்கள். ஒரு நாள் காலை ஓவென்று அழுத அவரது மனைவியின் குரலில் தான் உறங்கிக் கிடந்த ஊரே முழித்தது. இன்று பெரியப்பாவும் இல்லை. கோவிலும் இல்லை. 

மருத்துவர்களால் கைவிடப்பட்டவர்கள், மருத்துவமனை செல்ல வசதியில்லாவதவர்கள் ஆற்றுக்குக் கிழக்கே செல்வதற்கு முன் (கல்லறைத் தோட்டத்தின் இடுபெயர்) அவர்களுக்கு வழங்கப்பட்ட கடைசி இடம் இக்கோவில் முற்றம்தான். எல்லோரும் குணம் அடையாவிட்டாலும் இங்கு எல்லோருக்கும் இடமிருந்தது. நோயாளிகள் என்றில்லை. எங்கள் சிறுவயதில் பாதி ஊர் படுத்து உறங்கிய இடம் இந்தக் கோவில் முற்றம். இரவு ஏழு மணிக்கெல்லாம் பாயையும், ஜமுக்காளத்தையும் (பன்னெடுங்காலத்திற்கு முன்பு போர்வைக்கு இப்படி ஒரு பெயர் இருந்தது.) எடுத்துக்கொண்டு குடும்பசகிதமாக செல்வார்கள். குருசடிக்கு அருகில் ஒரு அம்மி கிடக்கும். அம்மைக்கட்டு, தோல் சம்பந்தப்பட்ட எல்லா நோய்களுக்கும் ஒரே மருந்து வேப்பிலை அறைத்துத் தடவிக்கொள்வதுதான்! மாலை ஆனால் இக்கோவில் குருசடியில் பெண்கள் பேய் ஆடுவார்கள்! படுவேகமாக ஓடி வந்து குட்டிக்கரணம் அடித்து, சுவரில் மோதி, அந்தோணியாரையும், மிக்கேல் சம்மனசையும் 'போல, வால' என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி பேசுவார்கள்! இன்றும் அந்தப் பெண்கள் இருக்கிறார்கள்! ஆனால் ஏனோ பேயே பிடிப்பதில்லை! பேய்களும், கோவிலும் முற்றிலுமாக அழிக்கப்பட்ட ஊராக ஐ.நா சபை அறிவிக்க வேண்டியதுதான் பாக்கி! இப்போது புதிய கோவில்! ஆனால் இப்போது பேய்கள் சாதாரணமாகக் கண்களுக்குத் தெரிவதில்லை!

கோவிலை ஒருநாள் ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு இடித்தார்கள். சுவர்கள் எல்லாம் இடிக்கப்பட்டப்பின் கோபுரம் மட்டும் மிச்சமிருந்தது. ஒரு வெறுமையானக் காட்சி அது. இரும்பு வடத்தால் கோபுரத்தின் கொண்டையில் கட்டி ஜேசிபியால் இழுத்தார்கள். விடாப்பிடியாக அடம்பிடித்தக் கோபுரம் இறுதியாக வீழ்ந்தது. செங்கல் செங்கலாக சிதறியக் காட்சியோடு கோவில் தொடர்பான எல்லா நினைவுகளும் திரும்பிச் செல்லமுடியாதபடி அலைகின்றன! நாம் பிறந்த ஊர் நம் காலத்திலேயே பிறந்து நம் காலத்திற்கு முன்பே மறைந்து இன்னொரு ஊராகிப் போவது நம் ஞாபகங்களை அடைகாக்கும் கூட்டினைக் கலைப்பது போன்றது தானே!

சனி, 21 ஜனவரி, 2017

ஒரு புதிய அரசியலுக்கானத் தொடக்கமாக

இத்தாலியின் தலைநகர் ரோமில், வத்திக்கான் புனித பேதுரு சதுக்கத்தின் அருகாமையில் உள்ள புனித பேதுரு கல்லூரி வளாகத்தில் இன்று 19-1-2017 மதியம் 3 மணியளவில் தமிழ் உணர்வாளர்கள் பெருமளவு கூடினர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்றும், பீட்டா அமைப்பு தடைசெய்யப்பட வேண்டும் என்றும் உணர்ச்சி பொங்க கோஷங்களை எழுப்பினர். தமிழகம் முழுவதும் நடைபெறும் இளைஞர்களின் எழுச்சிப் போராட்டத்தில் ரோம் நகரில் வாழும் தமிழர்களும் அதே இனமான உணர்வோடு கலந்து கொண்டனர்.

மத்திய அரசின் தமிழர் விரோத அரசியலையும், பண்பாட்டு அழிப்பு முயற்சியினையும் வன்மையாகக் கண்டித்தனர். நல்ல பயனுள்ள பறக்கும் சாலை, புல்லட் ரயில் போன்ற உட்கட்டமைப்புத் திட்டங்களெல்லாம் வடமாநிலங்களுக்கும், பேராபத்தான அணுஉலை,  மீத்தேன் வாயுத்திட்டம் போன்றவையெல்லாம் தமிழகத்திற்கும் ஒதுக்கப்படுவதைச் சுட்டிக்காட்டினர். வீட்டில் பிள்ளையாக, ஊருக்கு சாமியாக, விவசாயிகளின் தோழனாகத் திகழும் நாட்டுக் காளை மாட்டினங்களை முற்றிலும் அழிக்க நினைக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் சதிவலைக்குள் தமிழகத்தைச் சிக்கவைப்பதோடு, அவர்களின் வீர வரலாற்றுச் சிறப்பின் தனிப்பெறும் அடையாளமான ஏறுதழுவுதல் என்னும் ஜல்லிக்கட்டு விளையாட்டைத் தடைசெய்ய சந்தர்ப்பம் தேடும் மத்திய அரசின் குரலையே உச்சநீதிமன்றமும் எதிரொலிப்பது முற்றிலும் பாரபட்சமான, இனவெறிப் பார்வையே அன்றி வேறெதுவும் இல்லை என்று அவர்கள் கூறினர்.

இன்று தமிழகம் முழுவதும் போராட்ட உணர்வோடு வீதிக்கு வந்திருக்கும் இளைஞர்களின் கூட்டத்தைப் பார்க்கும் போது இது வெறும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவானப் போராட்டம் மட்டுமல்ல. இது தொடர்ந்து புறக்கணிக்கப்படும், வஞ்சிக்கப்படும் ஒரு இனத்தின் எழுச்சிப் போராட்டம் என்பது தெரிகிறது. இவர்கள் அரசியல்வாதிகளாலோ, அல்லது சினிமாக்காரர்களாலோத் தூண்டப்பட்டவர்கள் அல்ல. மாறாக அவர்களையும் வீதிக்கு இழுத்து வந்து போராட்டக் குரலெழுப்ப வைத்திருக்கின்றனர். இதுவே நம் இளைஞர்களின் முதல் வெற்றிதான். இது ஒரு புதிய அரசியலுக்கானத் தொடக்கமாக இருக்க வேண்டும். தமிழகத்தின் பண்பாட்டையும், வரலாற்றையும் அழிக்க நினைக்கும் எதிரிகளுக்கு முதுகு சொறிந்து விடும் எட்டப்பர்கள் நம்மை ஆட்சி செய்தது போதும். உண்மையாகவே தமிழையும், தமிழர்களையும் புதிய உட்சங்களுக்கு வழிநடத்தும் நல்ல தலைவர்கள் இந்த இளைஞர் திரளிலிருந்து உருவாக வேண்டும் என்பதே ரோம் வாழ் தமிழர்களாகிய எங்களின் ஏக்கமும் ஆகும். போராட்டத்தில் ஈடுபடும் அனைவரோடும் உணர்வுப்பூர்வமாக நாங்களும் ஒன்றித்திருக்கிறோம். அவர்களை மனதாரப் பாராட்டுகிறோம். இவ்வாறு ரோம் புனித பேதுரு கல்லூரி வளாகத்தில் ஜல்லிக்கட்டுக் ஆதரவாக ஒன்றிணைந்த தமிழ் உணர்வாளர்கள் கூறினர்.

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

குமரிமுனை பங்கு கள அனுபவம்

வரவேற்பு
முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரிக்கரையில் களப்பணி அனுபவம் பெற மூன்றாமாண்டு இறையியல் மாணவர்கள் நாங்கள் கால் பதித்த நாள் 17.09.2011 இரவு 10.30.  உச்சிவானை தொட்டுவிட்டதோ என எண்ணத்தூண்டுமளவுக்கு உயர்ந்து நின்ற தூய அலங்கார உபகார அன்னையின் ஆலயக்கோபுரம் பங்கு மக்களின் இறைநம்பிக்கைக்கு சான்று பகர்ந்து எம்மை பல எதிர்பார்ப்புகளுக்கு இட்டுச்சென்றது.  பங்குப் பணியாளர் அருட்பணி. லியோ கென்சன் மற்றும் இணைப் பங்குப்பணியாளர் அருட்பணி. அமல்ராஜ் மற்றும் பங்கு மக்கள் சிலர் அன்புடன் எம்மை வரவேற்றனர்.

முதல் நாள்
18.09.2011 ஞாயிரன்று காலைத் திருப்பலியில் பங்குப் பணியாளர் எம்மை இன்சொல் கொண்டு வரவேற்று எமது இருத்தலின் நோக்கத்தை மக்களுக்குத் தெளிவுபடுத்தினார்.  குமூகப் பகுப்பாய்வின் அடிப்படையில் பங்கில் பணித்திட்டம் உருவாக்க உதவும் இந்த கள அனுபவத்தின் தொடக்கமே உயிர்த்துடிப்புடன் அமைந்திருந்தது.

இருபது ஆண்டுகளாக வலுத்துவந்த கூடங்குள அணுமின் நிலைய எதிர்ப்புப் போராட்டம் மக்கள் போராக வெடித்த நிகழ்வுதான் இடிந்தகரை என்னும் இடத்தில் 127 மக்கள் ஐந்து நாட்களாக இருந்த தொடர் உண்ணாவிரதம்.  இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணமும,; தங்களது எதிர்ப்பையும் காட்டும் வண்ணமும் கன்னியாகுமரி பங்கு மக்கள் இதை ஒட்டுமொத்த தமிழனின் வாழ்வாதாரப் பிரச்சனையாகப் பார்த்து போராட்டக் களத்தில் இறங்கினர்

முன்னதாக நடைபெற்ற தயாரிப்புக் கூட்டம் எமக்குத் தந்த அனுபவங்கள் பல.  பங்குப் பணியாளரும் மக்களும் இணைந்து சிந்தித்து, விவாதித்து, திட்டமிட்டு செயல்பட்ட விதம் கூட்டுத் தலைமைத்துவத்தையும், வழிபாடு கடந்து வாழ்க்கைப் போராட்டங்களுக்காக துணிவுடன் போராடுகின்ற வளர்ச்சியையும் படம் பிடித்துக் காட்டியது.  'மக்களோடு மக்களாய்' போராட்ட உணர்வை நாங்களும் பெற்று கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றோம்.  அன்றிரவு அன்பிய வழிகாட்டிகள் கூட்டப்பட்டு ஒரு அன்பிய வழிகாட்டிக்கு இரு மாணவர்கள் என்ற முறையில் பிரிக்கப்பட்டு அவர்களின் இல்லங்களுக்கு சென்று வந்தோம்.

மேதா பட்கர்
29.09.2011 திங்களன்று காலையில் முரண்பாடுகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் கொண்டுள்ள சமூகத்தைப் பகுப்பாய்வு செய்ய உதவும் வண்ணம் அமைந்திருந்தது அருட்பணி. வில்சன் அவர்களின் கருத்துரை. நண்பகலில் மீண்டும் போராட்டத்தில் பங்கேற்றோம். போராட்டத்தின் முத்தாய்ப்பாய் சமூக ஆர்வலர் மேத்தா பட்கரின் வருகையும், உரையும் எம்மை மேலும் உற்சாகப்படுத்தியது. மாலையில் சுனாமி காலனிக்கு 9 மாணவர்களும் அஞ்சுக்கூட்டுவிளை கிளைப்பங்கிற்கு 5 மாணவர்களுமாகப் பிரிந்து சென்று 4 சமூகப் பகுப்பாய்வு செய்தோம்.

பங்கேற்பு
20.09.2011 இன்று போராட்டத் தீ கொழுந்துவிட்டு எரிய சமயம் கடந்து போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களோடு சமூக ஆர்வலர்களுடன் இறையியல் மாணவர்கள் நாங்களும் முழுமையாகப் பங்கேற்றோம். சிற்றுரை ஆற்றி, விழிப்புணர்வுப் பாடல்பாடி மக்களை உற்சாகப்படுத்தினோம். 

தரவுகள்  
22.09.2011 முதல் Ransom Town மற்றும் அஞ்சுக்கூட்டுவிளை பகுதிகளில் குமூகப் பகுப்பாய்வின் மூலம் மக்களின் சமய, அரசியல் சமூக, பொருளாதார நிலையைப் பற்றிய தரவுகளை சேகரித்தோம்.  மீண்டும் 25.09.2011 அன்று மாலை குழுவாக சேர்ந்து அருட்பணி. வில்சன், பங்குப்பணியாளர் மற்றும் அருட்பணி. ராஜா முன்னிலையில் தரவுகளின் அறிக்கையை சமர்ப்பித்தோம். இருவேறு இடங்களில் நடைபெற்ற ஆய்வின் அறிக்கை இயல்பாகவே வேறுபாடுகளைக் கொண்டிருந்தது

சகோதரர்களின் பகிர்விலிருந்து....
அஞ்சுக்கூட்டுவிளை கிளைப்பங்கு  
1875ல் புலம் பெயர்ந்த 5 குடும்பங்களால் உருவானதுதான் இக்கிராமம்.  சிறிய எண்ணிக்கையில் இருந்த இவர்கள் அருகிலிருந்த நிலங்களை விலைக்கு வாங்கி உருவாக்கப்பட்டதுதான் இக்கிராமம்.
மக்கள் தொகை     :  
தொழில்           :  கடைகள், உணவுவிடுதிகள் மற்றும் சுற்றுலாப்பயணிகள்                                          தங்குகின்ற விடுதிகள் நடத்துதல். 
கட்சி; சார்பு     :  
சாதியம்            :  பெரும்பாலானோர் நாடார் சமூகம்.
கல்வி நிலை    :  மக்கள் நல்ல கல்வியறிவு பெற்றவர்களாகவும், அரசு வேலையை நோக்கமாகக் கொண்டு படிப்பவர்களாகவும் உள்ளனர்
அடிப்படை வசதிகள்   : பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருப்பதால் அடிப்படைத் வசதிகள் இருக்கின்றன.
வாழ்வாதாரம்  :  கடின உழைப்பும், சிறப்பான திட்டமிடலும்
சமயம்                : பெரும்பான்மையானோர் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள். தற்போது பெந்தகோஸ்து சபையின் தாக்கம் பெருமளவில் இருக்கின்றது. பிற சமூகத்தை சார்ந்தவர்களிடம் இவர்கள் வரி வாங்குவது இல்லை. அன்பியங்களில் அவர்களை சேர்த்துக் கொள்வதும் இல்லை. ஒரு சில குடும்பங்கள் இணைந்து பிறரை ஒடுக்குகின்ற சூழலும் உள்ளது. 

Ransom Town
2004 ஆம் ஆண்டு சுனாமி பாதிப்பிற்குப் பின்னர் பாதிப்பிற்குள்ளான 34 வீடுகள் அரசால் கட்டிக் கொடுக்கப்பட்டன.  பங்குத் தந்தையின் அரிய முயற்சியினாலும் புனித அன்னாள் சபைக் கன்னியர்கள் மற்றும் Salvation Army  போன்ற தொண்டு நிறுவனங்களால் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு உருவானதுதான் இப்பகுதி.
  • மக்கள் தொகை :  
  • தொழில்              : மீன்பிடித்தல் மற்றும் அவை சார்ந்த தொழில்கள் 
  • கட்சி சார்பு        : அ.இ.அ.தி.மு.க. அ.தி.மு.க. மற்றும் தே.தி.மு.க. இந்தப்பகுதிக்கென்ற சட்டமன்ற உறுப்பினர் இல்லை.தற்போதைய உள்ளாட்சித் தேர்தலில்தான் போட்டியிடுகின்றனர்.  மேலும்            இப்பகுதியானது  பஞ்சாயத்தை சார்ந்தது.
  • சாதியம்           :   பறவர், முக்குவர் மற்றும் நாவிதர்.
  • கல்வி நிலை  :  பெரியவர்கள் கல்வியறிவு குறைந்தவர்களாக இருந்தாலும் பிள்ளைகள் நன்கு படிக்க வேண்டும் என்ற நோக்குடன் தரமான கல்வி பெறச் செய்கின்றனர்
  • அடிப்படை வசதிகள் :   குடிநீர் வசதி குறைவாகவே உள்ளது.  குப்பைத்       தொட்டிகள் இல்லாததால் ஊர் முழுவதும் நெகிழிக்குப்பைகளால் நிறைந்துள்ளது. அனைத்து     அடிப்படை வசதிகளுக்கும் கன்னியாகுமரியை சார்ந்துள்ளனர்.
  • சமயம்             : அனைவரும் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள்.
இறைநம்பிக்கை
23.09.2011 அன்று காலை அருட்பணி. சகாயராஜ் மக்களின் இறைநம்பிக்கையை மதிப்பீடு செய்ய வழிகாட்டினார்.  சுனாமி எனும் பேரழிவை சந்தித்திருந்தாலும் மக்களின் இறைநம்பிக்கையானது வளர்ந்துள்ளதேயன்றி தளர்ச்சியுறவில்லை என்பதும் வியப்பிற்குரியதாகவே இருந்தது.  இறைமக்களின் ஈடுபாடு ஆலய வழிபாட்டில் மட்டுமில்லாமல் ஊரின் வளர்ச்சிப்பணிகளிலும்  இருக்கின்றது.  அன்பியங்கள் அவர்களின் உறவை வலுப்படுத்துபவையாகவும் அவர்களை ஒருங்கிணைக்கும் சிறந்த ஊடகமாகவும் திகழ்கின்றன.  மரபு ரீதியாக பெற்றுக்கொண்ட புரிதலுடன் புதிய இறையியல் புரிதல்களையும் உள்வாங்கிக்கொண்டு வாழும் இவர்களின் வாழ்வு எமக்கும் தூண்டுதலாக அமைந்தது.

பங்குப் பணியாளர்களின் பகிர்வு
27.09.2011 அன்று மாலையும் 28.09.2011 காலையும் அருட்பணி. லியோ கென்சன் மற்றும் இணைப்பங்குப் பணியாளர் அருட்பணி. அமல்ராஜ் இருவரும் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.  தனது பத்தாண்டுகால அயராத உழைப்பாலும் இறைவனின் உடனிருப்பாலும் அமைதிப் பூங்காவாக இன்று கன்னியாகுமரி மாறியிருக்கிறது என்பதையும் அதற்கு முன்னதாக இப்பங்கில் இருந்த பல்வேறு ஆதிக்க சக்திகள், அரசியல்கள், போராட்டங்கள், பொருளாதார சிக்கல்கள் போன்றவற்றையும் அதை மாற்ற எடுக்கப்பட்ட முயற்சிகள் போன்றவற்றையும் பகிர்ந்து கொண்டார்கள். இன்று பல்வேறு துறைகளில் வளர்ச்சி கண்டுள்ளநிகழ்வுகளை மகிழ்வுடன் மக்களும் பகிர்ந்து கொண்டார்கள். இன்று பல்வேறு துறைகளில் வளர்ச்சி கண்டுள்ள நிகழ்வகளை மகிழ்வுடன் மக்களும் மகிழ்வுடன் பகிர்ந்துகொண்டார்கள். ஊரைப்பற்றிய தெளிவான புரிதலின் பின்னணியில் மக்களோடு இணைந்து வரைந்த ஆண்டுத்திட்டம், மறையுரை, அரசின் திட்டங்களை முறைப்படிப் பெற்று மக்களுக்கு வழங்கியது போன்றவற்றின் மூலமாக மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திய அருட்பணியாளரை மக்கள் நன்றியுடன் நினைவுகூர்கின்றனர்.
மேலும் மக்களின் கல்வி, சமய ஈடுபாடு, மற்ற சமயத்தவரோடு கொண்டுள்ள உறவு மற்றும் வளர்ச்சிகள் பற்றிய புரிதல்களை ஆழப்படுத்தும் வண்ணம் அமைந்திருந்தது அமர்வு. 

சிறப்பு அழைப்பாளர்களின் பகிர்விலிருந்து :
  • திரு. ராசையா நாடார் மற்றும் இஸ்லாமிய நண்பர்
சுனாமி குடியிருப்பு பகுதிக்கான நிலம் இவர்களால் மனமுவந்து அளிக்கப்பட்டது. ஆடிதடி, வன்முறை என்றிருந்த இப்பகுதி தற்போதைய அருட்பணியாளர் லியோ கென்சனின் சிறப்பான பணிகளால் அமைதியான நிலையை அடைந்துள்ளதை பகிர்ந்து கொண்டார். இந்து, இஸ்லாம், கிறித்தவ மக்கள் உறவு நல்ல முறையில் அமைந்துள்ளது என்றும் மார்வாடிகள் இந்துத்துவாவின் செயல்பாடுகள் அப்பகுதி வாழ் இந்து மக்களுக்கே விருப்பமில்லாத ஒன்றாக உள்ளதை பகிர்ந்து கொண்டார்கள்.
  • கிராம அலுவலர் மற்றும் பள்ளி ஆசிரியர்
மக்கள் வாழ்நது வந்த அரை கிலோமீட்டர் பகுதி இன்று 5 கிலோமீட்டராக விரிவடைந்துள்ளது. எல்லாவற்றிலும் வளர்ந்துள்ளனர். பள்ளியில் அயரா உழை;பபம் அர்ப்பண உணர்வும் கொண்டவர்களாக ஆசிரியர்கள் உள்ளனர். தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தரமான கல்வி அனைவருக்;கும் வழங்கப்படுகிறது. சிறப்பு வகுப்புகள், தனித்திறமைகள் நல்லொழுக்கம் போன்றவை மாணவர்களை சிறப்பாக உருவாக்குகின்றன.
  • பக்த சபைகள்
பொது நிலையினர் அதிகமான ஈடுபாட்டுடன் செயல்படுகின்றனர். சிறப்பாக, புதுமையாக, செம்மையாக அனைத்து வழிபாடுகளும் நடைபெறுகிறது. ஆண்களும், பெண்களும் பல பொறுப்புகளை வகித்தாலும் பங்குப் பேரவையில் பெண்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்படாத நிலையும் உள்ளது. தொழில் தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் இடம் என்பதால் பெண்களுக்கு பங்குப்பேரவை உறுப்பினராகும் தேவை எழவில்லை என்ற காரணம் முன் வைக்கப்படுகிறது.

மதிப்பீடு
30.09.11 இன்று ஒருசிறிய மதிப்பீடு குழுவில் நடைபெற்றது. 14 நாட்கள் கடந்த நிலையில் யாம் பெற்ற அனுபவங்களை திருப்பிப்பார்த்தோம். அனுபவ பகிர்விற்கு அருட்பணி சந்தியாகு ராசா மற்றும் அருட்பணி நார்பர்ட் தாமஸ் வந்திருந்தார்கள். அடுத்த வருடத்திற்கானப் பரிந்துரையாக பணியாளர் வில்சன் அவர்களின் வகுப்பினையும் பணியாளர் ஜஸ்டஸ் அவர்களே எடுத்தால் இன்னும் சிறப்பாக அமையும் என்றக் கருத்தினைப் பதிவு செய்தோம். அவ்வாறு செய்யும் போது பாடமும், பணியும் இன்னும் சிறப்பாக ஒன்றிப்போகும் வாய்ப்பு உள்ளதாகக் கருதினோம்.

கலை இரவு
1-10-11 அன்று மாலையில் உபகார அன்னைத்திடல் நிரம்பி வழிய பறை முழக்கத்துடன் தொடங்கிய கலை நிகழ்ச்சியின் மையக் கருத்தாக சுற்றுப்புறத்தூய்மை என்பது அமைந்தது அனைவரின் அடிமனதிலும் ஓர் மாற்றத்தை உருவாக்கியது. கலைகள் யாவும் வாழ்வோடு பின்னிப்பிணைந்து கிடப்பவை என்பதால் கலை நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக அமைந்திருந்தது அடுத்த நாள் நிகழ்வு.

மரம் வளர்ப்போம் மனம் வளர்ப்போம் 
2-10-11 இன்று காலை Ransom town பகுதியைச் சுற்றி ஆக்கிரமித்திருந்த நெகிழிக்குப்பகைள் மற்றும் கழிவுகளை மாணவர்களுடம் இணைந்து மக்களம் சுத்தம் செய்தனர். அன்பியத்திற்கு ஒரு மரக்கன்று என ஒவ்வொரு அன்பியத்திலும் மரக்கன்றுகள் நடப்பட்டன. மக்கள் அக்கன்றுகளைச் சுற்றி வேலியமைத்து ஊற்;றிய நீர் எங்கள் இதயங்களையும் குளிர்விக்க மாற்றத்திற்கான வித்தை இட்ட மகிழ்வோடும், புதிய பல அனுவங்களை எதிர்காலப் பணிக்கான முன்சுiவையைப் பெற்றுவிட்ட நிறைவோடும் மாலையில் அவரவர் இல்லங்களுக்குத் திரும்பினோம்.

இறுதியாக
கடற்கரை பகுதிவாழ் மக்களின் மத்தியில் வாழ்ந்து பணியாற்றிய அனுபவம் புதியதும், புதுமையானதுமாகக் கருதுகிறோம். இந்த அரிய வாய்ப்பை வழங்கிய கல்லூரிக்கும், வழிகாட்டியாக மட்டுமில்லமால், உடன் வழிநடப்பவராக உற்ற நண்பனாக எங்கள் எல்லாத் தேவைகளிலும் தந்தைக்குரிய வாஞ்சையோடு ஒவ்வொரு நாளும் எங்களை உடனிருந்து உற்சாகப் படுத்திய தந்தை சந்தியாகு ராசா அவர்களுக்கும் எங்கள் நன்றிகள் சமர்ப்பணம். மேலும் அவருக்கு உதவியாக இருந்த ஏனைய அருட்பணியாளர்களான நார்பர்ட் தாமஸ் மற்றும் ஜான்சன் அவர்களுக்கும் எங்கள இதயப்பூர்வமான நன்றிகள். 

ஞாயிறு, 31 ஜனவரி, 2016

தமிழ் மன்ற ஐந்தாம் அமர்வு : 'இளையோரும் இணையதளமும்'

இளைய தமிழ் நெஞ்சங்களே! இனிய காலை வணக்கம்.
'உள்ளங்கை நெல்லிக்கனியாய்
சுவர்களற்ற ஓர்சுருங்கிய உலகம்
படைத்தது இணையதளம்'
தூரங்களைக் குறைத்தாலும் உறவுகளைத் தூரமாக்கி விட்ட இணையதளத்தில் இளைஞர்களின் பங்கேற்பு, பாதிப்பு, மற்றும் எதிர்பார்ப்புகளை அலசும் நோக்கில் 08-01-11 சனிக்கிழமை காலை 11.30 மணிக்கு, ஞான இருக்கை அரங்கில் இனிதே தொடங்கியது தமிழ் மன்ற ஐந்தாம் அமர்வு.

அன்னை முத்தமிட்டக் கன்னங்களின் ஈரத்தைத் தொட்டுப்பார்த்துக்கொண்டே பள்ளி வரை செல்லும் பிள்ளைகளைப் போல், அமர்வின் தொடக்கத்தில் நம்மை இறையன்பில் நனைத்தது சகோ.பெனிட்டோ மற்றும் சகோ.ராஜேஷ் இணைந்து பாடிய இறைவணக்கப்பாடல்.

நதியின் அழகினை அதிகப்படுத்தும் உதிர்ந்த மலர்களைப் போல் வார்த்தை மலர்களால் அவையை வரவேற்றவர் சகோ.சேசு பிரபு.
கடந்த நான்காம் அமர்வினை கடகடவென நினைவுக்குக் கொண்டு வந்தது செயலரின் அறிக்கை.

கோகுலத்தில் கண்ணன் வாய் திறக்க, அதில் அகிலத்தைப் பார்த்த அன்னை யசோதை, கேட்டதைத் தரும் கற்பகத் தரு போன்ற மனிதக் கற்பனைக்கு மட்டுமே எட்டியவற்றை, இன்று கையகலக் கணிப்பொறியில் சாத்தியப்படுத்துகிறது இணையதளம். உலகின் கடையெல்லையைக் கண்முன் காட்டவும், உலகளாவிய உறவுகளை உருவாக்கவும், உரையாடவும் தளம் செய்து கொடுத்த இணையதளத்தின் நன்மைகளை சிரித்த முகத்துடன் எடுத்துரைத்தவர் சகோ.நெப்போலியன்.

'இளைஞர்களே! இதைக்கொஞ்சம் கேளுங்களேன்' என்ற எழுச்சிப் பாடலை ஒரு பெரிய மலைத்தொடரைப் போல வரிசையாக நின்று பாடினர் சகோதரர்கள் பிரான்சி;ஸ், மனோஜ், ரெக்ஸ்டன், மற்றும் செல்வன்.

காலவிரயம், வீண்பேச்சு, கருத்து அத்துமீறல், தரமற்றத் தகவல்கள், அந்தரங்கம் பகிரங்கமாதல், வியபார நோக்கம், நூலகப் பயன்பாடு குறைதல், வக்கிரம், விரக்தி போன்ற இணையதளத்தின் எதிர்விளைவுகளை முகத்தில் தெறித்தக் கோபத்தோடு வெளிப்படுத்தினார் உரைவீச்சாளர் சகோ.சுரேஷ் பாபு.

நெருப்பு... விளக்கில் பற்றினால் வெளிச்சம்
வீட்டில் பற்றினால் அழிவு
கடல்... கரை வரையில் இருந்தால் வாழ்வு
கரை கடந்த கணமே அழிவு
தீட்டிய ஈட்டி முனைகளான இளைஞர்கள், இணையம் என்னும் கடலை கரைகடக்காமல் பயன்படுத்தினால், அவர்கள் வெற்றி வெகுதொலைவில் இல்லை என்றும் வரம்புகளைக்; கடந்து விட்டால் மீண்டும் மீள்வது கடினம் என்றும் உரையாற்றி, பின் மாணவர்களின் வினாக்களுக்கு விடையளித்தவர் சிறப்பு விருந்தினர், தூய சிலுவைக் கல்லூரி பேராசிரரியர், அருட்பணி.ரொசாரியோ.

தினையளவு வார்த்தைகளால், பனையளவு பேசிவிடும் சகோ.ரெக்ஸ்டன் நன்றியுரை கூறியபோது, 'இன்னும் இவர் பேச வேண்டும்' என்பது போல அனைவரின் கண்களிலும் ஆவல் தெரிந்தது.

சகோ.சலேத், மற்றும் சகோ.செல்வனின் நிகழ்ச்சி தொகுப்பு இளமை, இனிமை, புதுமை, என்று களைகட்ட, மன்றப்பண்ணுடன் இனிதே கலைந்தது ஐந்தாம் அமர்வு.

நிகழ்ச்சி தயாரித்த வைகை குழவினரை நன்றியோடு நினைத்துப்பாரக்கிறது தமிழ் மன்றம். 

நன்றி!
என்றும் தோழமையுடன்,
செயலர்
ம.ஆன்றனி பிரான்சிஸ்

தமிழ்மன்ற நான்காம் அமர்வு : 'பெருகி வரும் மாண்புக்கொலைகள்'

இன்றைய சிறப்பு விருந்தினர் திருமிகு.கிறிஸ்டி சுபத்ரா அவர்கள்
கிரியா மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் தாளாளர்.
அகில இந்திய வானொலி நிலையத்தில் செய்தி வாசிப்பாளர்.
1978ஆம் ஆண்டு முதல் குழந்தைகள், பெண்களுக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்து வருபவர். இவரது கவிதைப் படைப்புக்களான 'எந்தன் தோழா', 'சுட்டும் விழி' போன்றத் தொகுப்புகள் பல்கலைகழகங்களில் பாடத்திட்டங்களாக இருந்த பெருமை பெற்றவை. இத்தகைய அரிய மனிதர் நம் சிறப்பு விருந்தினராக வந்திருப்பதில் தமிழ்மன்றம் நெஞ்சம் மகிழ்கின்றது. அந்நாரை என் சார்பாகவும், தமிழ்மன்றத்தின் சார்பாகவும் வருக, வருக என்று வரவேற்கின்றேன்.

இளைய தமிழ் நெஞ்சங்களே! இனிய காலை வணக்கம்

மனிதம் பெரிது-பெரிது
மனித மாண்பு அதனினும் பெரிது
பெற்ற பிள்ளையை, கட்சித்தொண்டனை
காதலென்னும் பெருங்குற்றம் செய்த இளைஞனை
இன்னும் இது போன்ற மனித பூச்சிகளை
வெட்டியோ, வெடித்தோ அல்லது
எரித்தோக் கொன்று, தங்கள் கவுரவம் காக்கும்
பரிணாம வளர்ச்சியில் பங்குபெறாத மனிதர்களைப் பற்றி
'பெருகி வரும் மாண்புக்கொலைகள்' என்னும் தலைப்பில், 4-12-2010 சனிக்கிழமை காலை 11.30 மணிக்கு 'ஞான இருக்கை' அரங்கில் இனிதே நடைபெற்றது தமிழ்மன்ற நான்காம் அமர்வு.

சாளரத்திற்கு வெளியே சின்னதாய் மழைத்தூற கடவுள் அன்பில் அரங்கை நனைத்தது சகோ.ஆரோக்கியராஜ் அவர்களின் இறைவணக்கப்பாடல்.
ஆர்ப்பாட்டமில்லாமல் அவையை வரவேற்று அமைதியாய் அமர்ந்தார் சகோ.நிக்கோலஸ்.

கடந்த அமர்வின் அறிக்கையினை வழக்கம் போல் வாசித்தவர் மன்றச் செயலர்.

மாண்புக்கொலைகளை நிகழ்த்துவது மதம் என்னும் வெடிகுண்டாகவோ, பணம் என்னும் வெட்டரிவாளாகவோ, குடும்பம் என்னும் தூக்குக் கயிறாகவோ இருக்கலாம். ஆனால் அவற்றின் பின்னணியில் அமைத்து ஜாதிகளின் ஆதிமூலமாக விளங்கும் பார்ப்பனியம் செயல்படுவதை அடுக்கடுக்கான எடுத்துக்காட்டுகளாலும், உணர்ச்சி ததும்பியக் குரலிலும் சகோ. சகேஷ் சந்தியா உரையாற்றிய போது அரங்கமே அமைதி காத்தது.

சுயகௌரவத்துக்காக, பிறர் உயிரைப்பறிக்கும்
அறிவிலி மனிதர்கள் இருந்தென்ன? இருந்தென்ன?
என்னும் பொருளில் ஓர் விழிப்புணர்வு பாடலை அரங்கேற்றியவர் சகோ. அருள் சூசை.

மாண்புக் கொலைகளின் துயரப்பக்கங்களை கோர முகங்களை, சிதைந்து போகும் மனித மாண்பினை திரையில் காட்சிகளாக்கி அவையை துயரத்தின் உறைநிலைக்குத் தள்ளியது சகோ.இமான் அவர்களின் ஒளிப்படக்காட்சி.

ஒரு பெண்ணுக்கான ஒழுக்கத்தை ஒரு ஆண் தீர்மானிக்க ஆரம்பித்த அன்றே மாண்புக்கொலைகள் தொடங்கி விட்டன. ஆணின் பேசா சொத்து ஆடு-மாடுகள்... பேசும் சொத்து பெண்கள் என்னும் அவலக்கருத்தியல்கள் அவிழ்த்து விடப்பட்டதன் பின்னணியிலேயே இன்றளவும் பெண் உரிமைகள் புறந்தள்ளப்படுவதும், கட்டமைப்புகளை மீறும் பெண்கள் கொன்றழிக்கப்படுவதும்  அன்றாட நிகழ்வுகளாக மாறிவிட்டன, என்று கணீர் குரலில் உரையாற்றியவர் சிறப்பு விருந்தினர் திருமதி. சுபத்ரா அவர்கள். தொடர்ந்து மாணவர்களின் ஐயப்பாடுகளை தம் சொந்த அனுபவங்களைக் கூறி தீர்த்து வைத்தது அவரின் சிறப்பு.

அழகானப் புன்னகை முகத்தில் அரும்ப
தெளிவானத் தமிழ் நாவில் தவழ
நல்ல முறையில் சகோ. பிரான்சிஸ் சேவியர் நன்றி நவிழ இறுதியில் மன்றப்பண் பாடப்பட்டது.

மழைக்கு முந்தைய மின்னலாக, மழை விட்டபின்னும் இலையில் சொட்டும் நீராக நிகழ்ச்சியைப் பாங்குறத் தொகுத்தளித்தவர்கள் சகே. பாஸ்கா மற்றும் சகோ.மைக்கிள்.

நிகழ்ச்சி தயாரித்த வைகைக் குழுவினருக்குத் தமிழ்மன்றத்தின் 1000 பாராட்டுக்கள்!

நன்றி!
என்றும் தோழமையுடன்,
செயலர்
ம.ஆன்றனி பிரான்சிஸ்

விடியாத இரவுகள் உன்னால் மட்டுமே விடியும்

புனித பவுல் இறையியல் கல்லூரிதிருச்சி - 620001செப்டம்பர், 2009

அன்பானவர்களே! இந்த பதிவானது நாங்கள் திருச்சி தூய இறையியல் கல்லூரியில் முதலாண்டு இறையியல் பயின்ற போது திண்டுக்கல் பகுதியில் சமூக பகுப்பாய்வு அனுபவத்திற்காக சென்றபோது இதில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவராலும் பங்களிப்பு செய்யப்பட்ட அறிக்கையின் தொகுப்பாகும். நிச்சயம் சமூகத்தையும், சமூகத்திலிருந்தும் கற்றுக்கொள்வதற்கு இந்தப் பதிவானது பயன் தரும் என்று நம்புகிறேன்.

நிகழ்வுகள்
  • 20.09.09
  • 21.09.09
  • 22.09.09
  • 23.09.09
  • 24.09.09
  • 25.09.09
  • 26.09.09
  • 27.09.09
  • 28.09.09
  • 06.10.09
  • 07.10.09
  • கலைப் பயிற்சி அனுபவம்
  • வழிபாடுகள்
  • 8, 9, 10.10.09 – நிகழ்வுகள்
  • 11.10.09 – திறனாய்வு
    • அனுபவத்தை பெற வழிகாட்டிய நிறுவனம்  Y-NEEW
    • அனுபவத்தை பெற வழிகாட்டியவர்கள்
    • பணி – ஜான்பீட்டர்
    • பணி – செபஸ்டீன்     
    • பணி – மைக்கில் ஜோ       
    • பணி – நார்பட்  
    • மற்றும் அனைத்து புனித பவுல் இறையியல் கல்லூரி பேராசிரியர்கள்
    •  திரு.ஸ்டீபன் - திருச்சிலுவைக் கல்லூரி பேராசிரியர்
    •  திரு.திரவியம்
    •  திருமதி.ரமலா அமித்
    •  திரு.பிரபு           
    •  திருமதி.ஜர்மணி
    •  திருமதி.ஜீவா
    •  திரு.மோகன்
                     (Y-NEEW நிறுவன அலுவலர்கள்)
    •  எங்களை அன்போடு ஏற்றுக்கொண்ட குடும்பங்கள்
    • அனுபவத்தை பெற்றவர்கள்
  • முதலாமாண்டு இறையில் மாணவர்கள்:
அஜின், அலெக்ஸ், அந்தோணி, பிரான்சிஸ்,இசபெல்லாராணி, அருள்ஜேம்ஸ், அருண்ரெக்ஸ், இளங்கோ, ஜான்கென்னடி, ஜஸ்டின்சுதாகர், ஜோசப்லியோ, மரியதாஸ், நிக்கோலஸ், ராபர்ட், சுரேஸ்பாபு, சுரேஸ்குமார்.

20.09.2009

இறைவன் அருளால் காலை 9.30 மணிக்கு இன்றைய நாள் இனிதாக தந்தையின் சிறுசெபத்துடன் நமது பணியையும் வாழ்வையும் இணைத்து நம் முதல் நாள் அனுபவ அடிப்படை ஆய்வை துவங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து திருவாளர் திரவியம் அவர்கள் இந்த முகாமின் நோக்கத்தையும் நமது அணுகுமுறையையும் மக்களின் வாழ்க்கை சூழலையும் நமக்கு எடுத்துக்கூறி நாம் எத்தகைய மனநிலையோடு மக்களில் கலக்க வேண்டும் என்றும் நம்முடைய பணி எத்தகைய நிலையை அடைய வேண்டும் என்றும் நாம் திறந்த உள்ளத்தொடு எந்த வித முன்சார்பு எண்ணங்களை நம் மனதிலிருந்து அகற்றி செல்ல வேண்டும் என்று தம்முடைய அனுபவத்தின் மூலம் எடுத்துக்கூறினார்.

நண்பகல் 12-1.30 மணிக்கு கிராமங்களை, கிராமத்திலுள்ள எதார்த்த நிலையை நாம் கண்டுணர மக்களோடு சங்கமிக்க திருவாளர் பிரபு, திருவாளர் மோகன் செல்வி செர்மனி ஆகியோர்களால் வழிநடத்தப்பட்டு எங்களின் அனுபவங்களை உரசிப் பார்த்தோம்.

பிற்பபகல் 3.30 முதல் 6 மணி வரை அருட்சகோதரி சந்திரா அவர்களின் வழிநடத்துதலில் உள்ள ஊக்குநர்களால் எங்களுக்கு நாட்டுப்புறக்களையும் அவற்றின் உள் அர்த்தங்களையும் எடுத்துக்கூறி எங்களுக்கு கற்றுக்கொடுத்தார்கள்.

மாலை 7 மணிமுதல் 8 மணி வரை நாங்கள் காலையில் சென்ற கிராம அனுபவங்களைப் பற்றி கேட்;டறிந்து அவற்றை எப்படி அறிவியல் மொழியில் எவ்வாறு அணுக வேண்டும் என்றும் எத்தகைய வழிமுறைகளை கையாள வேண்டும் என்றும் கிராம முன்னேற்றத்திற்கும் மக்களின் வாழ்க்கை தரத்தையும் பற்றி நாம் அறியக்கூடிய வழிமுறைகளைக் கற்றுத் தந்தார்.
இரவு 8 மணி அளவில் இறை பலியாம் திருப்பலயில் எங்கள் அனுபவப் பகிர்வுகளை இணைத்து நிறைவேற்றக் கூடிய ஆற்றலை இறைவனிடம் பெற்றோம்.
சகோ.சுரேசு குமார்,சகோ.சுரேசு பாபு

21-09-09

இரண்டாவது நாள் முகாம் காலை கலைப்பயிற்சியுடன தொடங்கியது. ஆதன் பிறகு 9.30 மணியளவில் முதல் அமர்வு செபத்துடன் துவங்கியது. நேற்று நடந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ஆய்வுசெய்து திரும்பிப் பார்த்தோம். பிறகு மக்கள் பங்கேற்பு திறனாய்வு பற்றி திரு. ஸ்டீபன் அவர்கள் நமக்கு கணிணி உதவியுடன் விளக்கமளித்தார்.

மக்கள் பங்கேற்பு திறனாய்வு என்றால் என்ன?

மக்கள் பங்கேற்பு திறனாய்வு என்பது மக்களுக்கு செவிகொடுத்து மக்களிடமிருந்தே கற்றுக்கொள்ளும் ஒரு அணுகுமுறை. இதில் முன்று விதமான முக்கிய பண்புகள் உள்ளன.

1. பண்புநலன்கள், குணநலன்கள், கலாச்சாரம்
2.தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுதல், இதில் கிராமத்தில் உள்ளவர்களுக்கும் நமக்கும் உள்ள ஒரு பகிர்தல்
3. இவை அனைத்தையும் பயன் படுத்தும் உபகரணங்கள்

இவை மூன்றும் பங்கேற்பு திறனாய்வின் தூண்களாகும். இதனை செய்வதற்கு செயல்பாட்டிற்கு அழைத்துச்செல்லும் பங்கேற்பும் அந்த பங்கேற்பை பற்றியச் சிந்தனையும் தேவை.

பங்கேற்பு திறனாய்வின் மூலம்; 
பவுலோ பியரோ என்னும் இலத்தின் அமெரிக்க நாட்டை சேர்ந்தவ சமூகப் பணியாளர். சேரி மக்களிடம் சென்று அவர்களோடு வாழ்ந்து அவர்களின் வாழ்க்கையை புகைப்படம் எடுத்து அவர்களைப் பார்க்க அழைக்கிறார்;. இதிலிருந்து தங்கள் வாழ்க்கை நிலையை உணர்ந்த அவர்கள் தங்களை புதுப்பித்துக்கொள்கிறார்கள். இது பங்கேற்பு திறனாய்வுக்கு ஒரு புதிய மூலமாக இருந்தது.

இராபர்ட் சாம்பர் என்பவர் பங்கேற்பு திறனாய்வின் தந்தை என அழைக்கப்படுகிறார். 'ஏழைகள் மற்றும் சுரண்டப்பட்ட மக்கள் தங்கள் நிலையை ஆராய்ந்து உணரவேண்டும'; என்பதே இவரின் அடிப்படைக் கொள்கையாகும்.

பங்கேற்பு என்றால் என்ன?
பங்கேற்பு என்பது தங்கள் கருத்துக்களை அனுபவங்களை கூர்ந்து ஆராய்ந்து ஒவ்வொருவருக்கும் சம உரிமை அளித்து  தங்கள் முழுமையான பங்கேற்பை கொடுக்கச்செய்வதாகும்.

பங்கேற்பின் வகைகள்
 இது இரண்டு வகைப்படும்
     1. ஈடுபாட்டுப் பங்கேற்பு : இதன் மூலம் நமக்கு
முழுமையான தகவல்களும் தரவுகளும் கிடைக்கும்.
     2. ஈடுபாடிலல்லா பங்கேற்பு : நமக்கு முழுமையான ஈடுபாடு இல்லாததால் தகவல்கள் முழுமையான தகவல்கள் கிடைக்க வாய்ப்பில்லை

ஏன் நாம் பங்கேற்க வேண்டும்?
பங்கேற்பு என்பது நமது உரிமை. இதன் மூலம் நமக்கு பலவிதமான தகவல்களும் உரையாடல் மூலம் பல கருத்துக்களும் நமக்கு கிடைக்கும்.

பங்கேற்பு திறனின் பண்புநலன்கள்
  1. அடையாளம் காணுதல், முன் எடுப்புக்கள் இவற்றின் மூலம் பிரச்சனைகளைத் தீர்த்தல் போன்றவை ஒரு பங்கேற்பாளரின் அடிப்படைப் பண்புகளாகும். எனவே பங்கேற்பு திறனாய்வு என்பது ஒரு தொடர் கற்றல் பயிற்சி.
  2.  குழுவில் எல்லோருடைய கருத்துக்களையும் எடுத்துக்கொண்டு மதித்து ஆரய்தல்
  3.  எல்லோருக்கும் சமமான வாய்பளித்து வழிநடத்துதல்
  4.  முறைப்படியான வழிமுறைகளை பயன்படுத்தி ஆராய்தல்
  5.  குறிப்பிட்ட காலத்திற்கேற்ற வழிமுறையாக இருத்தல்
பங்கேற்பு அணுகுமுறையின் சிறப்பம்சங்கள்

  1. நம்மை நாமே ஆராய்ந்து பார்த்தல்
  2. நடை முறை சாத்தியங்களைப் படித்தல்
  3. அத்தியாவசியத் தேவைகளை அடையாளம் காணுதல்
  4. புதியக் கருத்துக்களைத் தேவைக்கேற்பத் தொகுத்தல்
  5. பங்கேற்பு முக்கியாமாகத் தேவைப்படுதல்
  6. குழுவில் உள்ள அனைவருக்கும் மரியாதைக் கொடுத்தல்
  7. பேசுவதை விட அதிகம் கேட்டல்
  8. தாழ்ச்சி முக்கியமாகத் தேவைப் படுதல்
 9. அடுத்தவருக்குத் தெரிந்ததில் சொல்லுவதில் காண்பிப்பதில் செய்வதில் ஆர்வம் காட்டுதல்

இவை எல்லாம் தான் மக்கள் பங்கேற்பு அணுகுமுறையின் முக்கிய சிறப்பம்சங்கள் என்று ஒருங்கிணைப்பாளர்கள் எங்களுக்கு விளக்கினார்கள்.  

இன்று மதியம் உணவிற்கு பின் சுமார் 3 மணியளவில் கூடினோம. இந்த அமர்விலே குறுக்கு நெடுக்கு நடத்தல் பற்றி சிந்திக்கப்பட்டது. குறிப்பாக இதிலே அதனுடைய அவசியத்தையும் செய்யும் விதத்தையும் எப்படி சமுக பொருளாதார சுற்றுச்சுழல் நிலையை புரிந்துகொள்ளுதல் பற்றியும் சிந்திக்கப்பட்டது. ஆதைத்தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் நாங்கள் ஒரு குழுக்களாக பிரிக்கப்பட்டு இரண்டு கிராமங்களுக்கு சென்றோம். ஒரு அணியானது திரு.பிரபு அவர்களின் வழிகாட்டுதலிலும் மற்றொரு அணி செல்வி. செருமண் அவர்களின் வழிகாட்டுதலிலும் பிரிந்துசென்றோம். இறுதியாக மாலை 7.15 மணிக்கு திரும்பி நாங்கள் இதைப்பற்றி சிறு பரிசோதனை செய்துவிட்டு பிறகு எங்களுக்கு கொடுக்கப்பட்ட குழு வாரியான கட்டுரையாக்கத்தை செய்து முடித்தோம்.

இது எப்படி நிகழ்;த்தப்பட்டது அதற்கு துணைபுரிந்த பாரணிகளை வகப்பில் அறிந்துகொண்டதை பின்வரும் தலைப்புகளில் வவரிக்கப்பட்டது. அவைகள்,

  1. குறுக்கு நெடுக்கு நடத்தலின் அவசியம்
     அ. நாம் செல்லக்கூடிய கிராமத்தின் அரசியல்- சமூக- பொருளாதார- இயற்கைச் சுற்றுச்சூழல் பற்றி தெரிந்துகொள்வதற்கு
         ஆ. அந்த பகுதியிலே உள்ள மண்வகைகள் அவற்றில் விளையும் விசாயப் பயன்கள் மண்ணின் தரம் குணம் பற்றி அறிவதறிகு
       இ. நாம் பயன்படுத்தும் துணைக்கருவிகளைப் (Rappo building tool  ) பயன்படுத்தும் அனுபவம் பெறுவதற்கும் இது அவசியப்படுகிறது.

  2. குறுக்குநெடுக்கு நடத்தலின் செயல்முறை
     அ. எண்களுக்கு ஏற்றார்போல் குழுக்களாக பிரித்தல்
     ஆ. செல்லும் வழியை தேர்ந்தெடுத்தல்
     இ. ஊரின் மையப்பகதிக்கு செல்லுதல்
     ஈ. அறிந்ததை குறித்துவைத்தல்
     உ. மக்களிடம் பேச முயற்சிசெய்தல்
     ஊ. சென்றகிராமத்தின் வரைபடம் வரைதல்

3. குறுக்குநெடுக்கு நடத்துதலின் போது குறுத்துக்கொள்ளப்பட வேண்டியவை
      அ. செல்லும் வழியின் பெயர்
      ஆ. மண்வகையின் பிரிவுகள்
       இ. பயிரிடப்படும் பயிர்களின் வகைகள் பெயர்கள்
       ஈ. அக்கிராமத்தில் உள்ள கால்நடைகளைப் பற்றிய எண்ணிக்கை குறிப்பு
 உ.அந்தக்கிராமத்தின் முன்னேற்றத்திற்கு செய்யப்பட வேண்டிய காரியங்கள்
  ஊ. கிராமத்தின் உள் வடிவம் மற்றும் கிராமத்தில் காணப்படும் பொதுப்பயன்பாடுகள் பற்றிய குறிப்பு (infra structurre)
 எ. கிராமத்தின் காணப்படும் வாய்ப்பு-வசதிகள் பற்றி குறிப்பு
போன்றவைகள் குறித்துகொள்ளப்பட வேண்டியவையாக உள்ளன. இவ்வாறாக இந்த வகுப்பில் விவாதிக்கப்பட்;;ட இவற்றின் அடிப்படையிலேதான் நாங்கள் குழுக்களாக சென்று கிராமத்தைப்பற்றிய கணக்கெடுப்பு செய்தோம். அதையே இன்று இரவுக்குள் குழுக்களோடு கலந்துரையாடி கட்டுரையாக்கம் செய்யப்பட்டு மறுநாள் விவாதிக்கப்பட்டது.
                           சகோ. நிக்கோலாஸ், சகோ. ராபர்ட்

22.09.09

இந்த குமுக பகுப்பாய்வின் மூன்றாவது நாளான இன்று வழக்கம் போல் எம் களப்பணியானது நாட்டுப்புற கலைகளோடு துவங்கியது. காலை உணவிற்கு பிறகு 10.30 மணி போல் எம் சமுக பகுப்பாய்வின் வகுப்புகள் சிறிய செபத்துடன் துவங்கியது. அதன் பிறகு முந்தய நாளின் செய்திகளை குறிப்பாக குறுக்கு நெடுக்கு, நீங்கள் செய்வது, 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் ஆகியவற்றைப் பற்றி குழு வாரியாக் வழிநடத்துனர் திரு.ஸ்டிபன் தலைமையில் பகிர்வுகள் நடைபெற்றது. முதல் குழுவில் சகோ. சுரேஸ்குமார் மற்றும் சுரேஸ் பாபு ஆகியோர் வாழக்காய்பட்டியில் செய்த குறுக்கு நெடுக்கு பயணத்தை பற்றி விளக்கினார்கள். சகோ. பிரான்சிஸ் மற்றும் லியோ பார்த்தல், கேட்டல், உள்வாங்குதல் என்ற தலைப்பில் அக்கிராம அமைப்பை உணவு, சொத்து, தொழில், கல்வி, சமுக அமைப்பு, சுற்றுச்சூழல், மண்வகைகள், விவசாய நிலங்கள் என்ற தலைப்பில் வரி வரியாக விளக்கினார்கள். ஆதன் பிறகு சகோ. ரெக்ஸ், சகோ. அஜின் ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தைப் பற்றி விளக்கினார்கள். அதனைத் தொடர்ந்து சகோ. மரிய தாஸ், சகோ. அலெக்ஸாண்டர் ஆகியோர் களப்பணியின் போது ஏற்பட்ட உணர்வுகளை உயிரோட்டமாக விளக்கினார்கள். இவர்ள் அனைவரும் களப்பணியாளர் செருமனி அவர்களின் துணையால் இயங்கினார்கள். பிறகு பேரா. ஸ்டீபன் அவர்கள் முதல் குழுவின் பகிர்வைப் பற்றிய ஒரு விமர்சனம் தந்து அவர்கள் விட்டு விட்டதை தெளிவுபடுத்தினார்.
பிறகு 12.25 மணியளவி;ல் களப்பணியாளர் பிரபு அவர்களின் தலைமையில் தண்டல்காரன்பட்டியில் நடைபெற்ற சமுக கலந்தாய்வினைப் பற்றி ஒரு பகிர்வு நடைபெற்றது. ஆதில் சகோ. ஜேம்ஸ், சகோ. இளங்கோ அவ்வூரின் குறுக்கு நெடுக்கு நடை பற்றியும் வெளிப்புறத்தோற்றத்தையும் பகிர்ந்தனர். பிறகு சகோ. சுதாகர், சகோ. நிக்கோலஸ் மற்றும் சகோ. ராயப்பன் அலசலும், அறிதலும், அனுபவமும் என்ற தலைப்பில் அக்கிராமத்தைப் பற்றி பகிர்ந்தனர். சகோ. ஜேம்ஸ் சகோ. நிக்கோலஸ் ஆகியோர் 100 நாள் வேலை வாய்ப்பு தி;ட்டத்தைப் பற்றி ஒரு அறிமுகத்தையும் அதன் நிறை குறைகள் பிரச்சனைகள் தேவைகள் பற்றி விளக்கினர். ஆதன் பிறகு சகோ. கென்னடி அவர்கள் களப்பாய்வின் போது ஏற்பட்ட உணர்வுகளைப் பகிர்ந்தார். பிறகு பேரா. ஸ்டீபன் அவர்கள் அந்தப் பகிர்வினை வழிநடத்தினார். ஆமர்வு முடிவுக்கு வந்தது.

பி.ஆர். எ. யின் கருவிகள் அல்லது யுக்திகள்
இரண்டாம் நிலை தகவல் திரட்டல்:
நோக்கம்:
     ஒரு சமுகத்தின் வளர்ச்சி நிலையையும் அதனைப் பற்றிய அடிப்படை அறிவும் வழங்குவது.

 அணுகுமுறை:
 1. ஒரு சமுகத்தின் குழுக்கள், நிறுவனங்கள், ஆண்-பெண் பற்றிய எண்ணிக்கையைத் தருவது.
     2. ஒரு கிராமத்தின் முக்கிய வரலாற்று நிகழ்வு
     3. சமயங்களைப் பற்றிய புள்ளி விவரம்
     4. இயற்கை காரணிகள்(நிலம், நீர், காடு)
     5. பயிர் வகைகள்
     6. சமுதாயத்தின் குழுக்கள் மற்றும் அமைப்புகள்
     7. சமுக-பொருளாதார விளக்கம்
தகவல் பெறும் வழிமுறை
     1. வெளியில் இருந்து தகவல் பெறுவது(மக்கள் தொகை கணக்கெடுப்பு, அறிக்கை, கிராமத்தைப் பற்றிய வரைபடம்)

பி. ஆர். ஏ. யின் யுக்திகள் :
     1.குழு பரிமாணங்கள், அறிந்து கொள்ளுதல், திருப்பி பார்த்தல்.
  2. மாதிரி பார்த்தல், குறுக்கு நெடுக்கு நடை, சொத்து மதிப்பீடு, சமுக வரைபடம்

வெண் வரைபடம் :
  இதன் நோக்கம்:
     ஒரு கிராமத்தில் செயல்படும் நிறுவனங்களுக்கும், மக்களுக்கும் உள்ள தொடர்பை குறித்துக் காட்டுவது

அணுகுமுறை
  1.இயங்குகின்ற நிறுவனங்களின் எண்ணிக்கை
  2. நிறுவனங்கள் ஆற்றும் பங்கு
  3. மக்களின் வளர்ச்சிக்கு நிறுவனம் ஆற்றும் பங்கு
  4. நிறுவனங்களில் உள்ள நபர்கள்
  5. நிறுவனங்களின் செயல்பாடு
வெண் வரைபடம் எவ்வாறு உறுவாக்கப்படுவது என்று கற்றுக்கொள்ள பேரா. ஸ்டீபன் அவர்கள் சில வழிமுறைகளை கற்றுத்தந்தார்கள்.

கேட்க வேண்டிய கேள்விகள்
 1.ஏத்தனை நிறுவனங்கள், அவை ஊருக்கு உள்ளே அல்லது வெளியே எவ்வளவு தூரம்
  2.இந்த வரைபடத்தை மக்களைக் கொண்டு வரையவேண்டும். இதன் முலம் மக்கள் தங்களின் ஊரைப் பற்றிய தெளிவைப் பெறுகிறார்கள்ம.
  3. கிராம நிர்வாகத்தின் குறைநிறைகளை அறிந்துகொள்ள
 4. சமுகத்தின் ஆதாரங்களை அறிந்து கொள்ள வெண் வரைபடம் உதவுகிறது.

அதன் பிண்ணனியில் நாங்கள் களப்பணியாளர் பிரபு மற்றும் களப்பணியாளர் செருமனி தலைமையில்  இரண்டு குழுக்களாகப் பிரிந்து வாழக்காய்பட்டிக்கு சென்றோம். ஆங்கு மக்களை ஒன்று கூட்டி வெண் வரைபடம் வரைந்தோம். ஆவ்வூரில் இயங்கும் அரசு நிர்வாகங்கள் எந்த அளவிற்கு அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்பதை அவர்களே வெண்வரைபடம் முலம் உணர்ந்தார்கள். பிறகு இரண்டு குழுக்களும் ஊரின் மையப்பகுதிக்கு வந்து மக்களை ஒன்றுகூட்டி அவர்களே ஊரின் வரைபடத்தை வரைந்து அவ்வூரின் உள்ளதை அதிலும் குறிப்பாக அவர்களின் கல்வி நிலையை அவர்களே உணர்ந்தார்கள்.

  பின்னர் பேரா. ஸ்டீபன், களப்பணியாளர்கள் பிரபு, செர்மனி, நாங்கள் மற்றும் மக்கள் துணைகொண்டு ஊரின் அமைப்பைப் பற்றிய  தெளிவுகளைப் பெற்று திரும்பினோம்.
சகோ. மரியதாஸ், லியோ

23.09.09

காலை 7 மணிக்கு கிராமியக் கலைநிலைகளோடு நாளைத் தொடங்கினோம். காலை 9.30 மணிக்கு அமல அன்னை(I.C.M) கன்னியர் இல்லத்தில் திண்டுக்கல் சமூக சேவை அமைப்பினரால் நடத்தப்பட்ட அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் தமிழ் நாடு புதுச்சேரி இணையக்கூட்டத்தில் நாங்கள் பங்கு கொண்டோம். இதில் அனைத்து அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் பணிகளைப் பற்றி விளக்கம அளித்தார்கள். துவக்க நிகழ்ச்சியில் சமூகத் தீமைகளைத் ஒழிக்கவும் சமூகம் பற்றிய விழிப்புணர்ச்சியை மக்கள் மத்தியில் ஏற்;படுத்தவும் மனித உரிமை, கல்வி, அடிப்படை வசதி, இயற்கை சக்தியை பாதுகாப்பதே இன்றைய சமூக தொண்டு நிறுவனங்களின் முக்கிய பணி என்று திரு. ஆந்தோனி விளக்கினார். முதல் அமர்வில SINPAD என்ற தொண்டு நிறுவனத்திலிருந்து திரு. ராஜேந்திரன் அவர்கள் உலகமயமாக்கல், தராளமயமாதல், வெப்பமாற்றம்;, காலமாற்றம் போன்றவற்றின் தாக்கங்களை கண்டு கொண்டு அதனை எதிர்கொள்ள மக்களோடு சேர்ந்து இவர்கள் செயல் படவதாக விளக்கினார்.   அதற்கு பிறகு JASUL என்ற தொண்டு நிறுவனம் நிலைத்த வாழ்வாதாரத்திற்கான கூட்டு செயல்பாடுகள் பற்றி விளக்கினார்கள். வாழ்வாதாரம் குறித்த பார்வையை மக்களுக்கு கொண்டு செல்வதும், இதில் வெள்ளம், இயற்கைச் சீற்றம் போன்றவற்றால் வருங்கால சந்ததியின் வாழ்வாதாரம் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதையும் நமக்கு கூறினார்கள். இதனால் நிலம், நீர், காடு, கால்நடைகள், மனிதமே பாதிக்கபடுகின்றன என்று கூறி முடித்தார்கள்.

அடுத்ததாக TNForce,  சென்னையில் இருந்து திருமதி.தமிழ்செல்வி என்பவர் குழந்தை உரிமை மீறல் பற்றி எங்களுக்கு எடுத்து கூறினார்கள். 1வயது முதல் 6வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அனைத்து விதமான பராமரிப்புக்கு தேவையானவற்றை உறுதிப்படுத்துதல் இந்த தொண்டு நிறவனத்தில் 128 இணையதளங்களை (NetWorking)  தமிழ்நாடு முழுவதும் கொண்டு செயல் படுவதாக அவர்கள் கூறினார்கள்.

இரண்டாவது அமர்வு தொடக்கத்தில் HRFDL  என்ற தொண்டு நிறுவனத்தில் இருந்து திரு.ராஜேந்திரன் தாழ்த்தப்பட்டோர்க்கு அனைத்து உரிமைகளும் கிடைக்கவும், அவர்களை அடிமை நிலையில் இருந்து விடிவிக்கவும் இவர்கள் போராடுவதாக விளக்கினர். மேலும் ஆரியரின் வருகையால். இந்து மதத்தில் மனிதன் சாதி என்ற பெயரில் மிதிக்கப்படுகிறான் என்றும் இது பிறகு எல்லா மதத்திலும் பரப்பப் பட்டதாகவும் எங்களுக்கு விளக்கினார்.

பின் சமச்சிர் கல்விப் பற்றி திரு.ஞானமணி அவர்கள் அனைவருக்கும் கல்வி தேவை, கல்வி தேவை, என்பது இன்றைய கால கட்டத்தில் மிகவும் முக்கியமாக ஒன்று என்றும் எங்களுக்கு விளக்கினார். மூன்றாவது அமர்வில் தமிழ்நாடு நிதி பாதுகாப்பு கூட்டமைப்பில் இருந்து தண்ணீரை நாம் பாதுகாக்க வேண்டும் என்றும், தண்ணீர் நமது வாழ்விற்கு சொத்து என்றும் அது நமக்கு மிகவும் முக்கியமாக தேவைப்படுவதாகவும், மக்களுக்கு விளக்களமளித்தார்.

பிறகு தலித்த விடுதலைக்கான மாற்று முன்னனியில் இருந்து அம்பேத்கரின் கொள்கையை அடித்தள மக்களுக்கு கொண்ட சென்று மக்களுக்கு விழிப்புணர்வு கொடுப்பதும், எந்த ஒரு கட்சியையும் சேராமல் தனித்து செயல்படுவதும், எந்த ஒரு தலித் விடுதலையை விரும்பும் யாரும் இதில் சேர்ந்து செயல்படலாம் என்று விளக்கினார்கள்.
இத்துடன் இன்றைய நிகழ்வுகள் முடிவடைந்து இரவு 7மணியளவில் நாங்கள் எங்கள் தங்கும் இல்லம் வந்து சேர்ந்தோம்
                                சகோ.கென்னடி, ஜஸ்டின் சுதாகர்

24.09.2009


இந்த சமூக பகுப்பாய்வின் ஜந்தாவது நாளான இன்று வழக்கம் போல் எம் களப்பணியானது நாட்டுப்புற கலைகளோடு துவங்கியது. காலை 11.00 மணிக்கு எமது வகுப்புகள் ஆரம்பமானது.இந்த அமர்வில் நாங்கள்  22 ஆம் தேதி செய்த ஆய்வினை பகிர்ந்து கொண்டோம். அதே போல் 23ஆம் தேதி நடைபெற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகளைப் பற்றியும் ஆய்வுசெய்தோம். இதில் சுமார் 15 நிறுவனங்கள் ஒன்றாக வந்து சமுக ஒற்றுமைக்கு உழைப்பதை நாங்கள் உணர முடிந்தது.

வென் வரைபடம்
  சுரேஸ் மற்றும் றெக்ஸ் வாழைக்காய்பட்டியின் மேற்பகுதியைப் பற்றி எடுத்துரைத்தனர்.
  ராபர்ட் மற்றும் இசபெல்லா வாழைக்காய்பட்டியின் கீழ் பகுதியின் பிரச்சனைகளை எடுத்துரைத்தனர். இங்குஅனைத்தும் ( மருத்துவமனை பஞ்சாயத்து பள்ளி ) போன்ற அனைத்தும் ஊருக்கு வெளியே இருப்பதை உணரமுடிந்தது. தண்ணீர் பிரச்சனை  மிக முக்கியமானதாக எங்களால் உணரமுடிந்தது.

சமுக வரைபடம்
வாழைக்காய்பட்டியை எங்களின் சமுக வரைபடத்ததிற்கு தேர்வு செய்தோம். எனவே மக்களை திரட்டி ஒரு பொது இடத்தில் ஒன்று கூடினோம். சுமார் 20 பேர் ஒன்றாக வந்து கல்வியும் குழந்தைகளும் என்ற கருத்தில் சமூக வரைபடம் வரைந்தனர். இதனை சுதாகர் மற்றும் சுரேஷ்பாபு வழி நடத்தினர். மக்களும் ஒன்றாக வந்து இதற்கு துணைசெய்தனர். இளைஞர்களும் இளம் பெண்களும் சிறு குழந்தைகளும் ஒன்றாக வந்து தங்கள் ஊரின் நிலைமையை தெளிவாக அறிந்து கொண்டனர்.   

பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட குழு ஆய்வு பற்றி பேரா. ஸ்டீபன் அவர்கள் விளக்கினார்கள். அதன் தன்மையைப் பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் நாங்கள் முழுமையாக உணர்ந்தோம். பிறகு எங்களுக்கு உள்ளே இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட குழு ஆய்வினை விவாதம் செய்தோம்.

ஒரு குழுவினர் இளைஞர்கள் என்ற முறையில் குரு மாணவர்கள் சந்திக்கும் சவால்கள் பற்றியும் இரண்டாம் குழுவினர் தூய பவுல் குருத்துவக்கல்லூரியின் கல்வி நிலைப்பாடுகளைப் பற்றியும் விவாதம் செய்தனர்.

பிறகு 6 மணியளவில் கிராமத்திற்கு சென்று இரு குழுக்களாகப் பிரிந்து ஆய்வுசெய்தனர். ஒரு குழு இளைஞர்களும் சுதந்திரமும் என்ற தலைப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட குழு ஆய்வு செய்தது. மற்றொரு குழு முதியவர்களின் பிரச்சனைகளை ஆய்வு செய்தனர்.

 பின்னர் 8.30 மணியளவில் திருப்பலி தொடர்ந்து இரவு உணவுடன் இன்றைய நாள் இனிதே முடிந்தது.  
சகோ.ரெக்ஸ், இளங்கோ

25.09.09

இன்று காலை 7மணி முதல் 9.00மணி வரை காலைகளோடு எங்கள் பயிற்சியை ஆரம்பித்தோம். இன்று சிறப்பாக, புதிதாக ஒயிலாட்டம் கற்று கொண்டோம். பிறகு சரியாக 10.30 மணியளவில் தந்தை ஜான்பீட்டர் அவர்கள், டாக்டர் சகாயம் அவர்களை பற்றி கூறி அமர்வை தொடங்கி வைத்தார். அதன்பிறகு தாங்கள் ஒவ்வொருவரும் எங்களை அறிமுகம் செய்து கொண்டோம். பிறகு இந்தியாவின் சாதனைகள், வேதனைகள் என்ற தலைப்பில் நமது இந்தியாவைப் பற்றி திரு. சுகாயம் தெளிவாக விளக்கிக் கூறினார்.அவை பின்வருமாறு.

சாதனைகள்

அமெரிக்காவில் 40 சதம் மருத்துவர்கள் இந்தியர்கள் என்றும், இந்தியாவில் 4500 தாவர வகைகள் மருந்துக்கும் உணவுக்கும் பயன்படுத்தப்பட்டன என்றும், பால், தேயிலை, சினிமா தயாரிப்பு, மொபட், பட்டதாரிகள் உருவாக்கத்தில் இந்தியா முதலிடம் வகிப்பதாகவும், புகையிலை, நெல், பருத்தி, கோதுமை உற்பத்தியில் 2-ம் இடம் வகிப்பதாகவும் அவர் கூறியது எங்களை வியப்படையச் செய்தது. 

வேதனைகள்

இந்திய வருமானத்தில் 20 சதம் தான் மக்களிடையேப் போய் சேருகிறது. குடந்த 10 வருடத்தில் 16,000 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். பாலியல் தொழில் புரிவோர் அதிகம் விதவைகள் எனச் சொன்ன போது மிகுந்த வருத்தமளித்தது. கேள்வி நேரத்தின் போது சகோதரர்கள் தங்கள் சந்தேகங்களைக் கேட்டு தெளிவானப் பதில் பெற்றனர்.
எடுத்துக்காட்டாக,
1.பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. ஆனால் போதிய ஊட்டச்சத்து இல்லாமல் இறக்கும் குழந்தைகளின் விகிதம் அதிகமாக உள்ளதே?
2.பெரிய பெரிய பணக்காரர்கள் அதிகம் நம் நாட்டில் இருப்பினும் ஏன் இன்னும் நம் நாடு இந்நிலையில் இருக்கிறது?

பிறகு மதியம் நடந்த வகுப்பில் விதவைகள் என்ற குறும்படம் காண்பிக்கப்பட்டது.அதிலே ஒரு விதவைப் பெண் இந்த சமூகத்தில் சந்திக்கும் அவலங்கள், வேதனைகள், சமூகத்தின் ஓரந்தள்ளப் பட்ட நிலையில் மக்கள் அவளைப்பார்த்து கூறும் இழிசொற்கள் போன்றவற்றை அந்தக் குறும்படம் தெளிவாக விளக்கியது. பிளகு மாணவர்கள், வளர்ந்துவிட்ட இந்த நாகரீகக் காலத்திலே இதைப் போன்ற மூடப்பழக்கத்திற்கு அடிமையாகிவிடக்கூடாது என்னும் தங்கள் கருத்துக்களை முன் வைத்தனர். 


பிறகு மாலை 4.30 மணியளவில் வாழைக்காய்பட்டி கிராமத்திற்கு சென்று மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி சமூக வரைபடமும், குழு கலந்துரையாடல் என்ற இரு கருவிகளைப் பயன்படுத்தி ஆய்வுசெய்தோம். பிறகு 8.00 மணியளவில் திருப்பலி கொண்டாடி அதிலே சிறப்பாக நாட்டுத் தலைவர்களுக்காகவும்,மக்கள் இழந்து போன தங்கள் உரிமைகளை மீண்டும் பெற வேண்டியும் செபித்து இந்நாளை இனிதே நிறைவு செய்தோம். 


                                      சகோ.அலெக்ஸ் , ஜேம்ஸ்
26-09-09

விரிவுரையாளர் : அருட்பணி. மரிய அருள் சேசு காலை10.00 மணியளவில் அருட்பணி. மரிய அருள் சேசு அவர்கள் தலித் இன வேறுபாடு பற்றிய தனது பரந்துபட்ட கருத்துக்களை உண்மைகளை பகிர்ந்து கொண்டார்கள்.முதல் அமர்வு 10.00 முதல் 11.00 மணிவரை நடைபெற்றது.

ஓவ்வொரு மனிதனும் ஓரு கலாச்சாரத்தின் படைப்பாதக இருக்கின்றான். இக்கலாச்சாரம் தான் இந்தியாவின் தாண்மையை நிர்ணயிக்கின்றது. திருமணங்கள் குறிப்பிட்ட சாதிக்குள்தான் நடைபெறுகின்றது. ஜாதியைத்தாண்டி மக்கள் வருவதில்லை. நான் வேறு நீ வேறு என்பதை விட, நான் தான் சிறந்தவன், பெரியவன் என்ற எண்ணமும் செயல்பாடும்தான் சமுகத்தின் சீர்கேட்டிற்கு காரணம் என விளக்கப்பட்டது. ஜாதியத்தை கட்டிக்காக்க பெண் கருவியாக்கப்பட்டதை தெளிவுபடுத்தினார்.  

பின்னர் இரண்டாம் அமர்வு 11.15 முதல் 12.30 வரை நடைபெற்றது. உலகை ஆட்டிப்படைக்கும் வேறுபாடுகளான இனவெறி நிறவெறி என்பது எலும்பு உடல் அமைப்பு போன்றவற்றின் அடிப்படையில் வேறுபாடு காட்டப்படுகின்றது. நுpறவெறியில் நிறம் வேறுபடுத்திக்காட்டப்படுகிறது. ஆனால் இல்லாத ஒன்றை இருப்பதாக நிகழ்த்திக்காட்டுவது சாதிவேறுபாடு என்ற உண்மை புலப்படுத்தப்பட்டது. இது
1.  அகமணமுறை
2.  திருவிழாக்கள்
3.  இட்டப்பெயர்,தொட்டபெயர்
4.  சொல்லாடல்
5. உடல்மொழி 

போன்றவற்றால் உறுதிபடுத்தப்படுகிறது. சாதியின் அன்றாடப்பழக்கவழக்கங்கள் பற்றிய மூன்றாவது அமர்வு நண்பகல் 12.30 முதல் 1.30 வரை நடைபெற்றது. சாதிய வேறுபாடுகளின் அன்றாட பழக்கவழக்கங்களைப் பற்றி அருட்தந்தை விளக்கினார்.


  • ஊரின் சமூகஅமைப்பை பார்க்கும் போது கிழக்கு சனி மூலையில் தாழ்த்தப்பட்டவர்கள் இருப்பதை காணலாம்
  •  குடும்பத்தின் புலம் பெயர்ந்த கதைகள் வழி அறியலாம்
  • வாழ்விற்கும் வாழ்வைக் கூறுபோடும் தொன்மங்கள் வழியாக அறியலாம்
  • சாமிகள் வழியாக அறியலாம்
  • வெள்ளம் பஞ்சம் போன்ற துயர சம்பவங்களால் புலம் பெயர்ந்த கதைகள் மூலம் அறியலாம்
  •  நினைவுகள் பதிவுசெய்யப்படும் பாணிகள் மூலம் அறியலாம்
இவையனைத்தும் ஆதிக்க சக்திக்கும் அடிமைப்படுத்தப்படும் சக்திக்கும் இடையில் நடைபெறும் போராட்டத்தை விளக்குவதாக எடுத்துக்கூறினார். சாதியப்படிநிலையை சாதிய ஒழிப்பு, சும்மாஇருத்தல் எனும் இருவேறு அம்சங்கள் குறுக்கீடு செய்கின்றன என்றும் அகவயப்பார்வை, புறவயப்பார்வை என இருவேறுபட்ட பார்வைகள் இருப்பதையும் விளக்கிக்கூறி தன்னிலைத் தெளிவு பெறத்தூண்டினார். இறுதியாக உலகின் பாவங்களில் ஒவ்வொறுவரும் ஒரு அம்சம் எனக்கூறி இதை மாற்ற என்ன செய்யப் போகிறோம் என்ற தான்மைத் தெளிவு பெறச்செய்வதோடு அதை எழுதிவைத்துக்கொள்ளுமாறு அறிவுறித்தினார்.
இறுதியாக சகோ. இசபெல்லா நன்றியுரைக் கூற 'தலித் இனவேறுபாடு' பற்றிய அமர்வு நிறைவுபெற்றது.

மாலை 2.30 மணி முதல் 3.30 மணிவரை நடைபெற்ற நான்காம் அமர்வு பெண்ணடிமைத்தனத்தின் வரலாற்றைப்பற்றியதாக இருந்தது. வழக்கறிஞர் திருமதி. ரமணிமேத்யு உரையாளராக அழைக்கப்பட்டிருனந்தார். ஆமர்வின் தொடக்கத்தில்
1.  பெண்ணின் சமூகபிரச்சனைகள்
2.  காரணங்கள்
3.  தீர்வுகள்
என்ற கேள்விகளின் அடிப்படையில் குழு கலந்துரையாடலும் கருத்துப்பகிர்வும் நடைபெற்றது.

ஆண் பெண் ஏற்றத்தாழ்வு பிறப்பிலிருந்தே ஆரம்பமாகின்றது. உலகின் ½ பெண்கள். வேலையிலிருக்கும் பெண்கள் 2/3. ஊதியம் பெறும் பெண்கள் 1/10. சொத்து வைத்துள்ள பெண்கள் 1/100 என ஜ.நா அறிக்கையில் பெண்களின் நிலையைத் தெளிவாக எடுத்துக்காட்டினார்.

பெண்கள்தான் தொடக்கத்தில் தலைமைத்தாங்கி வேட்டையாடச் செல்பவர்களாகவும் இருந்திருக்கின்றனர். நாளடைவில் பெண்ணின் உடல் பலவீனத்தை பயன்படுத்தி ஆண்கள் அவர்களை அடிமைப்படுத்திவிட்டார்கள். இதிலிருந்து பெண்கள் விடுதலைபெற தன்னிலைத் தெளிவு தேவை எனக்கூறி தனது உரையை முடித்தார்கள். இறுதியாக சகோ. சுரேஷ் குமார் திருமதி. ருமணி மேத்யு அம்மா அவர்களுக்கு நன்றி கூறினார். மாலை 5.30 மணிக்கு சிறிய செபவழிபாடு நடைபெற்றது. பின்னர் ஆயுத பூஜையை முன்னிட்டு அலுவலகத்தை சுத்தம் செய்தோம். மாலை 7 மணியளவில் சக்தி கலைக்குழுவின் கலைநிகழ்ச்சியைக் கண்டுகளிக்க சென்றோம். இரவு 9 மணியளவில் இனிதே இல்லம் திரும்பினோம்.
சகோ. இசபெல்லா, பிரான்சிஸ்

27.09.09


வாரத்தின் துவக்க நாளான இன்று காலை 7.00 மணிக்கு எங்களது கலைப்பயிற்சியைத் துவங்கினோம். 9.00 மணிக்கு பயிற்சி நிறைவு பெற்று திறனாய்வு நடத்தப்பட்டது. கற்றுக்கொடுத்த ஆசிரியர்களுக்கு நன்றி நவிலப்பட்டது.

திண்டுக்கல் தொகுதி எம்.எல்.ஏ பாலபாரதி அவர்கள் காலை 11 மணியளவில் இந்திய, தமிழக அரசியல் பற்றி விரிவாகக் கூறினார். 2000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட மன்னராட்சி முறையே அரசியல் கட்சிகள் தோன்ற வழிவகுத்தது. பின்பு சில உயர்சாதியினரின் சுயநலனுக்காக தோன்றிய சங்கங்கள் மக்களை அடக்கி ஆண்டது. அதுவே இன்று சாதிய அரசியல் நடைபெற உதவுகிறது என்றும், மக்கள் வளர்ச்சி அல்ல மாறாக தனது கட்சியின் வளர்ச்சியே முக்கிய நோக்கமாகக் கொண்டு கட்சிகள் செயல்படுகின்றன என்று குற்றம் சாட்டினார். தான் செய்யும் பணிகள்  எவ்வாறு ஆளும் கட்சியினரால் முட்டுக்கட்டைப் போடப்படுகின்றன என்பது பற்றியும் அரசியலின் இன்றையத் போக்குகளையும் எடுத்துக்கூறி தனது உரையினை நிறைவுசெய்தார்.


பின்பு 12.15 மணியளவில் முனைவர்.மணிவேல், திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக் கழக நாட்டுப்புறவியல்துறைப் பேராசிரியர் அவர்கள் இந்கிய பொருளாதார முறைகளைத் தெளிவுப் படுத்தினார். ஓரு நாடு தனது மனித இயற்கை வளங்களை முழமையாகப் பயன்படுத்தும் நிலையில் இருப்பதே வளர்ந்த நாடு எனவும் இந்திய நாட்டின் விவசாய மற்றும் மக்கள் வளத்தையும் தெளிவுபடுத்தினார். வேலையில்லாத் திண்டாட்டத்தினால் குடும்ப பொருளாதாரம் எவ்வாறு பாதிப்புக்குள்ளாகிறது என்பதை விளக்கிக்கூறினார்.


மதியம் 3.00 மணியளவில் திரு. ஜேம்ஸ் விக்டர் அவர்கள் 'தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005' எந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்கிறது என்பதை நல்லத் தெளிவோடும், தம் சொந்த அனுபவங்கள் வாயிலாகவும் விளக்கினார்.



சட்டத்தைப் பயன்படுத்தும் முறை:

அனுப்புனர்
           'தெளிவான முழு முகவரி'
பெறுநர்
         'சம்பந்தப் பட்ட துறை முகவரி'
பொருள் : 
               தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-பிரிவு-6-ன் படி....எனத்தொடங்கி நமது தேவைகளை தெளிவாக எழுதவேண்டும். 

இந்த அமர்வு நிறைவு பெற்றதும் 5.30 மணியளவில் மாணவர்கள் கள அனுபவத்திற்காக தங்களது கிராமங்களுக்கு அவர்கள் தங்கவிருக்கும் குடும்பத்திலிருந்து வந்திருந்தவரோடு சென்றனர்.

சகோ.சுரேஸ் குமார், ஜேம்ஸ்

28.09.09

இன்றைய நிகழ்வுகளை அனைத்தும் கருத்து நிறைந்த சமுதாய மற்றும் மனித உரிமை சம்மபந்தப்பட்ட இந்திய வரலாற்றையே புரட்டி போடுகிற ஆரிய-பார்ப்பன வகுப்பு வாதம் பற்றி அருட்தந்தை பால் மைக்கேல் அவர்கள் மிகவும் தெளிவாக விளக்கினார்.

சாதி, மத, இன, மொழி, இதில் வேற்றுமை பாராட்டாமல் மன்னராட்சி முறை ஒழிந்து மக்களாட்சியை மையமாகக் கொண்டு வளரும் இந்தியா இன்று இனம் பிரிக்கப்பட்டு மதச்சாயம் பூசப்பட்டு மனித உரிமை மீறப்பட்டு மனிதனே மனிதனை அழிக்கும் அவலநிலை இந்தியாவில் இருக்கிறது என்றால் அதற்கு முதற்க்காரணம் R.S.S என்ற அமைப்பாகும்.

R.S.S அமைப்பின் நோக்கம்
  1992-ஆம் ஆண்டு விஜயதசமி அன்று உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு பார்ப்பன இளையோருக்கு உண்டானது. தொடக்கத்தில் இந்த இயக்கம் உடற்பயிற்சியில் கவனம் செலுத்தியது. பிறகு இதன் மூலம் நச்சுக் கருத்தியை இறையோர் மனதிலே ஏற்ற ஆரம்பித்தது. இந்த அமைப்பு ஹெட்கேவார் என்ற பாப்பரைரால் நாக்பூரில் உருவானது.

R.S.Sஅமைப்பின் தாக்கம்:-
  • சிறுபான்மையினரை அதிலும் குறிப்பாக முஸ்லீம், கிறிஸ்தவர்களை வெறித்தனமாக தாக்குவது.
  • இந்திய வரலாற்றினையே திரித்துக் கூறுவது.
  • முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவர்களை அந்நியர்களாக பார்ப்பது. போன்றவைகள்
  • இந்த R.S.S ன் கருத்தியல்களை இந்து இணையோர் மனதில் வேரூரின்றிச் செய்து எப்போதும் முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவர்களை எதிரிகளாக அவர்களுக்கு சித்தரிப்பது.
இந்த R.S.S. இயக்கம் மதத்தினை மையமாக வைத்து மனிதத்தினை அழிக்கிறது. இதனால் மனித உரிமைகள் மீறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட விளைவுகளையும் குறிப்பாக பாபர் மசூதி இடிப்பு, அருட்சகோதரிகள் மீது தாக்குதல், பாதரியார் ஸ்யின் மற்றும் அவர் குழந்தைகள் எரிப்பு, கோத்ரா ரயில்பெட்டி எரிப்பு, இதனால் இஸ்லாமியர் கொல்லப்பட்டது.

இன்னும் இது போன்று நாச வேலைகளை செய்யும் இந்த R.S.S அமைப்பு இந்தியாவில் மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது என்றும் இதனால் சிறுபான்மையினர் வாழ்க்கை ஒரு கேள்விக்குறி என்றும் தெளிவாக தந்தை பால்மைக்கேல் இன்றைய நாளில் எங்களுக்கு எடுத்துச் சொன்னார்.
                                     -சகோ.ஜேம்ஸ், மரியதாஸ்

06.01.2009

சமூக பகுப்பாய்வின் ஒரு பகுதியை முடித்துவிட்டு அக்டோபர் 6-ஆம் தேதி காலை அனைவரும் வந்தோம். காலை 10மணிக்கு திரு.ஸ்டீபன் வழிகாட்டுதலில் அருட்;.திரு.ஜான்பீட்டர், அருட்.திரு.செபஸ்டின், அருட்.திரு.மைக்கில் ஜோ, உரையாளர்கள் புனித பவுல் இறையியல் கல்லூரி மற்றும் அருட்.திரு.ஆரோக்கியம் ளு.து, திரு.திரவியம் அவர்களின் முன்னிலையில் எங்களுடைய சமூகப் பகுப்பாய்வின் அறிக்கையை P.R.A. கருவிகளை பயன்படுத்தி கொடுத்தோம். அதை அனைத்தையும் ஒருங்கிணைத்து இதில் எழுதியுள்ளோம்.

சகோதரர்கள் பெயர், சென்ற ஊர் மற்றும் செய்த வேலைகளை இங்கு பட்டியலிட்டு உள்ளோம்.

முதலாண்டு இறையில் மாணவர்களாகிய நாங்கள் எங்கள் குழுமத்தின் வளாகத்திற்கு வெளியில் உள்ள விரைவு உலகினையும், நாங்கள் வாழ்கின்ற வாழ்க்கை முறை மற்றும் கற்கின்ற இறையியவையும் ஒப்பிட்டுச் சிந்திக்கும் பொழுது, எங்களை அறியாத ஒரு நெருடல் எங்களைத் துளைத்துக் கொண்டே இருக்கிறது. ஒரு வேளை நாம் உள்ளே மேற்கொள்ளும் படிப்பும் பயிற்சியும் குமுகத் தொடர்பற்றதாக இயற்கைக்கு எதிரானதாக இருக்கும் வாழ்க்கைக்கு வழிவகுத்துவிடுமோ என்ற தேடலில் விளைந்த சீரிய முயற்சியில் 'சமூகப் பகுப்பாய்வுப் பயிற்சிப்பட்டறையை' முடித்து சமூக பகுப்பாய்வுப் பயிற்சிக்காக நாங்கள் எங்ள் தளங்களை நோக்கி 29-ந்தேதி செப்டம்பர் மாதம் மாலை 5.30மணிக்கு உண்மைகளை மக்களின் எதாhத்த வாழ்வியலோடு உரசிப்பார்க்க 15 முதலமாண்டு இறையியல் மாணவர்கள் பிரிந்து சென்றோம்.

வ.எண் - பெயர் -ஊர்- வேலை
1.அஜின்   - கன்னிமார் கோவில்   - தோட்ட வேலை
2அலெக்ஸாண்டர் -   கல்லோடை  - தோட்ட வேலை
அந்தோணி பிரான்சிஸ் -  கண்ணார்பட்டி - பிளாஸ்டிக் செய்யும் வேலை
ஆரோக்கிய இசபெல்லா  - மருதராசிபுரம் - வயல் வேலை
5அருள் ஜேம்ஸ்  - நல்லமநாயக்கன்பட்டி -  வயல் வேலை
அருண் ரேக்ஸ்   - கன்னிமார் கோவில்  - தோட்ட வேலை
இளங்கோ   - கன்னிமார் கோவில்  - தோட்ட வேலை
8  கென்னடி   - குள்ளவானம் பட்டி    - குடிசை தொழில்
9  ஜஸ்டின் சுதாகர்   - கல்லுப்பட்டி   - வயல் வேலை
10  லியோ ஜோசப்   - யாகப்பன் பட்டி  -  நெசவு தொழில்
11  மரியதாஸ்   - நல்லாம்பட்டி -  மண்யடிக்கும் வேலை
12  நிக்கோலஸ் மாசிடோன்   - கொசவப்பட்டி   - அலுவலக பணியாளர்
13  ராபர்ட் ராயப்பன்   - கன்னிமார் கோவில்   - தோட்ட வேலை
14  சுரேஸ்பாபு   - வாழக்காய் பட்டி  -  கட்டிட வேலை
15  சுரேஸ் குமார் -   மரியநாதபுரம்  -  சிமெண்ட் கல் தயாரிப்பு

வேலை அனுபவம்:
  'விரும்பி ஏற்றதால் வேதனையும்
  சுகமாக மாறிய அனுபவம் எங்கள் வேலை அனுபம்'

நாங்கள் சென்று பல வேலைகளை செய்து சோர்ந்துயிருந்தாலும் மக்களின் பலுவின் நிலையைப் பார்த்து எங்கள் வேலையை தொடர்ந்து செய்வோம். கடின உழைப்பாளிகள் என்பதை இவர்களின் கரங்களே எங்களுக்குச் சொல்லின. இவர்கள் பாசமுடையவர்கள், பகிரும் மனப்பான்மை உடையவர்கள் என்பதை உணர்ந்து அவர்களோடு மகிழந்து வாழ்ந்தோம். இவர்களோடு தங்கியிருந்த அனுபவம் பசுமரத்தாணி போல எங்களுக்குள் பதிந்து உள்ளது.

  'பேனாபுடிச்சு எழுதிய கை உங்களுடையது
   மண்வெட்டி புடிச்சு வேலைசெய்ய முடியுமா?
வேலையப்பத்தி ஏதாவது தெரியுமா உனக்கு'

என்று மக்களின் கேள்வி எங்கள் உடலுக்கு சக்தியும் உளசக்திக்கும் வைத்த சவால், படிப்பறிவு மட்டும் போதாதது, பட்டறிவும் வேண்டும் என்று எங்கள் மனசுக்குப் பரிந்துரை செய்து பேனாவும் புடிக்க தெரியும், மண்வெட்டியும் புடிக்க தெரியும் என்று மக்களோடு இணைந்து கஸ்டப்பட்டு மக்களின் அனுபவத்தை இணைந்து பெற்றோம்.

  'உழைக்காதவன் உண்ணலாகாது' என்ற புனித பவுலின் வார்த்தையை எங்களுள் ஏற்று உழைத்தால்தான் உண்ணவேண்டும் என்ற மனநிலையோடு உண்ணுவதற்காக உழைக்காதவன் உண்கிறான் என்றால் அது சுரண்டலின் வெளிப்பாடாகும்.

  'காலை 6.00மணி முதல் மாலை 8.00மணி வரையும் வேலை செய்து மக்களின் துன்பங்களை பார்த்து மக்களுடைய வேதனையில் பங்கு கொண்டு பலர் உணவில்லாமல் துன்பப்பட்டு பசியால் வாடும் மக்களின் உணர்வை உணர்ந்தோம்.

07.10.2009

காலை 7.00 மணியளவில் அருட்பணி மைக்கில் ஜோ மற்றும் அருட்பணி ஜான்பீட்டர் அவர்கள் திருப்பலி நிறைவேற்றி இன்று காலை 10.00 மணியளவில் முதல் அமர்வு இருந்தது. அருட்பணி ஆரோக்கியம் அவர்கள் சமூகப்பகுபாய்வில் நாங்கள் பெற்ற அனுபவங்களை சீர்தூக்கிப் பார்க்கவும், இறையியலாக்கம் செய்யவும் வழிநடத்தினார்கள்.

ஒடுக்கப்படுவதும், ஓரங்கட்டப்படுவதும் உலக நாடுகள் அனைத்திலும் காணப்படுவதை சில உதாரணங்கள் வழியாக விளக்;கினார்கள். துன்புறும் மக்கள் இறை பணியாளர்களிடம் வாழ்வும் ஏற்பும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வருகின்றனர்.

இந்த உண்மையை அருட்பணியாளர் கொடைக்கானல் பணித்தளத்தில் பெற்ற அனுபத்தார்களின் வழியாக விளக்கினார்கள்.
'கடவுள் ஒடுக்கப்பட்டோரிலும்ஒடுக்கப்பட்டோர் கடவுளிலும்'
இருப்பதை இறைவார்த்தையின் ஒளியில் விளக்கினார்கள்.
கல்விநிறுவனங்கள் நடத்துவது படித்தவர்களுக்கு எளிதான ஒன்று. ஆனால் ஏழைகள், ஒதுக்கப்பட்டேன், ஓரங்கட்டப்பட்டேன் வளர்ச்சிக்காக உழைப்பதே நமது பணியாக இருக்க வேண்டும் இரண்டாம் அமர்வு 11.30 மணியளவில் தொடங்கியது. சமூகத்தின் நடைமுறை உண்மைகளை விமர்சனக் கண்ணோட்டத்தில் அணுகி அதை வளர்ச்சிப்பாதையில் இட்டுச் செல்ல வேண்டும். இயேசு இதைத்தான் செய்தார். விமர்சனக் கண்ணோட்டத்தில் அணுகி உண்மையை அறியாவிடில் சமூகத்தின் பாவம் துறவிகளையும் பாதிக்கலாம் என தெளிவு படுத்தப்பட்டது.

 சமூக, பொருளாதார அரசியல், இனப்பிரச்சனைகள் பற்றி நான்கு குழுவாகப் பிரிந்து எமக்குக் கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் ஆய்வு செய்து இறையிலாக்கம் செய்தோம். உடல் உழைப்பு, ஆன்மீகம் மற்றும் அறிவு, பூர்வமாக சுதந்திரம் மறுக்கப்படுவதன் மூலம் அடிமைத்தனம் வருகின்றது. மூன்றாம் அமர்வு 2.45 மணியளவில் அமைந்தது.
  'மக்கள் தங்கள் சொந்தக் காலில் நின்று தங்கள் வாழ்க்கையை நடத்தும் திறமை பெறுவதுதான் வளர்ச்சி'

இயேசு சமூகத்தின் அவலங்களை நன்கு அறிந்து பெண்கள், ஒடுக்கப்பட்டோரின் சார்பாக அவர்களின் விடுதலைகாளாகப் பாடுட்டார்.
தலித் மக்கள், உழைக்கின்ற மக்களின் துன்பங்கள் பற்றியும் அவர்களின் சிற்பபான பண்பு நலன்கள் பற்றியும் கூறி அவர்கள்தான் உயர்வான பண்புள்ள, மதிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை விளக்கமாகக் கூறினார்கள்.

அடிமைகளாக்கப்பட்ட இஸ்ரேயல் மக்கள் விடுதலை அடைந்தபோது, அவர்கள் அடிமைப் படுத்துவதை பின்பற்றாமல் இருக்கவே இறைவன் கட்டளைகளைத் தருகின்றார். சமூகத்தில் வாழும் ஒவ்வொருவரும் சமூகத்தின் பாதிப்பிற் குட்பட்டவர்கள்தான். எனவே சமூகத்தை சரியாக அணுகி விடுதலைப் பணியாற்ற இன்றைய நாள் உதவியாக அமைந்தது.
இறுதியாக, சகோ, இஸபெல்லா நன்றி நவில மாலை 5.30 மணியளவில் வகுப்பு நிறைவுற்றது. மாலை 6.30வரை வேலை தேடிச்சென்றோம். பின் 7.30வரை கலைநிகழ்ச்சிகள் பற்றிய கலந்துரையாடலும் பயிற்சியும் இருந்தது.
சகோ.இசபெல்லா ,ரெக்ஸ்

8, 9, 10 – நிகழ்வுகள்

 8, 9, 10 ஆகிய தேதிகளில் சகோதரர்கள் அனைவரும் பல்வேறு இடங்களுக்கு வேலைதேடி சென்று, பல வேளைகளில் வேதனையடைந்தும், வேலைக் கிடைக்காமலும் தாமதமாக வேலைக் கிடைத்தும் நாங்கள் துன்பத்திற்கு தள்ளப்பட்டு, வேலைகிடைக்காமல் வாழ்நாள் முழுவதும் துன்பப்படுகின்ற இளைஞர்களை நினைத்து அவர்களுடைய வேதனையில் பங்குகொள்ளுகின்ற வாய்ப்பை பெற்றோம். ஒரு வாரம் வேலை செய்த இடத்திலேயே வேலை செய்தாலும் நாங்கள் இன்று பார்த்த வேலைகளுக்கும், ஒரு வாரம் செய்த வேலைக்கு எங்களுக்கு வித்தியாசம் தெரிந்து. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் காசு வாங்கி வேலைச் செய்வதற்கும், காசு வாங்காமல் வேலைசெய்வதற்கும், பல வித்தியாசங்களை நாங்கள் பார்க்க முடிந்தது. சிலர் சுயமாக வேலைதேடிச் சென்று பல  விதமான வேலையைச் செய்து நாங்கள் பல்வேறுபட்ட அனுபவம் பெற்றோம். உணவுக்கு 20ரூபாயும் கொடுத்து எங்களை அனுப்பி விட்டார்கள். நாங்கள் வேலை செய்து கிடைத்த பணத்தை கொடுத்து இரவு உணவை அலுவலகத்தில் சாப்பிட்டோம். இவ்வாறு  இந்த மூன்று நாட்களும் எங்களுக்கு பல்வேறுபட்ட அனுபவத்தை தந்தது

மாலையில் திருப்பலியும் அதில் எங்கள் அனுபவங்களின் பகிர்வும் இருந்தது மூன்று நாளும் எங்களோடு இருந்து எங்களை வழிநடத்திய தந்தை, நார்பட் எங்கள் அனுபவங்களை ஒருங்கிணைந்து எங்கள் சிந்தனையை தூண்டச் செய்தார்.

கலைப் பயிற்சி மற்றும் கலை அனுபவம்


  'குதிங்காலை மண்ணில் ஊன்றி
அதிகாலைக் கதிராய் கலைகளை முழங்க' என்ற நோக்கை கண்முன் கொண்டு செப்டம்பர் 20, 28-ஆம் தேதி வரை காலை 6.30மணி முதல் 8.30மணி வரை கலைப் பயிற்சியை சக்தி கலைக்குழுவின் ஆசான்களின் உதவியுடன் சகோ, சந்திரா ICM அவர்களின் வழிகாட்டுதலின் பெயரில் கற்று வந்தோம். தப்பாட்டம், ஒயிலாட்டம், சக்கை குச்சியாட்டம், களியாட்டம் கற்று தரப்பட்டது. அதை நாங்கள் நன்கு பயிற்சி எடுத்துக் கொண்டோம்

வழிபாடுகள்:-

இயேசு அதிகாலை மலைக்கு சென்று செபித்து பிறகு மக்கள் பணியில் ஈடுப்பட்டார். அவரை பின்தொடர அழைக்கப்பட்ட நாங்களும் தினமும் காலை முதல் மாலை வரை நடந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைந்து இரவு உணவிற்கு முன்பு குழு செபத்துடனோ அல்லது திருப்பலியுடனோ மக்களை முன்வைத்து மக்களுக்காக செபித்தோம், மக்களின் வாழ்வியியல் எதார்த்த சிக்கல்களுடன் உரசிப் பார்க்கும் விதமாக வழிபாட்டினை சிறப்பாக நடத்தினோம். பணியாளர்களின் மறையுரை எங்களை சமூக பிரச்சனைகளுக்கான தொடர் தேடலுக்கு வித்திட்டது. இந்த வழிபாடுகள் சமூக பகுப்பாய்வுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது எனபதில் ஐயமில்லை.


சமூக பகுப்பாய்வின் அனுபவங்கள்:-
  • இறையிவின் தொடக்கமும் முடிவும் மக்களின் அன்றாட அனுபவங்களில் இருப்பதை உணர்ந்தோம். இறையியலின் தொடர்பைக் களத்தில் காணமுடிந்தது.
  •  இயற்கையோடு இணைந்த வாழ்வைச் சுவைக்க முடிந்தது
  •  சாதியை அறவே விடுத்து இலக்கு மக்களை மையமாக்கிப் பணியாற்ற ஒரு மனதாக உறுதி எடுத்தோம்
  •  சமூகத்தின் அமைப்பை குறிப்பாக அரசியல், பொருளாதாரம், சமயம், பண்பாடு போன்றவற்றை மேலோட்டமாக அல்லாமல் வேரோட்டமாகப் பார்த்து தீர்வுகள் காணமுனைப்பு தந்தது.
  •  உடல் உழைப்பின் மேன்மை, அதில் கிடைத்த மனநிறைவு, பணத்தின் தேவை, தன்னிடம் உள்ளத்தைப் பிறரோடு பகிர்ந்து வாழும் நற்பண்பு போன்றவைகளை அனுபவிக்க முடிந்தது.
  •  மக்களின் எதிர் நோக்கை நிறைவேற்ற எங்கள் வார்த்தையாலும் வாழ்வாலும் சான்ற பகர நிலைப்பாடு எடுக்க முடிந்தது.
  •  எத்தகைய வாழ்க்கைச் சூழலிலும், வளமையிலும் வறுமையிலும் வாழும் அனுபவம் கிடைத்தது.
  •  சமூக வாழ்வின் பணியில் இன்றியமையாயைக் கற்க முடிந்தது.
  •  ஏழையாக, ஏழையின் மனநிலையில், எளிய உள்ளத்துடன் வாழ மக்கள் கற்றுத் தந்தார்கள்.
  •  இலக்க மக்களின் சாதனை வெறியை நாங்கள் காணும் போது, எங்களுக்கும் இலக்கு தேவை என்பதை உணர வைத்தது.
  •  உலகில் பலவிதமான பிரச்சனைகள் உள்ளன அவற்றை புரிந்துவாழ இந்த சமூக பகுப்பாய்வு எங்களை தூண்டியது.
  •  சகோதர்களின் அனுபவங்களை ஒருங்கிணைந்து இதில் கூறியுள்ளோம். பணிந்து போக மாட்டோம். எவருக்கும் பயந்து வாழமாட்டோம், தலித்து என்று சொல்வோம், எவருக்கும் தலைவணங்க மாட்டோம் என்ற எழுச்சி கீதத்தை விடுதலைப் பாணியில் மக்களை எழுப்பி உள்ளதை கண்டோம். இதுவே எங்கள் இறையிலையும் சிந்திக்க எங்கள் பணியை தூண்டி எங்களை இறை ஒளியில் அழைத்து சென்றது.
  •  இந்த பகிர்வுடன் முடிவு பெறுவது அல்ல உங்கள் பணி இதுதொடர வேண்டும் என்ற கருத்துடன் வழிநடத்துபவர் திரு.ஸ்டீபன் எங்களை தட்டிக்கொடுத்து இந்தக் கருத்து பகிர்வை முடித்து வைத்தார்


.சகோ.பிரான்சிஸ், நிக்கோலாஸ்



!நன்றி